வணக்கம், உபுண்டு தமிழ்க் குழுமம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வாயிலாக கட்டற்ற மென்பொருளை பரப்ப நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாய் திரட்டப்பட்ட சிறு நிதியினைக் கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான அறக்கட்டளையொன்றை கடந்த வருடம் 2009 டிசம்பர் பதினோறாம் தேதி அன்று "யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை"யை பதிவு செய்திருக்கிறோம். பதிவு செய்த நாளன்று தற்சமயம் NRCFOSS இல் பணியாற்றும் சுஜியும் மாலதியும் உடனிருந்தனர்.
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை தமிழகத்தில் தழைக்கச் செய்ய முன்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை மீண்டும் துளிர் விட்டால் அதனோடு இணைந்து பணியாற்ற விழைகிறோம். ஆயினும் இது இயல்பால் தமிழகத்தில் தோன்றிய ஓர் அறக்கட்டளைக்குரிய குணங்களோடு திகழும். யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையின் நோக்கங்களாவன: * பகிர்ந்தும் எப்பொருட்டும் பயன்படுத்தத் தக்கதாக, படைக்கப்படும் மென்பொருள்களைக் கிடைக்கச் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுதல். * அத்தகைய மென்பொருள்களின் உருவாக்கத்திற்கும் பயன்பாட்டுப் பெருக்கத்திற்குமான செயல்களில் ஈடுபடுதல். அறக்கட்டளையின் தலைவர் : திரு.ம. ஸ்ரீ ராமதாஸ், செயலாளர்: தங்மணி அருண், பொருளாளர்: பத்மநாதன் அறக்கட்டளையின் முதற்கட்ட பணிகளாக சில மென்பொருள்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. அறக்கட்டளையின் இணைய தளமாக http://yavarkkum.org திகழும். இன்னும் முழுமையாக உருப்பெறவில்லை. போன வருஷமே பதிஞ்ச தளம். ரூபி ஆன் ரெயில்ஸ் மூலம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மடலாடற் குழு போன்ற கட்டற்ற மென்பொருள் சமூகத்திற்கே உரிய விஷயங்களுக்கும் இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும். கடந்த காலங்களில் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் மூலமாக நாங்கள் மேற்கொண்ட பணிகளுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். உபுண்டு தமிழ்க் குழுமப் பணிகளுக்கு இவ் அறக்கட்டளை வருங்காலங்களில் பங்களிக்க கடமைப் பட்டுள்ளது. அதே போல் உபுண்டு தமிழ்க் குழமத்தின் பணிகளால் வருங்காலங்களில் ஏதேனும் நிதி திரட்டப்பட்டால் அவை இவ் அறக்கட்டளைக்கே போய்ச் சேருதல் நல்லது. விதிவிலக்கான காரணங்கள் எழலாம். இப்போதைக்கு இரண்டில் இருக்கும் அங்கத்தினரும் ஒன்றே. நாளை இப்படித்தான் தொடரும் என்று சொல்ல முடியாது. பார்க்கலாம்! உபுண்டு தமிழ்க் குழுமத்தோடு நின்றுவிடாது மற்ற கட்டற்ற மென்பொருள் சார்ந்த பணிகளுக்கும் இவ் அறக்கட்டளையின் பணி இப்பொழுதிலிருந்தே விரியும். உபுண்டு தமிழ்க் குழுமத்தின் ஊடாக தோன்றிய யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையின் செயல்களுக்காக நிதி பெற, பராமாரிக்க வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் வங்கிக்கணக்கு விவரம் பின்வருமாறு. வங்கி: யூனியன் பாங்க ஆப் இந்தியா பெயர்: யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை - Yavarkkumana Menporul Arakkatalai கிளை: குரோம்பேட்டை கணக்கு எண்: 527501010036435 IFSC Code: UBIN0552755 SWIFT Code: UBININBBOMD * நிதி மிகுந்தோர் காசுகள் தாரீர்! *அனுப்பிய விவரங்களை porulalar AT yavarkkum.org என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்.* * -- அன்புடன் அருண் || நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் || -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- உபுண்டு தமிழ் : http://ubuntu-tam.org தருமபுரி லினக்ஸ் பயனர் குழு : http://box434.bluehost.com/mailman/listinfo/thahadoorlug_yavarkkum.org உபுண்டு தமிழ் பயனர் குழு : http://list s.ubuntu.com/ubuntu-tam --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam