----------  Forwarded Message  ----------

Subject: [உபுண்டு_தமிழ்]கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பட்டறை - இலங்கை தென் 
கிழக்கு பல்கலைக் 
கழகம்
Date: Saturday 15 December 2007
From: "Abdul Haleem Sulaima Lebbe" 
To: [EMAIL PROTECTED]

*கணினி விஞ்ஞான சங்கம்
*

*இலங்கை தென் கிழக்கு பல்கலைக் கழகம் *

*பிரயோக விஞ்ஞான பீடம்*

*சம்மாந்துறை.*

*கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பட்டறை, டிசம்பர் 01, 02 - 2007*


அன்பான தமிழ் குழுமத்திற்கு வணக்கம்.

                       கடந்த 01,02 திசம்பர் 2007 ஆம் திகதிகளில் இலங்கை
தென்கிழக்கு பல்கலக்கழகத்தின் சம்மாந்துறையிலமைந்துள்ள (கல்முனயிலிருந்து 16 Km
) பிரயோக விஞ்ஞான பீடத்தில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப்பட்டறையை எமது
பல்கலைக்கழகத்தில் நடாத்தினோம். இதில் சுமார் 150 மாணவர்கள் எமது
பல்கலைக்கழகத்தின் நான்கு பீடம்களிலிருந்தும் பங்கு பற்றினர். ( பிரயோக விஞ்ஞான
பீடம், கலைப்பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், மற்றும் அறபிக் இஸ்லாமிய
கற்கைகளிற்கான பீடம் என்பனவாகும் ).

                      பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான சங்கத்தினது தலைவர் என்ற
வகையில் எனது முதல் செயற்பாடாக  இப்பிராந்தியத்தில் கட்டற்ற மென்பொருள்
அறிமுகத்தை ஏற்படுத்துவதுடன், அதிலும் குறிப்பாக தமிழ்
மென்பொருள்களாக்கத்திற்கான தொன்டர்களை படைத்து எமது பிரதேச பாடசாலைகளிலும்
மிகவும் விரிவான முறையில் திட்டம்களை அமுல்படுத்தும் குறிக்கோளுடன்
இப்பயிற்சிப்பட்டறையை திட்டமிட்டோம்.

                     இது தொடர்பாக எமது குழுமத்தின் ஆமாச்சுவிடம்
தொடர்புகொண்டதன் மூலம் அவரது பூரணமான வழிகாட்டலின் கீழ் இரணடு நாள் பட்டறையை
திட்டமிட்டோம். இதனைத்தொடர்ந்து எமது தமிழ் குழுமத்தின் இலங்கை அன்பர்களான
சேதுராமன் அண்ணா மற்றும் மயுரன் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பின் மூலம் இதற்கான
கருத்தாடலில் பலதடவைகள், சேதுராமன்  அன்னாவினது உதவியைப்பெற்றேன்.

இந்நிகழ்வு தொடர்பான ஆலோசனை வழிகாட்டல்கள் சம்பந்தமாக FOSS.LK இனது  வணக்.
மெத்தெவிகாரி ஹாமதுருவினது உதவியுடன் பூரனப்படுத்தினோம்.

மேலும், இந்நிகழ்வினது கருப்பொருளானது உண்மையில் எமது பகுதி மானவர்களிற்கு
மிகவும் புதுவிடயம், ஏனெனில் எமது பகுதியில் இனைய  வசதி மிக மிகக் குறைவு
என்பது முதல் காரணம்.

ஆனாலும் இதனை FOSS promotion Blast ஆக நடாத்தவேண்டுமென ஆமாச்சுவிடமும்
கருத்தாடலின் போது கேட்டிருந்தேன், இருந்தபோதிலும் உள்மனதில் சிறு
பயமொன்ரிருந்தது (ஏனெனில் எமது சங்கத்தின் எனது தலைமையிலானை முதல் நிகழ்வு
மட்டுமல்லாது இது மாணவர் அமைப்பு என்பதால் பல வகையான ஆயத்தம்களிலும்
வசதிகளிலும் சற்று கலக்கம் வந்திடுமோ என ) ஆனால், அது எமது ஆசிரியர்
குழுமத்தின் (ஆமாச்சு, மயுரன், மெத்தெவிகாரி, மற்றும் குஞ்ஞணா  ஆகியோரின்
லாவகமாண திறனால் எதிர்பார்த்ததிலும் பார்க்க வெற்றிகரமாக அமைந்திருந்தது.

அதன் வெற்றியானது உன்மையில் 100% என சொல்லலாம்.

இதனை வெற்றிகரமாக செயலாக்க உதவிய,

முதலில் கடல் கடந்து எமது அழைப்பை ஏற்று வருகை தந்த ஆமாச்சுக்கு எமது
சங்கத்தினது தலைவர் என்ற வகையில் சங்கத்தினது சார்பாக  மிகவும் நண்றியைத்
தெரிவிக்கிறேன். உமது தமிழை நாம் ரசித்தோம்.

மற்றும் எம் நாட்டு மயுரனது உழைப்பினை  எமது மானவர்கள் பப்பி லிணக்ஸ் இனை
மயுரன் லிணக்ஸ் என அழைக்குமளவிற்கு நன்ராக முதல் நாளிருந்தே உழைத்த
மயுரனுக்கும், எமது நிகழ்விற்கு வந்து எமது ஆசிரியர் குழுவிற்கு அதித
ஊக்கத்தையும் திறனையும் தலைமையும் வழங்கிய துறவி மெத்தவிகாரி அவர்களிற்கும்
மற்றும் குஞ்சனாவிற்கும் எமது அமைப்பின் சார்பாக மணமார்ந்த
நண்றியைத்தெரிவிக்கிறேன்.

மேலும் எமது நிகழ்வினை நடாத்திய குழுவின் சிறப்பொன்றைச்சொல்ல வேண்டும், அது
பிராமன தமிழன் ராமதாஸ், பௌத்த துறவி , மத நம்பிக்கையற்ற மயுரன், சிங்கள
குஞ்ஞனா, மற்றும் முஸ்லிம் நான். இதனைப்பலரும் பாராட்டினர்.

மேலும்  ராமதாஸின் இலங்கை வருகைக்கு ஏனைய இதர உதவிகளை செய்த  NRCFOSS, மற்றும்
அவரது இலங்கை உரவினருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

ஏனைய உதவிகள் புரிந்த எமது குழும அஙுகத்துக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் எமது
எதிர்கால நிகழ்வுகளிற்கு தாங்களது கணிவான ஒத்துளைப்பை தர வேண்டுமென
வேண்டியவனாக.

இதற்கு ஒத்துழைப்பை வழங்கிய குறிப்பாக எமது விஞ்ஞான பிரயோக விஞ்ஞான பீடத்தின்
பீடாதிபதிக்கும் ஏனையோருக்கும் அமைப்பின் சார்பாக நன்ரிகளை கூறி விடை
பெறுகிறேன்.

இவ்வண்ணம்,

எஸ.எல். அப்துல் ஹலீம்
தலைவர், கணினி விஞ்ஞான சங்கம்,
இலங்கை தென் கிழக்கு பல்கலைக் கழகம்.

 

Attachment: signature.asc
Description: This is a digitally signed message part.

-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க