வணக்கம்,

உபுண்டு கைப்பிடி தோழர்கள் திட்டம், இன்டிரிபிட் ஐபக்ஸ் வெளியீடு என
நாங்கள் செய்ய விழையும் பணிகளுக்கெல்லாம் தோள் கொடுத்து வரும்
அனைவருக்கும் மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். உபுண்டு
ஆசான் திட்டத்தின் துவக்கமும் ஏற்படவிருக்கிறது என்பதனையும்
மகிழச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

இவை கொடுக்கும் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் நாங்கள் அடுத்தக்
கல்வியாண்டை அடிப்படையாகக்கொண்டு 'உபுண்டு கலைமகள் திட்டத்தை'
அறிவிப்பதில் மகிழச்சி அடைகிறோம். இத்திட்டத்தின் படி தங்கள் கல்விக்
கூடங்களில் (பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள்...) கட்டற்ற மென்பொருன்களை
பாடமாக வைக்க விரும்புவோர் எங்களை அணுகலாம். ஏற்கனவே இத்தகைய பணிகளில்
ஈடுபட்டுள்ளோருடனும் தோள் கொடுக்க விருப்பமே.

ஆசிரியர்களுக்கு பயிற்சி, கட்டற்ற கணினி ஆய்வுக் கூடம் அமைப்பதில் உதவி,
பாடப்புத்தகங்கள் இயற்றுதல் என இதன் தேவைகள் விரிகின்றன. இத்திட்டமும்
பரஸ்பர ஆதாயத்தினை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் வழி
பள்ளிக் கூடங்களாக இருப்பின் அக மகிழச்சியுடன் மேற்கொள்ள
காத்திருக்கிறோம். மென் விடுதலையோடு தொடர்புள்ளமையால் ஆங்கில வழி
பள்ளிகளானாலும் சரி.

உங்கள் பள்ளி, கல்விச் சாலைகளுக்கு கட்டற்ற மென்பொருளை எடுத்துக் கொண்டு
வர நாங்க தயார்! நீங்க?

-- 

ஆமாச்சு
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க