http://www.kaniyam.com/release-22/

வணக்கம்.

'கணியம்' இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற விக்கிபீடியாவின் பத்தாண்டு நிகழ்வுகள்
பெரும் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் விக்கி
அறிமுகப்பயிற்சிப் பட்டறைகள் நடந்து வருகின்றன. 100க்கும் மேற்பட்ட புது
விக்கிபீடியர்கள் உருவாகி உள்ளனர். உங்கள் ஊரிலும் விக்கி பயிற்சிப்
பட்டறை நடத்த எங்களை தொடர்பு கொள்ளவும்.



தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக மயூரநாதன், சுந்தர், இரவி, செல்வா ஆகிய
நால்வரும், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் பேராசிரியர் ப. அர.
நக்கீரன் அவர்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் வா.
செ. குழந்தைசாமி அவர்களை நேரில் சந்தித்து, தமிழ் வளர்ச்சிக் கழகம்
1954-இல் தொடங்கி, 1968 வரை வெளியிட்டுள்ள கலைக்களஞ்சியம் 10
தொகுதிகளையும், 1968-இல் தொடங்கி 1976-இல் நிறைவு பெற்ற குழந்தைகள்
கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் உலகப் பயன்பாட்டிற்காக கிரியேட்டிவ்
காமன்சு பகிர்வுரிமத்தின் கீழ் மாற்றித்தந்தால் தமிழ் விக்கிப்பீடியாவின்
உறவுத்திட்டங்களில் வெளியிடலாம், பிறகு அவற்றை நாம் பல திட்டங்களில்
தக்கவாறு பயன்கொள்ளலாம் என எடுத்துக்கூறி வேண்டினர். அதன் பயனாய்
இப்பொழுது அக்டோபர் 23, 2013 அன்று நடந்த தமிழ் வளர்ச்சிக் கழகப்
பொதுக்கூட்டத்தில் வேண்டுகோளை ஏற்று ஒப்புதல் தந்துள்ளார்கள். நம்
நெஞ்சார்ந்த நன்றியை பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி அவர்களுக்கும்,
தமிழ் வளர்ச்சிக்கழக பொறுப்பாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். தக்க
முயற்சிகள் எடுத்து விக்கிமூலத்தில் ஏற்ற முற்படுவோம். திட்டப் பக்கம்.
https://ta.wikipedia.org/s/3drc


கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து
கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக
ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும்
http://www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே
உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிட வேண்டும்.

நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் edi...@kaniyam.com


-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க