அருமை. நன்றி
On Wed, Jan 15, 2020, 23:13 ம. ஶ்ரீ ராமதாஸ் <ama...@ubuntu.com> wrote: > வணக்கம், > > உபுண்டு வின் நீண்ட கால ஆதரவு வெளியீடுகளின் அடிப்படையிலான தொடர்பயிற்சி > அளிக்கும் ஒரு முயற்சியில் எமது ஒரு தொழிற் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக > உபுண்டு தமிழ் குழுமத்தாரோடு வழங்க விழைகிறேன். > > தற்போதைய நீண்ட கால ஆதரவு வெளியீடு 18.04 தனை தொடரந்து 20.04 வரும் > ஏப்ரலில் வர இருக்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட இதுவரை உபுண்டு > அறிமுகமாகாத பயனர்களுக்காக இந்த ஒரு நாள் பயிற்சி மாதந்தோறும் தொடர்ந்து > நான்காவது சனிக்கிழமைகளில் நடைபெறும். உபுண்டு அறிமுகம் வேண்டி, உபுண்டுவை > பயன்படுத்த விழைவோருக்கு தொடர்ந்து அதனை அறிமுகப்படுத்துவது மட்டுமே இதன் > நோக்கம். > > இதில் ஒவ்வொரு மாதமும் அதிகப்பட்சம் இருபது பேர் வரை கலந்து கொண்டு > அவர்களுக்கு நேரடியான செய்முறை பயிற்சியோடு கூடிய விளக்கம் உபுண்டுவை > பயன்படுத்துவதில் அளிக்கப்படும். ஒரு நாள் பயிற்சிக்கு ரூ 500/- வரை கலந்து > கொள்ளும் நபர் பயிற்சி வசதிகள் ஏற்பாடுகளுக்காக செலுத்த வேண்டும் என்பது > எதிர்பார்ப்பு. ஒரு நிறுவனமே கூட ஒரு மாத நிகழ்வை அதன் உறுப்பினர்களுக்காக > / அது பரிந்துரைக்கும் பயனர்களுக்காகவும் எடுத்துக் கொள்ளலாம். > > இந்நிகழ்வில் விளக்கப்படும் விசயங்கள் தொடர்பான ஆவணங்கள், வீடியோ > டுடோரியல்கள் தனியாக அனைவருக்கும் கிடைக்கும்படி யூடியூப் தளம் வாயிலாகவும் > விக்கி பக்கங்கள் வாயிலாகவும் தரப்படும். நேரடியாக பயிற்சி பற வேண்டும் > என்று தேவைப்படுவோர் மட்டும் இந்த ஒரு நாள் தொடர் அறிமுக நிகழ்வை > பயன்படுத்திக் கொள்ளலாம். இடையே வரும் உபுண்டு வெளியீடுகள் (20.10, 21.04, > 21.10, 22.04, 22.10, 23.04, 23.10) கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. > > முன்னரே பதிவு செய்யும் விதமாக குறைந்தது ஐந்து பெயராவது பதிந்தால் மட்டுமே > அம்மாதத்திற்கான இந்நிகழ்வு நடத்தலாம் என்று யோசனை. நிகழ்வு எங்கள் நிறுவன > வளாகத்தில் நடைபெறும். > > நான்கு வாரங்களுக்கு முன்னதாக அடுத்த நிகழ்வுக்கான இணைய விண்ணப்ப படிவம் > திறக்கப்பட்டு நிகழ்வின் மூன்று நாட்கள் முன்னதாக வரை திறக்கப்பட்டு > இருக்கும். நிகழ்விற்கு முன்னதாக குறைந்தபட்ச நபர்கள் பதியாவிட்டால் அம்மாத > நிகழ்வு அடுத்த மாதத்திற்கு தள்ளிவைக்கப்படும். நிகழ்விற்கு பதிவதற்கான > விண்ணப்பிப்பதற்கான இணைப்பையும் ஒருங்கிணைப்பவர் தொடர்பு எண் முகவரி ஒரு > நாள் நிகழ்வில் சொல்லித் தரப்படும் விசயங்ககளின் விவரம் ஆகியவற்றையும் > அடுத்த இமெயில் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். > > நன்றி. > > -- > ம. ஶ்ரீ ராமதாஸ் > > > -- > Ubuntu-tam mailing list > Ubuntu-tam@lists.ubuntu.com > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam >
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam