பயிற்றுனரை பயிற்றுவிப்போம் 2019

*பயிற்றுனரை பயிற்றுவிப்போம்* என்பது ஒரு உறைவிட பயிற்சி நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சி இந்திய விக்கி பங்களிப்பாளர்களின் தலைமைப் பண்புகளை வளர்க்க
முயற்சிக்கும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி ஏற்கனவே 2013, 2015, 2016, 2017
மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது.

*இப்பயிற்சி வகுப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்?*

   **இந்திய மொழிகளில்* (ஆங்கிலம் உட்பட) முனைப்புடன் பங்களிப்பவர் அனைவரும்
   விண்ணப்பிக்கலாம். (குறிப்பு:*இந்திய மொழிகளில்* என்று குறிப்பிட்டுள்ளதால்
   தமிழ் மொழியில் பங்களிப்பு செய்யும் *இலங்கை, சிங்கபூர், மலேசியா,
   இந்தோனேசியா, தாய்லாந்து* முதலிய அண்டை நாடுகளில் பங்களிப்பு செய்பவர்கள்
   கூட விண்ணப்பிக்கலாம். வரவுசெலவு திட்டத்தை கணக்கில் கொண்டு
   தேர்ந்தெடுக்கப்படலாம். இது போன்ற முந்தய நிகழ்ச்சிகளில் (எடுத்துக்காட்டு
   2017, 2018
   
<https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Train_the_Trainer_Program/2018#Participants>
வங்காளத்திலிருந்து
   விண்ணப்பித்தவர்கள் தேர்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்றனர்.)

   * கட்டுரை பெயர்வெளியில் (அதாவது முதன்மை பெயர்வெளியில்) 31 மார்ச் 2019
   வரை 600 தொகுப்புகள் செய்திருக்க வேண்டும். (குறிப்பு:இவ்வெண்ணிக்கையை
   தெரிந்துகொள்ள  இங்கு
   <https://xtools.wmflabs.org/ec/ta.wikipedia.org?uselang=ta> சென்று
   உங்கள் பயனர் பெயரை உள்ளீடு செய்து இதுவரை நீங்கள் செய்து தொகுப்புகளின்
   எண்ணிக்கை தெரிந்து கொள்ளலாம். அங்கு "Namespace Totals" என்னும் தலைப்பின்
   கீழ் கட்டுரை பெயர் வெளியில் எத்தனை தொகுப்புகள் செய்துள்ளீர்கள் என்று
   தெரிந்து கொள்ளலாம். 600 கட்டுரை பெயர்வெளி தொகுப்பு என்பது அனைத்து
   மொழிகளைகளையும் சேர்த்துதான்).

   * நேரடி/இணைய வழி பயிற்சிகளை வழங்க ஊக்கம் கொண்டுள்ளவர்கள்

   * இதுவரை இதற்கு முன் நடந்த 'பயிற்றுனரை பயிற்றுவிப்போம்' நிகழ்ச்சியில்
   கலந்துகொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

இந்நிகழ்ச்சியைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள *இங்கு பார்க்கவும்
<https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Train_the_Trainer_Program/2018#Participants>*
.

:இப்பயிற்சி வகுப்பை பற்றியோ, விண்ணப்பிப்பதற்கு ஏதேனும் சிரமம் இருந்தால்
கேளுக்கள். உதவி செய்யலாம். இந்நிகழ்ச்சிக்கு ஆங்கில புலமை அவசியமில்லை.
ஆங்கில விண்ணப்ப படிவம் கடினமாக இருந்தால் தொடர்பு கொள்ளவும். உதவி செய்ய
காத்திருக்கிறேன்.

நன்றி,

ஜெ. பாலாஜி <https://ta.wikipedia.org/s/ur3> .
_______________________________________________
Wikita-l mailing list
Wikita-l@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l

அவர்களுக்கு பதிலளிக்க