Itz not Kosmic Music..
Already, there is a recording studio cum audio company in Chennai named
Kosmic Music..
So, KM must be something different..

2008/3/25 Gomzy <[EMAIL PROTECTED]>:

>   Thanks Vithur. And some fella said KM stood for Kosmic music ! :D
>
> 2008/3/25 Vithur <[EMAIL PROTECTED]>:
>
> >   ஏ.ஆர்.ரஹ்மான் இனி வாத்தியார்! சர்வதேச ஆசிரியர்களை வைத்து இந்தியாவில்,
> > குறிப்பாக தமிழகத்தில் இசைக் கல்லூரி ஒன்று துவங்க வேண்டும் என்பது இசைப்
> > புயலின் நீண்ட காலக் கனவு! இப்போது அந்தக் கனவை நனவாக்கி இருக்கிறார் ரஹ்மான்.
> > அவர் துவக்கும் இசைக் கல்லூரியின் பெயர் 'கே.எம். மியூஸிக் கன்சர்வேட்டரி'.
> >
> > A.R. Rahman would be a teacher from now on. With the help of teachers,
> > it has been the long cherished dream of Isaipuyal ( Music Storm ) to start a
> > music college in Tamil NAdu. That dream has become a reality for Rahman. The
> > name of the Music college is " K.M. Music Conservatory".
> >
> >
> >
> >
> > இதற்காக லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்த அறிவிப்பு விழாவில் கறுப்பு கோட்,
> > சூட்டில் மலர்ச்சியாக வந்து அமர்ந்தார் ரஹ்மான். அவரின் ஹிந்துஸ்தானி இசைக்
> > குருவான குலாம் முஸ்தபா சாகிப்தான் சீஃப் கெஸ்ட்! அமெரிக்கா, லண்டன் என பல
> > நாடுகளைச் சேர்ந்த இசைப் பள்ளி ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். குரல், பியானோ,
> > கம்போஸிங் என மியூஸிக்கின் எக்ஸ்பர்ட்களான இவர்கள்தான் இந்த கல்லூரியின்
> > ஆசிரியர்கள். இவர்கள் தவிர குலாம் முஸ்தபா, எல்.சுப்பிரமணியம், ஸ்ரீனிவாஸ்
> > கிருஷ்ணா என இந்திய இசைக் கலைஞர்களும் இந்தக் கல்லூரியின் ஸ்பெஷல் லெக்சரர்கள்.
> >
> > For this sake, Rahman wore a black coat and suit and came with full
> > smiles for a function at Lady Andal school. His Hindustani Guru Ghulam
> > Mustapha Saheb was the Chief Guest. There were a lot of Music School
> > teachers from US & UK. These scholars are experts in voice, Piano,
> > composing, and they are going to be the lecturers in this college. Apart
> > from them, Ghulam Mustapha, L. Subramaniam, srinivas krishna would be
> > special lecturers in the college .
> >
> >
> > இந்த இசைப் பள்ளியின் மேனேஜிங் டைரக்டரான செல்வகுமாரிடம் பேசினோம்.
> > ''ரஹ்மானுக்கு இசைக் கருவிகள் மேல் அலாதியான ஈடுபாடு உண்டு. அவை எல்லாவற்றையும்
> > கற்று முடித்த பின்தான் கீபோர்டு கற்றுக்கொண்டார். இசைக் கருவிகள் பற்றிய அடிப்
> > படை தெரிந்ததால், அவரால் சுலபமாக கீபோர்டிலேயே வெவ்வேறு இசையைக் கொண்டு வர
> > முடிகிறது. ஆனால், இப்போது இசை படிக்கும் மாணவர்கள் கீபோர்டு மட்டும்தான்
> > கற்றுக்கொள் கிறார்கள். அதில், எந்த அடிப் படை இசையும் தெரியாமல் பிற இசைக்
> > கருவிகளின் இசையை உருவாக்குகிறார்கள்.
> >
> >
> > The Managing Director of this Music school is selvakumar. He said ,"
> > Rahman has lot of interest over musical instruments. After learning all
> > music instruments, he learnt the keyboard. As he knows the basic of all
> > instruments, he was able to easily get different tones in the keyboard. But
> > nowadays, music students are learning only the keyboard. They do not know
> > any basic forms of music, and are attempting to get some sounds in th
> > keyboard.
> >
> >
> >
> > இந்தப் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக இசைக் கருவிகளையும், அதன் நுணுக்கமான
> > இசையையும் காலி செய்வது மட்டுமின்றி, நமது பாரம்பரிய இசைக் கருவிகளைக்கூட
> > அழித்து விடும் என்ற கவலை ரஹ்மானுக்கு உண்டு. வெளிநாடுகளில் இந்த மாதிரி
> > பாரம்பரிய இசைக் கருவிகளைப் பாதுகாக்கவும், கற்றுக் கொடுக்கவும் இசைக்
> > காப்பகங்கள் உண்டு. அப்படி ஒரு காப்பகம் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிக்
> > கொண்டே இருப்பார். அதே போல வெஸ்டர்ன் கிளாஸிக்கல் இசையை முழுமையாகக் கற்றுக்
> > கொடுக்க ஆசிரியர்கள் இல்லை என்பதையும் சொல்லுவார். இந்த இரண்டையும் சேர்ந்து
> > ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்பது ரஹ்மானின் பத்து வருடக் கனவு. நான்
> > சவுண்ட் டிசைனிங் மற்றும் மியூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட் டெக்னாலஜி கற்றுக்
> > கொடுக்கும் கம்பெனியை நடத்திக்கொண்டு இருக்கிறேன். எனக்கும் ரஹ்மானுக்கும் 20
> > வருட நட்பு உண்டு. ஆறு மாதத்துக்கு முன், 'நாம் இருவரும் இணைந்து இசைப் பள்ளி
> > ஆரம்பிப்போமா?' என்று கேட்டார். அப்படி ஆரம் பித்ததுதான் இந்த கே.எம். இசைக்
> > காப்பகம்.
> >
> > This trend of knowing little about other musical instruments will spoil
> > the miniscule aspects of real music, and this is the main worry of Rahman.
> > In foreign countries, there are music schools, which safeguard the
> > traditional music instruments, and teach the nuances of these instruments.
> > He used to tell that such a school needs to be opened here in India. At the
> > same time, he used to tell that there are not many teachers to teach Western
> > Classical Music. It has been Rahman's dream to safeguard both of these
> > interests for the past 10 years. I have been running a Sound designing cum
> > Music Instrument Technology Company, and my friendship with Rahman has been
> > for the past 20 years. Six months back, he asked me if we could start a
> > music college together. In that way, started the K.M. Music
> > Conservatory.
> >
> >
> >
> >
> >
> >
> > வருகிற ஜூன் மாதம் துவங்கும் இந்தக் காப்பகத்தில் மொத்தம் 150 மாணவர்களைச்
> > சேர்க்க இருக்கிறோம். இந்தக் கல்லூரியின் பிரின்ஸிபால் ரஹ்மான்தான். வசதிக்
> > குறை வான, திறமையான 50 மாணவர்களுக்கு ரஹ்மான் தன் ஃபவுண்டேஷன் மூலம் கட்டணம்
> > கட்ட முடிவு செய் திருக்கிறார். இதற்காக அவர் இந்த ஆண்டிலிருந்து வெளிநாடு
> > களில் கூடுதல் இசை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்'' என்றார்
> > செல்வகுமார்.
> >
> >
> > Coming June, we are planning to recruit 150 students. The Principal of
> > the college is Rahman. Among the 150 students, 50 students who are very well
> > talented, and who are not that well off will be provided with scholarships
> > from Rahman Foundation, and this has been decided by Rahman . For this
> > purpose, he has decided to do a lot of concerts outside India.
> >
> >
> >
> > கல்லூரியின் பெயரில் இருக்கும் கே.எம். என்கிற இரண்டு எழுத்துக்களும் யாரை
> > அல்லது எதைக் குறிக்கின்றன என்பதுதான் விழாவில் பலரின் கேள்வியாக இருந்தது.
> >
> > ''கே.எம். என்பது எதைக் குறிக்கிறது?'' என்று ரஹ்மானையே கேட்டார் ஒரு
> > நிருபர். ''அவை புனிதம் சார்ந்த எழுத்துக்கள்'' என்று மட்டும் ஒரு புன்னகையோடு
> > சொல்லிவிட்டு, அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டார் ரஹ்மான்.
> >
> >
> > The doubt about what stood for K.M was lingering on the minds of the
> > crowd who had come over there. One person asked Rahman as to what K.Mstood 
> > for ?. Rahman smilingly replied that it was something sacred, and
> > jumped to the next question.
> >
> > ரஹ்மான் என்றாலே ரகசியம்தான் போல!
> > Rahman means secrecy always !
> >
> >
> > regards,
> > Vithur
> >
> > Whatever God wants to give, no one can deny; Whatever God wants to deny,
> > no one can give. Be happy always
> >
>
>  
>



-- 
Regards,
V SRINIVASA KRISHNAN
http://www.orkut.com/Profile.aspx?uid=9379675792624853086

Reply via email to