Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 Thread கா. சேது | K. Sethu
2008/11/3 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>:
> சேது,
>
> தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன்.
> இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது.
>

வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus
போன்ற m17n க்கு மாற்று IME க்களை) ஆரம்பித்தலுக்கு (75custom_init-scim
க்கு மாற்றாக) IM-SWITCH கட்டமைப்பு பயன்பாடு பற்றியும் இம்முறை விரைவில்
தமிழ் பயனர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். மேலும் நாம்
விரும்பும் எழுதுருவத்தின் எழுத்துருவங்களைத்தான் முன்னிருப்பு
இயல்பாக்குவதற்கான நான் முன்வைக்கவுள்ள மாற்றத்தை அடுத்த ஒரு சில
நாட்களாவது பல வித திரைகளில் (CRT, small LCD) சோதனைக்குள்ளாக்கப்பட்டு
எச்சூழலிலாவது பிரச்சினைகள் ஏற்படின் அவற்றையும் தீர்க்க இயலுமா
என்பதையும் பார்த்த பின் இறுதி தபுண்டுவிற்கு உள்ளடக்குவது நன்று.

தாங்கள் ஓரிரு வாரங்கள் பின் இறுதியாகினால் இலகுவாகலாம்.  அல்லது தபுண்டு
சோதனை வெளியீடாக முதலில் வெளியிடின் அதற்கு மேம்பாடு திருத்தங்களாக சில
காலம் மாற்றங்களை ஏற்றி  இறுதியாக்கலாம்.

>
> // ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல்
> இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு
> மாறுகின்றன//
>
> இதனை நானும் அவதானித்தேன்.
>
> Hinting=Slight தபுண்டுவால் மாற்றப்பட வேண்டிய நிலை மற்றைய எழுத்துருக்கள்
> காரணமாக ஏற்படுகிறது.
>
> உண்மையில் நாம் பாவிக்கும் கணித்திரைக்கு ஏற்ப நான்கு விதமான combinations
> இதில் உண்டு.
>
> இந்த நான்கையும் உடனுக்குடன் சோதித்து எமது கணித்திரைக்கேற்ற hinting ,
> smoothing போன்றவற்றை அமைத்துக்கொள்வதற்கான நிரல் இம்முறை தபுண்டுவில்
> இணைக்கப்படுகிறது.
>
> (அந்நிரல் துண்டை மட்டும் தனித்தியங்கும்வண்ணம் மாற்றியமைத்து இத்தோடு
> இணைக்கிறேன். )
>

சோதித்து பார்த்து கருத்தேற்றங்கள் இருப்பின் எழுதுவேன்.

> //லோகித் தமிழ் மற்றும் TSCu எழுத்துருக்களை அகற்றாமல்
> sans/serif/monospace எழுத்துருக்களுக்கு சூரியன்டாட்காமை
> விருப்பத்தேர்வாக்கத் (preferred) தேவையான தொடர்பை (sym link) ஆக்கி
> மேலும் Hinting=Slight என்பதையும் பாவித்து அமைத்தபின்//
>
> முன்பு இந்த படரல் பிரச்சினைக்கு எளிய தீர்வாக ttf-indic-fonts-core பொதியை
> அகற்றிவிட்டு பயன்படுத்தினேன். ஆனால் குறிப்பாக இந்தப்பிரச்சினை லோகித் தமிழ்
> இனால் தான் ஏற்படுகிறது.
>

ஆம். ttf-indic-fonts-core பொதி தான் lohit_ta.ttf ஐ
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core அடைவினுள் நிறுவுகிறது.
அவ்வடைவினுள் ஏனைய பல இந்திய மொழிகளுக்கான எழுதுருக்களும் உள்ளன.
lohit_ta.ttf வினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க முழுப்பொதியையும்
அகற்ற வேண்டியதில்லை. ஆனால் அவ் வேற்று மொழிகளில் ஏதாவதிற்கும் இவ்வாறு
பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளனவா அப்படியாயின் அவற்றிற்கு உபுண்டு
மேலிடத்தில் வழுதாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறியின் நாம்
மாற்றுத் தீர்வுகளுடன் வழுத்தாக்கல் செய்கையில்  உசாத்துணையாக மேற்கோள்
காட்ட உதவலாம்.


> மேலே சொன்னபடியான sym link உருவாக்கப்பட்டால் லோகித் தமிழ் இனை அகற்ற
> வேண்டியதில்லையா?
>

ஆம். வேண்டியதில்லை. அது மட்டுமல்ல நான் எழுதிய 4 வது வழுவை ஏற்படுத்தும்
சகல TSCu எழுத்துருக்களையும் அகற்ற வேண்டியதில்லை. ஏனெனில் நாம் செய்யும்
மாற்றம் ஆனது மிகவும் பொதுவான முன்னிருப்பு எழுத்துருக்களான sans, serif
மற்றும் monospace ஆகியன தமிழிற்கான எழுத்துருவங்களை (glyphs)
சூரியன்டாட்காம் எழுத்துருவிலிருந்து எடுத்துக்கொள்ளும்படியான
கட்டுப்பாடே. மேலும் அம்முறைமை வழி வேறு எந்த ஒருங்குறிக்கான அல்லது
ஒருங்குறி எழுத்துருவங்களை உள்ளடக்கிய எழுத்துருவை முன்னிலைப்படுத்த
பயனரால் இயலும் ஆகும்.  உமரின் கட்டற்ற தென்றல் கூட பொருத்தமானதுதான்.
ஆனால் அதில் சில எழுத்துக்கள் (ஓ மற்றும் ஆங்கில p) திருத்தப்பட
வேண்டியுள்ளதை முன்னர் நான் சுட்டிக்காடியிருந்தேன். எழுத்துரு
ஆக்கத்தில் வல்லுமை உள்ள ஆர்வலர்கள் அதில் ஈடுபட வேண்டும் என்பது என்
வேண்டுகோள்.

உண்மையில்  sans, serif  போலல்லாது monospace க்குத் தேவை Fixed Width
Font. நான் அறிந்ததில் உமரின் TheneeUniTx மட்டுமே தமிழிற்கான அத்தகைய
ஒரே கட்டற்ற மென்பொருள். ஆனால் அதை  monospace க்கு
முன்னிலைப்படுத்திப்பார்க்கையில் கட்டம் கட்டமாகத்தான் தோன்றுகிறது.
சூரியன்டாட்காம் பயன்படுத்துகையில் எனது 19' LCD (திரை நுணுக்கம் :1440 x
900) திரையில் பிரச்சினைகள் இல்லை. ஆனால் CRT மற்றும் குறைந்த திரை
நுணுக்கம்  உள்ள திரைகளில் அகலமாகி பயன்பாட்டுக்குத் தடங்கலாக இருக்குமோ
என்ற சந்தேகம் உள்ளதாலேயே சோதித்து பார்க்க வேண்டுமென்கிறேன்.


> அப்படியானால் தபுண்டுவைக்கொண்டு மேற்கண்ட symlink உருவாக்கத்தினை செய்யலாமா?
>
ஆம்.  வெவ்வேறு அமைப்புக்களை கொண்ட பல xml வகைத் தரவுக் கோப்புக்களை
/etc/fonts/conf.avail அடைவில் இல் வைத்துவிட்டால் அவற்றில் விருப்பை
நிறைவேற்றும் தொடுப்பை /etc/fonts/conf.d அடைவில்  பயனர் "ln  -s" கட்டளை
வழி செய்யலாம். அதை விட இலகுவாக்க வேண்டுமாயின் டெபியனின் alternatives
கட்டமைப்பை பாவிப்பின் அதன் update-alternatives கட்டளையைக் கொண்டு
முனையத் திரையில் menu வழியாக  தேர்வு செய்யும்படியாகவும் அமைக்க
முடியும். (im-switch உம்  alternatives அடிப்படையில் ஆக்கப்பட்டதுதான்).
வரைகலை முறைமைகள் அமைப்பது பற்றி நான் கற்றிருக்கவில்லை.

> //
> வலைப்பதிவிற்கு பின்னர் கொணரலாம். நான் செய்யாவிடில் நண்பர்
> மயூரன்அதைச்செய்து உதவி விடுவார் :>)//
>
> அடுத்த வேலை அதுதான் ;-)
>

அவசரமில்லை ;)

இன்னுமொரு முக்கிய விடயம். சூரியன்டாட்காம் எழுத்துருவை கட்டற்றதாக
ஆக்கும் திட்டம் எந்நிலையில் உள்ளது. கூடிய விரைவில் ஆக்கப்படின்
நன்றாகும்.
>
> -மு.மயூரன்
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 Thread ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/3 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>

>
> வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus
> போன்ற m17n க்கு மாற்று IME க்களை) ஆரம்பித்தலுக்கு (75custom_init-scim
> க்கு மாற்றாக) IM-SWITCH கட்டமைப்பு பயன்பாடு பற்றியும் இம்முறை விரைவில்
> தமிழ் பயனர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.



ஆம். இதனை நானும் சில நாட்களுக்கு முன்னர் கவனித்தேன்.

--
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 Thread ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/3 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>

>
> Hinting=Slight தபுண்டுவால் மாற்றப்பட வேண்டிய நிலை மற்றைய எழுத்துருக்கள்
> காரணமாக ஏற்படுகிறது.
>
> உண்மையில் நாம் பாவிக்கும் கணித்திரைக்கு ஏற்ப நான்கு விதமான combinations
> இதில் உண்டு.
>
> இந்த நான்கையும் உடனுக்குடன் சோதித்து எமது கணித்திரைக்கேற்ற hinting ,
> smoothing போன்றவற்றை அமைத்துக்கொள்வதற்கான நிரல் இம்முறை தபுண்டுவில்
> இணைக்கப்படுகிறது.
>
>
மயூரன்,

System --> Preferences --> Appearance --> Subpixel Smoothing செய்தால் நிகழ்
வட்டு மற்றும் நிறுவிய பின்னரும் துல்லியம் கிடைக்கிறதே.

மேலும் indic-core-fonts நீக்கி விட்டால் சிக்கல் தீர்ந்து விடுகிறது.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 Thread ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>

>
> மயூரன்,
>
> System --> Preferences --> Appearance --> Subpixel Smoothing செய்தால் நிகழ்
> வட்டு மற்றும் நிறுவிய பின்னரும் துல்லியம் கிடைக்கிறதே.
>
> மேலும் indic-core-fonts நீக்கி விட்டால் சிக்கல் தீர்ந்து விடுகிறது.
>
>

இதைத் தவிர வேறு செய்ய வேண்டியிருக்கிறதா? நான் பயன்படுத்தும் கணினியில்
இவையிரண்டையும் செய்தால் சிக்கல் தீர்கிறது.


-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 Thread M.Mauran | மு.ம யூரன்
சேது,

தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன்.
இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது.


// ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல்
இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு
மாறுகின்றன//

இதனை நானும் அவதானித்தேன்.

Hinting=Slight தபுண்டுவால் மாற்றப்பட வேண்டிய நிலை மற்றைய எழுத்துருக்கள்
காரணமாக ஏற்படுகிறது.

உண்மையில் நாம் பாவிக்கும் கணித்திரைக்கு ஏற்ப நான்கு விதமான combinations
இதில் உண்டு.

இந்த நான்கையும் உடனுக்குடன் சோதித்து எமது கணித்திரைக்கேற்ற hinting ,
smoothing போன்றவற்றை அமைத்துக்கொள்வதற்கான நிரல் இம்முறை தபுண்டுவில்
இணைக்கப்படுகிறது.

(அந்நிரல் துண்டை மட்டும் தனித்தியங்கும்வண்ணம் மாற்றியமைத்து இத்தோடு
இணைக்கிறேன். )

//லோகித் தமிழ் மற்றும் TSCu எழுத்துருக்களை அகற்றாமல்
sans/serif/monospace எழுத்துருக்களுக்கு சூரியன்டாட்காமை
விருப்பத்தேர்வாக்கத் (preferred) தேவையான தொடர்பை (sym link) ஆக்கி
மேலும் Hinting=Slight என்பதையும் பாவித்து அமைத்தபின்//

முன்பு இந்த படரல் பிரச்சினைக்கு எளிய தீர்வாக ttf-indic-fonts-core பொதியை
அகற்றிவிட்டு பயன்படுத்தினேன். ஆனால் குறிப்பாக இந்தப்பிரச்சினை லோகித் தமிழ்
இனால் தான் ஏற்படுகிறது.

மேலே சொன்னபடியான sym link உருவாக்கப்பட்டால் லோகித் தமிழ் இனை அகற்ற
வேண்டியதில்லையா?

அப்படியானால் தபுண்டுவைக்கொண்டு மேற்கண்ட symlink உருவாக்கத்தினை செய்யலாமா?

//
வலைப்பதிவிற்கு பின்னர் கொணரலாம். நான் செய்யாவிடில் நண்பர்
மயூரன்அதைச்செய்து உதவி விடுவார் :>)//

அடுத்த வேலை அதுதான் ;-)


-மு.மயூரன்


hinting.sh
Description: Bourne shell script
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 Thread M.Mauran | மு.ம யூரன்
antialiasing, hinting இரண்டிலும் slight, medium ஆகிய இரு தெரிவுகள் உண்டு
மொத்தம் நான்கு combination கள்.
பெரும்பாலும் இரண்டே போதுமானது.

-மு.மயூரன்

2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>

> 2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>
>
>>
>> மயூரன்,
>>
>> System --> Preferences --> Appearance --> Subpixel Smoothing செய்தால்
>> நிகழ் வட்டு மற்றும் நிறுவிய பின்னரும் துல்லியம் கிடைக்கிறதே.
>>
>> மேலும் indic-core-fonts நீக்கி விட்டால் சிக்கல் தீர்ந்து விடுகிறது.
>>
>>
>
> இதைத் தவிர வேறு செய்ய வேண்டியிருக்கிறதா? நான் பயன்படுத்தும் கணினியில்
> இவையிரண்டையும் செய்தால் சிக்கல் தீர்கிறது.
>
>
> --
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-04 Thread கா. சேது | K. Sethu
முதல் மடலில் நான் சுட்டிக்காட்டிய 4 வது மடல் பற்றி இவ்வாறு
குறிப்பிட்டுருந்தேன்.

//வழு 4 ஆனது TSCu எழுதுருக்களின் ஆதிக்கத்தினால் கூகிள் அஞ்சல் இடைமுகப்பு
மற்றும்  பலகணியில் (task bar) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயல்
நிரல்களைக் காட்டும் கீற்றுகளிலும்,  ஆஸ்கியின் மேல் (128-255) அரங்கில்
உள்ள குறியீடுகள் (- அம்புக்குறிகள், elipses) அவற்றிற்கான குறியேற்ற
இடங்களில் பொருத்தப்பட்ட தஸ்கி எழுத்துருவங்களைக் காண்பித்தல். (இதன்
திரைக்காட்சியை அடுத்த மடலில் இடுவேன்) . எல்லா  TSCu எழுத்துக்களயும்
அகற்றினல் இவ்வழு ஏற்படுவதில்லை.//

அவ்வழு தமிழ் மொழியிடச்சூழலில் பயர்பாக்சில் மட்டும் ஏற்படுகிறது.  மேலும் பல
செயலிகளை இயக்குகையில்  கீழே பலகத்திnf அவற்றின் தத்தல்களிலும் தோன்றுகிறது.

தமிழ் மொழியிடச்சூழலில்  இவ்வழுவைக் காட்டும் ஒரு திரைக்காட்சி :
http://i35.tinypic.com/2jbmm91.jpg . பயார்பாக்சை மட்டும் ஆங்கில
மொழியிடச்சூழலில் இயக்கும் போது தெரிவது :
http://i35.tinypic.com/29kpf21.jpg.  (அதாவது இரண்டுக்கும்
மேசைத்தளத்திற்கு  தமிழ் மொழியிடச்சூழலில் தான். ஆனால்
இரண்டாவதில் பயர்பாக்சை ஆரம்பித்தது "LANG=en_US.UTF-8 firefox" என முனையத்தில்
கட்டளை கொடுத்து. அதாவது மேசைத்தளம் ta_IN, பயர்பாக்ஸ் மட்டும் en_US
மொழியிடச்சூழல்). ஆதாலால் இரண்டிலும் பலகத்தில்,   தொடர்ச்சி உள்ளது எனபதைக்
காட்டும் "Elipses" எனப்படும்  மூன்று புள்ளிகளாலான ('...') குறியீடு அதே ஆஸ்கி
குறியேற்றம் உள்ள தஸ்கியின்  'ஸ' வாகத் தோன்றுகின்றது.  அவற்றை சிவப்பு
வட்டங்களிட்டு காட்டியுள்ளேன். அதே போல   ஆங்கில மொழியிடச்சூழலில் (என்னால்
சிவப்பு கீழ்கோடிடிப்பட்ட) இரட்டை மற்றும் ஒற்றை அம்புக்குறிகள் மற்றும் சில
குறியீடுகள் தமிழ் மொழியிடச்சூழலில் அவ் ஆஸ்கி மேலரங்க குறியேற்றங்களைக் கொண்ட
தஸ்கி எழுத்துருவங்ககளாக மாறுகின்றன (என்னால் சிவப்பு வட்டங்களிட்டு
காட்டப்படுபவை). அவ்வாறு தோன்றும் ஒவ்வொரு எழுத்துருவமும் தஸ்கி
தகுதரத்திலிருந்து வருகின்றன வேறு தாம்/தாப் போன்றவைகள் அல்ல என்பதும்
புலனாகியது.   எல்லா TSCu எழுத்துருக்களையும் அகற்றறினால் இவ்வழு தோன்றுவதில்லை
!


//
2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>

>
> மயூரன்,
>
> System --> Preferences --> Appearance --> Subpixel Smoothing செய்தால் நிகழ்
> வட்டு மற்றும் நிறுவிய பின்னரும் துல்லியம் கிடைக்கிறதே.
>
> மேலும் indic-core-fonts நீக்கி விட்டால் சிக்கல் தீர்ந்து விடுகிறது.
>
> //



ஆமாச்சு முதற்கண் தாங்கள் குறிப்பிடும் அப்பொதியின் சரியான பெயர்
ttf-indic-fonts-core (indic-core-fonts அல்ல) .

எனது முன்னைய இரு மடல்களும் வாசித்தீர்களா? அதில் 3 ஆம் வழுவாக நான்
குறிப்பிடும் "படருதல்" வழு முன்னர்  ஹார்டியில் ta_IN சூழலில் FF3 இல்
ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் கண்டபின் வழுயறிக்கைத்தளத்தில்
வைக்கப்பட்ட ஒரு தீர்ப்பு அந்த ttf-indic-fonts-core ஐ அகற்றுவது. ஆனால் அது
அறுதித் தேவைக்குக்கு கூடுதலான செயல். ஏனெனில் ttf-indic-fonts-core ஐ
அகற்றாமல் அப்பொதியினால் சேர்க்கப்படுத்தப்படும் lohit_ta.ttf எழுத்துருவை
மட்டும் அகற்றுதல் அவ்வழுவைக் களைகிறது ! தற்போதைய 8.10 இல்  lohit_ta.ttf
இருக்கையில் ta_IN சூழலில் ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் இவ்வழு
காணப்படவில்லை - ஆனால் Google Groups மற்றும் unicode.org  இன் (!!) சில
பக்கங்களிலும் இப்போதும் lohit_ta.ttf  இருக்கையில் வழு உள்ளது.

//இதைத் தவிர வேறு செய்ய வேண்டியிருக்கிறதா? நான் பயன்படுத்தும் கணினியில்
இவையிரண்டையும் செய்தால் சிக்கல் தீர்கிறது. //

அதாவது ttf-indic-fonts-core என்ற பல இந்திய  கட்டற்ற எழுத்துருக்களை கொண்டதும்
அவற்றில் ஒன்றான  எல்லா லினக்ஸ் தளங்களுக்கும் தமிழிற்கு அடிப்படையாகப்
பாவிக்கும் lohit_ta.ttf அகற்றுதலை பராவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம் என
எண்ணுகிறீர்களா?

தற்போதைய 8.10 இல் தமிழிற்கான எல்லா துணை மற்றும் மொழியாக்கப் பொதிகளையும்
சேர்க்காமல் ஆங்கில அல்லது வேற்று மொழிகளில் பயன்படுத்துவோர்கள்
ttf-tamil-fonts பொதியை மட்டும் நிறுவினால் போதும் முதல் வழு தீர்ந்துவிடும்,
TSCu எழுத்துருக்களின் மேலாதிக்கத்தால். (  Anti-alising / Hinting twekaing
களை செய்த பின்). ஆக வழு 2,3 தீர்க்கவே lohit_ta.ttf அகற்றுதல் ஒழு வழி. அதே
வாத அடிப்படையில்  வழு 4 தீர்க்க  எல்லா TSCu ளையும் அகற்றி விடலாமா?
அவற்றிற்கெல்லாம் மாற்றீடு என்ன?

எனவேதான் எவற்றையும் அகற்றா ஒரு முறையை முன் வைக்கவுள்ளேன். உபுண்டு கநோமில்
சோதிக்கும் முறையை இன்று பின் மாலை பதிவேன்.

ஆமாச்சு kde / குபுண்டுவில் சோதிக்க தங்கள் பங்குபற்றல் அவசியாமாகும்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-06 Thread ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/5 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>


> எனது முன்னைய இரு மடல்களும் வாசித்தீர்களா? அதில் 3 ஆம் வழுவாக நான்
> குறிப்பிடும் "படருதல்" வழு முன்னர்  ஹார்டியில் ta_IN சூழலில் FF3 இல்
> ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் கண்டபின் வழுயறிக்கைத்தளத்தில்
> வைக்கப்பட்ட ஒரு தீர்ப்பு அந்த ttf-indic-fonts-core ஐ அகற்றுவது. ஆனால் அது
> அறுதித் தேவைக்குக்கு கூடுதலான செயல். ஏனெனில் ttf-indic-fonts-core ஐ
> அகற்றாமல் அப்பொதியினால் சேர்க்கப்படுத்தப்படும் lohit_ta.ttf எழுத்துருவை
> மட்டும் அகற்றுதல் அவ்வழுவைக் களைகிறது ! தற்போதைய 8.10 இல்  lohit_ta.ttf
> இருக்கையில் ta_IN சூழலில் ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் இவ்வழு
> காணப்படவில்லை - ஆனால் Google Groups மற்றும் unicode.org  இன் (!!) சில
> பக்கங்களிலும் இப்போதும் lohit_ta.ttf  இருக்கையில் வழு உள்ளது.



ஆம்.




> அதாவது ttf-indic-fonts-core என்ற பல இந்திய  கட்டற்ற எழுத்துருக்களை
> கொண்டதும் அவற்றில் ஒன்றான  எல்லா லினக்ஸ் தளங்களுக்கும் தமிழிற்கு
> அடிப்படையாகப் பாவிக்கும் lohit_ta.ttf அகற்றுதலை பராவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம்
> என எண்ணுகிறீர்களா?
>

lohit_ta.ttf உள்ள சிக்கல் என்ன? அதனால் ஏன் பிரச்சனை ஏற்படுகிறது? kadambari,
kalyani போன்று அதுவும் முறையான யுனிகோடு மின்னெழுத்து இல்லையா? இது ரெட்ஹாட்
படைப்புதானே?



> தற்போதைய 8.10 இல் தமிழிற்கான எல்லா துணை மற்றும் மொழியாக்கப் பொதிகளையும்
> சேர்க்காமல் ஆங்கில அல்லது வேற்று மொழிகளில் பயன்படுத்துவோர்கள்
> ttf-tamil-fonts பொதியை மட்டும் நிறுவினால் போதும் முதல் வழு தீர்ந்துவிடும்,
> TSCu எழுத்துருக்களின் மேலாதிக்கத்தால். (  Anti-alising / Hinting twekaing
> களை செய்த பின்). ஆக வழு 2,3 தீர்க்கவே lohit_ta.ttf அகற்றுதல் ஒழு வழி. அதே
> வாத அடிப்படையில்  வழு 4 தீர்க்க  எல்லா TSCu ளையும் அகற்றி விடலாமா?
> அவற்றிற்கெல்லாம் மாற்றீடு என்ன?


முழுமையான யுனிகோடு மின்னெழுத்துக்களை அததற்கு உரிய உண்ணில் பொறுத்தி வெளியிட
வேண்டும். பயிற்சி பெற்ற சிலர் விடுமுறை நாட்களில் செய்து தருவதாக
கூறியிருக்கிறார்கள். பார்க்கலாம். மற்ற தீர்வுகளெல்லாம் work around என்று
சொல்கிறோமே அதுதான். நாம் இத்தகைய work around களை சொல்லும் அதே வேளையில் இது
தீர்வல்ல work around, இதுதான் நிரந்தர தீர்வு என்பதையும் முன்மொழிய வேண்டும்.
அதற்கான வழிமுறைகளையும் சொல்லிவிடுவோம். நம்மாலும் முடியலாம் அல்லது வழி
தெரிந்துவிட்டது நானாவது முயல்கிறேன் என்றும் சிலர் முன்வரலாம்.



> எனவேதான் எவற்றையும் அகற்றா ஒரு முறையை முன் வைக்கவுள்ளேன். உபுண்டு கநோமில்
> சோதிக்கும் முறையை இன்று பின் மாலை பதிவேன்.
>
> ஆமாச்சு kde / குபுண்டுவில் சோதிக்க தங்கள் பங்குபற்றல் அவசியாமாகும்.
>


இன்னும் செய்து பார்க்க வில்லை. செய்து விட்டு சொல்கிறேன். விரிவான
பதில்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி.


-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam