எட்டுடன் மூன்று நாலும்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-==-=-
எட்டுடன் மூன்று நாலும்,
ஏகமாய் ஒன்று ஐந்து ஒன்பதும்,
சட்டமாய் ஆறேழிரண்டும்
தனிப்படப் பதினைந்தாமே.
....ஒரு பழம் பாடல்.
----------------------------|
8.........3............4..|

1.........5............9..|

6.........7............2..|
-=-=-=-=-=-=-=-=-=
15......15.........15
-=-=-=-=-=-=-=-=-=-
இந்தக் கணக்கு மாயச்சதுரம் என்று அழைக்கப்படுகின்றது.எந்தக் கோணத்தில்
கூட்டினாலும் கீழழிருந்து மேல். இடமிருந்து வலம் குறுக்கு வசமாகக்
கூட்டினாலும் ஒரே தொகை கிடைக்கும்.

        அன்பர் கதிர்வேலு ஒரு இளைஞர். தற்போது அவருக்கு அவருக்கு வயது 86.
இம்மாதிரின் பல கட்டங்களில் எண்களை நிரப்பி எப்படிக் கூட்டினாலும் ஒரே
விடை கிடைக்குமாறு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் பரம்பரை
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னையின் புறநகர்ப் பகுதியான
போரூருக்கு அடுத்த கோவூர்தான் இவருடைய சொந்த ஊர்.

        இவருக்கு இந்தக் கணக்கு ஆர்வம் வந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. கடந்த
பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளிதழைப் புரட்டிகொண்டிருந்த இவரது கண்கள்
ஓரிடத்தில் அசையாது உன்னிப்பாய்க் கவனித்து அசையாமல் நின்றன.

        ஆம்! அங்கே மாயச் சதுரம் கணக்கைப் போட்டு தீர்வு காணுமாறு
கேட்கப்பட்டிருந்தது. சின்னக் கணக்காக இருந்தாலும் ஆரம்பத்தில் பலவாறு
யோசித்தே நிரப்பினார் கதிர்வேலு. கூட்டுத் தொகையை எண்ணிக் கூட்டிப்
பார்த்தார். எந்தக் கோணத்தில் கூட்டினாலும் ஒரே தொகைதான் வந்தது.

        அன்று ஆரம்பித்த ஆர்வம்தான், இன்றும் ஜெட் வேகத்தில் தொடர்ந்து
கொண்டிருகின்றது. 3-க்கு 3 மாயச் சதுரக் கட்டமாக இருந்தாலும் அதை நிரப்ப
நம் படாத பாடு படும்போது இந்தக் கதிவேலுவோ 42-க்கு 42 மாயச் சதுரத்தையே
அனாயாசமாக அசராமல் நிரப்புகிறார்.

        இப்போதைக்கு இவரது ஒரே பொழுது போக்கு மாயச் சதுரங்கள் போடுவதும் அவற்றை
நிரப்புவதும் தான். இதற்காக தினமும் மூன்று மணி நேரம் செலவிடுகிறார்.
இந்தத் தள்ளாத வயதிலும், இந்த அபூர்வ ஞானத்திற்கு என்ன காரணம் என்று
அவரிடம் கேட்டால்,’எல்லாம் அவன் கொடுத்த சக்திதானென்கிறார். தன் இஷ்ட
தெய்வமான முருகன்தான்’ என்று புகழ்கிறார்.

        மாயச் சதுரக் கட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போக வேண்டும்
என்பதுதான் அவருடைய இலட்சியமாம்.

        இப்படிக் கணக்குப் பண்ணியே சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின்
மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

செய்தி மூலம். தினத்தந்தி.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

Reply via email to