செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்.....

   - முன்னால் பிறந்த செவிகளைப் பின்னர்வளர்ந்த கொம்புகள் மறைத்தன.
   - ஐம் பொறிகளிலும் காதைத் தவிர, மற்ற நான்கும் அதனதன் வேலைகளைச் அதிகமாகச்
   செய்வதில் சோர்வடைந்து விடுகின்றன.காதுகளுக்கு மட்டும் அந்தச் சோர்வே
   கொள்வதில்லை.
   - ஒன்பது வகை பக்திகளில் முதலில் நிற்பது சிரவணம்.இறைவன் புகழைச் செவியால்
   பருகுவதே பக்தியின் முதல் நிலை.
   - காது ஓங்கார வடிவமானது என்றும் அதன் நிறத்தைக் கொண்டு பிற்காலத்தில்
   குழந்தையின் நிறத்தை உறுதி செய்யலாம் என்று சொல்வதுண்டு.
   - காதளவோடிய கண்கள் என்று கண்ணின் அழகை செவியுடன் இணைத்து வழங்குகிறான்
   கவிஞன்.
   - வேதத்திற்கு சுருதி என்று பெயர். பரம்பரையாக காதால் கேட்கப்பட்டுவந்ததால்
   இப்பெயர் வந்தது.
   - தோடுடைய செவியன்..... தன் கானாம்ருதத்தைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
   எனக்கேட்ட அடியவர்களை தன் தோடுகளாக அணிந்துகொண்டார் சிவபெருமான்.  சம்பந்தப்
   பெருமானின் முதல் பாடல்.
   - “காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்.........”என்கிறார் கம்பர்.
   - செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்” என்று
   கடிந்துரைக்கிறார் திருவள்ளுவர்.
   - செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் ஒரு சிறிது ஈயப்படும். வள்ளுவர்
   - செவியால் அழகு பெறும் பிராணிகள் முயல், காங்க்ரு(கங்காரு) ‘நெடுஞ்செவிக்
   குறுமுயல்’ என்று பெரும்பாணாற்றுப்படுகையில் வருகிறது.
   - காதுகளில் பிறவியில் வந்த கவச குண்டலங்களை அரிந்துகொடுத்துப் புகழ்பெற்றன்
   கர்ணன்.
   - காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே’ பட்டினத்தடிகள்.
   - காதில்லாப் பை, காதறுந்த ஊசி, செவி வழிச் செய்தி, கர்ண பரம்பரைக் கதை
   இந்தச் சொல்வழக்கெல்லம் காதினைப் பற்றியவையே.
   - நீலக் குதம்பை,தாளுருவி, வடுகவானி, திருக்களாவம், குழை முதலியன பழங்காலக்
   காதணிகள்.
   - பனையோலை சுழற்றிக் காதுவளர்த்த காதுகளில் அணியும் வழக்கம்
   இருந்திருக்கிறது. அதனால் காதோலை என்று பெயர்பெற்றிருக்கிறது.
   - பாம்படம் என்ற அணிகலன் இன்றும் கிராமங்களில் இருகாதுகளிலும் பெண்டிர்
   அணிகிறார்கள்.
   - கற்றலில் கேட்டல் நன்று
   - கோகர்ணம், பசுவின் காதுவடிவில் அமைந்த ஒரு சிறு பாத்திரம்.  குழந்தைக்கு
   பால், மருந்து போன்றவை ஊட்டுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு சிறிய நுனிவாய்
   கொண்டது. சங்கு என்றும் சொல்வதுண்டு.
   - இட்டுக் கெட்டது காது இடாமல் கெட்டது கண். ஏதேனும் சிறு தூவல்களைக் கொண்டு
   காதில் குடைவதால் காது நோயுறும். அஞ்சனமிடப்பெறாத கண்கள் நோயுறும்.
   - நன்றி அந்துமணி
   - வெ.சுப்பிரமணியன் ஓம்

Reply via email to