ஓம். உபதேச மணிகள் பிறர் எவ்வளவு கெட்டவர்களாகய்த் தோன்றினாலும் அவர்களை வெறுத்தல் ஆகாது. விருப்பு வெறுப்புகள் இரண்டும் வெறுக்கத்தக்கன. பிரபஞ்ச விஷயங்களில் அதிகமாய் மனத்தை விடக்கூடாது. சாத்தியமான வரையில் அன்னியர் காரியத்தில் பிரவேச்க்கக் கூடாது.
பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான். எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டி பகவான் ரமணமகரிஷி உபதேச மணிகள் சர்வ அறிவிற்கும் சர்வ தொழிலுக்கும் காரணமாகிய மனம் அடங்கினால் ஜகதிருஷ்டி நீங்கும். நல்லமனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்களில்லை. மனம் ஒன்றே வாஅசனைகளே சுபம் என்றும் அசுபாம் என்றும் இரண்டு விதம். .பிரபஞ்ச விஷயங்களில் அதிகமாய் மனத்தை விடக் கூடாது. சாத்தியமான வரையில் அன்னியர் காரியத்தில் பிரவேசிக்கக் கூடாது.
