Reload Original Page<http://thatstamil.oneindia.in/news/2011/01/26/united-states-may-deport-scores-indian-students-aid0091.html#>Print Page<http://thatstamil.oneindia.in/news/2011/01/26/united-states-may-deport-scores-indian-students-aid0091.html#>Email Page<http://thatstamil.oneindia.in/news/2011/01/26/united-states-may-deport-scores-indian-students-aid0091.html#> United States may deport scores of Indian students
வாஷிங்டன்: அமெரிக்காவின் சிலிகான் வேலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டவர்களுக்கு குடியேற்றம் வாங்கிக் கொடுத்ததால் மூடப்பட்டது. இதனால் அங்கு படித்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலனவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் உள்ளது. சான் பிரான்சிஸ்கோ பே பகுதியில் உள்ளது டிரை-வேலி பல்கலைக்கழகம். இது விசா பெர்மிட்கள் துஷ்பிரயோகம், பண ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்துள்ளது. இது குறித்து கலிபோரினியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, இந்த பல்கலைக்கழகத்தில் ரெய்டு நடத்தப்பட்டு கடந்த வாரம் மூடப்பட்டது. இது சட்டத்திறகு புறம்பாக வெளிநாட்டவர்களுக்கு குடியேற்றம் வாங்க உதவியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து 555 மாணவர்கள் படித்தனர். இதில் 95 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. English summary The Tri-Valley University in Pleasanton in San Francisco Bay Area was raided and shut down last week on the charges of helping foreign nationals to get immigration status illegally. As a result, hundreds of Indian students who studied there may be deported. Excerpted from United States may deport scores of Indian students | அமெரிக்க பல்கலைக்கழகம் மூடல்: இந்திய மாணவர்கள் கதி? http://thatstamil.oneindia.in/news/2011/01/26/united-states-may-deport-scores-indian-students-aid0091.html Readability — <http://lab.arc90.com/experiments/readability> An Arc90 Laboratory Experiment <http://www.arc90.com/> http://lab.arc90.com/experiments/readability Follow us on Twitter » <http://www.twitter.com/arc90>Readability version 1.7.1
