---------- Forwarded message ---------- From: p.v. narayanan <> Date: 2015-03-11 21:46 GMT+05:30 Subject: Fwd: வேண்டினோர் துயர் தீர்க்கும் வேங்கட கிருஷ்ணன் ! To:
---------- Forwarded message ---------- From: P V Narayanan Date: 2015-03-11 15:30 GMT+05:30 Subject: வேண்டினோர் துயர் தீர்க்கும் வேங்கட கிருஷ்ணன் ! Thanks to C Raghunathan: வேண்டினோர் துயர் தீர்க்கும் வேங்கட கிருஷ்ணன் ! பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால், மேட்டூரில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து, என்னை சென்னையில் உள்ள ஹெட் ஆபீசில் 3 மாதங்கள் டெபுடேஷன் முறையில் அனுப்பியிருந்தார்கள். அப்போது எனது பெற்றோர் மற்றும் மனைவி மேட்டூரில் இருந்தனர். என் மகள் திருச்சியில் அவளது தாத்தா பாட்டி இல்லத்திலிருந்து கல்லூரியில் படித்துகொண்டிருந்தாள். நான் சென்னை திருவல்லிகேணியில் ஒரு அறையை எடுத்துகொண்டு தங்கியிருந்தேன். ஒரு நாள் மாலை அலுவலக வேலை முடிந்ததும், திருவல்லிகேணிக்கு எனது அறைக்கு திரும்பி, வேஷ்டிக்கு மாறி, பார்த்தசாரதி பெருமானை தரிசிக்க கோவிலுக்கு சுமார் 8 மணிக்கு சென்றேன். பார்த்தசாரதி பெருமான் சன்னதிக்குள் நுழைந்து சேவிக்கும் போது, வழக்கம் போல் எம்பெருமானுக்கு பல்லாண்டு சொல்லிவிட்டு, என் மகளை பற்றியும் வேண்டிக்கொண்டு ( பிறந்தது முதல் எங்களை விட்டு பிரியாதவள் முதல் முறையாக தனது தாத்தா பாட்டியுடன், எங்களை விட்டு தங்கி படித்து வருகிறாள் ) இருந்தேன். அப்போது திடீரென்று எல்லா மின் விளக்குகளும் ஒளி மங்கி அணையும் தருவாய் வரை சென்று பிறகு பளீரென்று எரிய தொடங்கின. எனக்கு மனதில் சிறிது கவலை. என் மகளுக்கு எதோ தீங்கு வர இருந்து அது எம்பெருமான் அருளால் நிவர்த்தியாவதாக தோன்றியது. எனவே அவளுக்கு கூடவே துணையாக இருக்க வேண்டும் என்று பார்த்தசாரதி எம்பெருமானை வேண்டிக்கொண்டு அறைக்கு திரும்பினேன். ( அப்போது செல் போன் வசதி இல்லை. ) மறு நாள் இரவு பூத்திலிருந்து போன் செய்து என் மகளுடன் பேசினேன். அவள் கூறிய விஷயம் என்னை திக்கு முக்காட செய்தது ! முதல் நாள் மதியம் வைரல் ஜூரம் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகவும் இன்று மாலை டிஸ் சார்ஜ் ஆகியதாகவும் கூறினாள். முதல் நாள் இரவு 8 மணிக்கு என்ன செய்து கொண்டிருந்தாய் என்று கேட்டேன். அவள் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்ததாகவும், சுமார் 7.45 மணிக்கு சலைன் ஏற்றப்பட்டதாகவும் ஆனால் சிறிது நேரத்திலேயே கை வலிக்க ஆரம்பித்து விட்டது என்றும் கூறினாள். யாரையாவது கூப்பிடுவோமென்றால் யாரும் அருகில் இல்லை. தவித்துகொண்டிருந்தபோது திடீரென்று 8 மணிக்கு டூட்டி டாக்டர் வந்து பார்த்துவிட்டு ( அவர் எப்போதும் அந்த நேரம் வருவதில்லையாம் ), சலைன் ஊசி சரியாக நரம்பில் குத்தாததால், ரத்தம் வெளியே வந்து ஸ்டக் ஆகி, கை வலிக்க ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு , நர்ஸ் பெண்மணியை கடிந்து கொண்டு சரியாக ஊசியை பொருத்திவிட்டு சென்றாராம். இதை சொல்லிவிட்டு, ஏன் கேட்டாய் என்று என் மகள் என்னை கேட்க, நான் பார்த்தசாரதி கோவிலில் நடந்த நிகழ்ச்சியையும், என் மன கவலையையும் அவளிடம் சொன்னேன். அவள் ஆச்சர்யத்துடன் கூறினாள் " அப்பா அங்கு வந்து ஊசியை சரியாக பொருத்தி சென்ற டாக்டர் பெயர் "பார்த்தசாரதி" என்று !! ருக்மணி பிராட்டியார் சமேத பார்த்தசாரதி எம்பெருமான் திருவடிகளே சரணம் ! <https://m.facebook.com/groups/579086475450142?ref=m_notif¬if_t=group_activity&actorid=100001439747931#!/photo.php?fbid=1556115721322456&id=100007721290525&set=gm.10152835332611997&source=57&refid=18&__tn__=E> *Like* <https://m.facebook.com/a/like/inline.php?feedbackinline=1&chainingEnabled=1&ul&storykey&shareID=10152835332611997&fs=8&actionsource=permalink&ft_ent_identifier=10152835332611997&av=100000700583421&gfid=AQCFIqbBdD1HVTE6> *Share* <https://m.facebook.com/sharer.php?fs=8&sid=10152835332611997> Sent from my iPhone -- P.V.NARAYANAN -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. For more options, visit https://groups.google.com/d/optout.