---------- Forwarded message ----------
From: krnarayanan2013 <





*கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக*
*சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப*
*போன விதம் பற்றி தவணை முறையில்* பலமுறை, பல
ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து
கொண்டோம்.

[image: kalaignar tv]
<https://vimarisanam.files.wordpress.com/2014/06/kalaignar-tv.jpg>

கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப்
பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் திட்டம்
போட்டு வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
*ராஜா மாட்டிக்கொண்டதும், சிபிஐ கிரிமினல் வழக்கு பதிந்து*
*விசாரணையை சீரியஸாக முடுக்கி விடுகிறது என்பது தெரிய*
*வந்ததும், அவசர அவசரமாக அந்தப்பணம் திரும்பக்*
*கொடுக்கப்படுகிறது. அதாவது திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதாக*
*ரெக்கார்டு தயார் செய்யப்படுகிறது.*

அதுவும் மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டம் போட்டுத்தான்
செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், என்ன தான் மறைக்க
முயன்றாலும்,* சில அடிப்படை விஷயங்கள், காலம் கடந்து*
*விட்டதால் மறைக்கப்பட முடியாமல் நடந்ததென்ன என்பதை*
*சுலபமாக விளக்குகின்றன.*

*முழுக்கதை கீழே – *

————————

அமலாக்கத்துறை அலுவலகம் (Enforcement Directorate)
மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் -

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜாவின் மூலம்
பலன் அடைந்தவர்களின் ஒரு பகுதி லாபம் – சுமார் 214 கோடி,
*கலைஞர் தொலைக்காட்சிக்கு மறைமுகமாக பல கம்பெனிகள்*
*மூலம் சென்றடைந்திருக்கிறது.*

ஸ்வான் டெலிகாம் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு
யூஏஎஸ் எல் எனப்படும் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்காக
கொடுக்கப்பட்ட சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தான்
இந்த 214 கோடி. இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனதின்
பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தவர்கள் என்கிற முறையில்
அதன் சொந்தக்காரர்களாக இயங்குபவர்கள் தான் சாஹித் பல்வா
குழுவினர். டைனமிக் ரியலிடி என்கிற நிறுவனமும் இவர்களது
டிபிஆரெல் குழுமத்துக்குச் சொந்தமானது.

*இந்த டைனமிக் ரியலிடி – குசேகான் என்கிற காய்கனி கொள்முதல்*
*செய்து விற்கிற (காய்கறி விற்கிற நிறுவனம்) நிறுவனத்திற்கு*
*200 கோடியைக் கொடுத்துள்ளது. இந்த காய்கனி குசேகான்*
*நிறுவனம், தனக்கு வந்த பணத்தை அப்படியே சினியுக் பிலிம்ஸ்*
*என்கிற நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறது… சினியுக் நிறுவனம்*
*அதை அப்படியே கலைஞர் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது….!!*
*நேரடியாகக் கொடுத்தால் வெளிப்படையாகத் தெரியும் என்பதால்,*
*இரண்டு மூன்று கம்பெனிகள் வழியாக குழப்ப ட்ரான்ஸ்வர்.*

இந்த மொத்த பணப்பரிமாற்றமும் டிசம்பர் 2008-ல் துவங்கி
ஆகஸ்ட் 2009 க்கு உட்பட்ட ஒன்பது மாதங்களில் நடந்து
முடிந்திருக்கிறது.

*ராஜா மீது சிபிஐ விசாரணை தீவிரமாகிறது என்பது தெரிய*
*வந்ததும், அதாவது டிசம்பர் 2010 -ல் இந்த 214 கோடி*
*பணப்பரிமாற்றத்தை சட்டபூர்வமாக்கும்*
*முயற்சியாக, முன்தேதியிட்ட (19/12/2008) வெற்று*
*வெள்ளைதாளில் கலைஞர் டிவியின் 37 % சதவீத பங்குகளை*
*வாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகை*
*இது என்று பத்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.*
(முன்தேதியிட்ட முத்திரைத்தாள்கள் கிடைக்காததால், வெற்று
வெள்ளைத்தாளில் பத்திரம் தயார் பண்ணி இருக்கிறார்கள்.)
214 கோடி ரூபாய்க்கு வெறும் வெள்ளைத்தாளில் பத்திரம் …..!!

இதில் இன்னொரு வீக் பாயிண்ட் – கலைஞர் டிவியின் மொத்த
*மூலதனமே சுமார் 10 கோடி தான். இதன் 37% பங்குகளை*
*வாங்க இந்த நிறுவனங்கள் 214 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாக*
*ரெக்கார்டு தயார் செய்யப்பட்டிருக்கிறது….!*

ராஜாவை சிபிஐ விசாரணக்கு அழைத்தவுடன் – அதாவது,
23/12/2010 முதல், பணத்தை திரும்பக்கொடுக்கும்
process துவங்கி இருக்கிறது. *மொத்தத் தொகையும் ஒரு*
*மாத கால அவகாசத்திற்குள், சில தவணைகளில், திரும்பக்*
*கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜா 02/02/2011 அன்று கைது*
*செய்யப்பட்டார். அதற்குள் முழு பணமும் திரும்பக் கொடுக்கப்பட்டு*
*இருக்கிறது.*

சரி – திரும்பக் கொடுக்க கலைஞர் டிவிக்கு இவ்வளவு பணம்
திடீரென்று கிடைத்தது எப்படி …..?

*இந்தியா சிமெண்ட்ஸ் (BCCI புகழ் திருவாளர் சீனிவாசன்)*
5 ஆண்டுகள் தொடர்ந்து கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய
அட்வான்சாக கொடுத்த தொகை வகையில் -60 கோடி.

*அடுத்து சாராய அதிபர் விஜய் மால்யாவின் யுனைடட் ஸ்பிரிட்ஸ்*
நிறுவனத்திற்கு இதே போல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து
கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய அட்வான்சாக கொடுத்த
தொகை வகையில் – 65 கோடி.

*அடுத்து அமிர்தம் (மாறன் சகோதரர்களின் சித்தப்பா ) பிலிம்ஸ்*
ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்த
அட்வான்ஸ் பணம் வகையில் – 83 கோடியும்,

*ஜெமினி இண்டஸ்ட்ரீஸ் அண்ட் இமேஜிங் நிறுவனம் சார்பில்*
*கிடைத்த – 45 கோடியும்.*

ஆக மொத்தம் – பணம் வாங்கியது கலைஞர் டிவியின் 37%
பங்குகளை விற்பதற்கான அட்வான்ஸ் தொகையே என்றும்,
விற்பனை பேரம் சரிவராததால், அட்வான்ஸ் தொகை முழுவதும்,
வட்டியுடன் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டது என்பது
கலைஞர் டிவியின் வாதம்.

*இந்த வாதத்தில் உள்ள இன்னொரு ஓட்டை என்னவென்றால் -*
*வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி கொடுத்திருந்தால்,*
*அதற்கான வருமானவரியை (அதாவது TDS ) கழித்துக் கொண்டு*
*மீதியைத்தான் அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்.*
*அந்த வரியும் வருமான வரி அலுவலகத்திற்கு உரிய statement*
*-உடன் உரிய காலத்தில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அது*
*செய்யப்படவில்லை.*

இதில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் -

214 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதற்குரிய
ஆவணங்கள் எதையும் முறைப்படி தயாரிக்கவில்லை. இவ்வளவு
பெரிய தொகைக்கு ஈடாக செக்யூரிடி எதுவும் பெறப்படவில்லை.
*10 கோடி முதலில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் 214 கோடி*
*ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்…..*

பணம் கொடுத்த ஒரு நிறுவனத்திற்கும், இவ்வளவு பெரிய
தொகையை கடன் கொடுக்க அருகதை இல்லை. *காய்கனி*
*கொள்முதல் செய்யும் ஒரு நிறுவனம் 214 கோடி ரூபாய்*
*பெற்று, கடன் கொடுத்தது என்பது நம்பத்தக்கதாக இல்லை.*

பணம் கொடுப்பது என்பது இந்த நிறுவன ஆவணங்களின்
*(Memorandum of Understanding) ஒரு நோக்கமாகப்*
*பதிவு செய்யப்படவும் இல்லை….!!*

உம்ம் …..*“கடலில் தூக்கிப் போட்டாலும், கட்டுமரமாகப்*
*பயன்படக்கூடிய”வர்கள் …* சமூகத்திற்கு செய்யும் தொண்டு இது…!

இதில் பரிதாபம் என்னவென்றால்,

* வீட்டுப் பெண்களை வழக்கில் சிக்கித்தவிக்க விட்டுவிட்டு, ஆண்கள்
தங்களுக்குஇதில் எந்த சம்பந்தமும் இல்லாதது போல், *
ஜம்பமாக உலா வருகிறார்கள்.

*அந்த ஆண்களது சம்மதமோ, சம்பந்தமோ இன்றியா இத்தனை
பரிவர்த்தனைகளும்நடந்திருக்கும்….?*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to