senthilvayal.com <http://senthilvayal.com/2015/07/29/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae/> Read Later ஆப்பிள் மியூசிக் அறிமுகம்
- by Vayal - July 29, 2015 - 1 min read - original <http://senthilvayal.com/2015/07/29/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae/> ஆப்பிள் நிறுவனத்தின் கருத்தரங்கில், புதியதாக “ஆப்பிள் மியூசிக்” (Apple Music) என்ற செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். 9 கட்டமைப்பு குறித்து வெகுநேரம் உரையாற்றிய பின்னர், இறுதியில், டிம் குக், “ அடுத்து ஓர் ஆர்வமூட்டும் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இது செயலிகளை உருவாக்குபவர்களுக்கல்ல; நம் பயனாளர்களுக்கு” என்ற அறிமுகத்துடன், ‘ஆப்பிள் மியூசிக்’ திட்டம் குறித்து அறிவித்தார். சென்ற ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் விலைக்கு வாங்கிய (300 கோடி டாலர் செலவில்) Beats Music, திட்டமே தற்போது பல மேம்பாடுகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது இசை வழங்கும் துறை மிகக் குழப்பமான நிலையில் உள்ளது என்றும், அதனைச் சீர்படுத்தி அழகான ஓர் அமைப்பை வழங்க இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. மாதந்தோறும் பத்து டாலர் கட்டணம் செலுத்தி ‘ஆப்பிள் மியூசிக்’ சேவையைப் பெறலாம். இந்த ஒரு செயலியைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர் ஒருவர் தன் இசை ஆல்பங்கள், மற்றும் சார்ந்த கோப்புகள் அனைத்தையும் பதிந்து வைக்கலாம். இசை வல்லுநர் ஒருவரும் தன் ஆக்கங்களை இதில் பதிந்து வைக்கலாம். தன் பதிவுகள் மட்டுமின்றி, இசைக் கடலென உள்ள அனைத்தையும் அணுகிப் பெறலாம். ஆறு பேர் வரை அதிகபட்சமாக உள்ள குடும்பத்திற்கு 15 டாலர் கட்டணம். ஐ ட்யூன் தளத்தில் வாங்கக் கூடியவற்றையும் இதில் சேமிப்பாக வைத்துப் பயன்படுத்தலாம். சிரி செயலியை இதில் பயன்படுத்தி, பாடகர் வாரியாக, இசை வகைப்படி, வெளியான ஆண்டின் அடிப்படையில் எனப் பல வகைகளில், இந்த திட்டத்தில் பாடல்களைத் தேடிப் பெறலாம். ஆப்பிள் மியூசிக் திட்டம் வரும் ஜூன் 30 அன்று தொடங்கப்பட உள்ளது. ஐ.ஓ.எஸ்., ஓ.எஸ். எக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்கங்களில் இது செயல்படும் வகையில் தரப்படும். நூறு நாடுகளில் முதலில் அறிமுகம் ஆக இருக்கும் இந்த திட்டத்தினை முதல் மூன்று மாதங்களுக்குச் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, பின்னர் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தலாம். இதற்கு, பல கோடிக்கணக்கான ஆப்பிள் சாதனங்களில் இந்த செயலி பதியப்பட்டு, மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆப்பிள் மியூசிக் திட்டத்தில், பீட்ஸ் 1 (Beats 1) என்ற ரேடியோ நிலையமும் உள்ளது. நியூ யார்க், லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் லண்டன் நகரங்களில், 24 மணி நேரமும் இது இயக்கப்படும். இதன் ஒரு சிறப்பம்சமாக Connect என்னும் பிரிவு செயல்படும். இதில் நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமான இசை வல்லுநர்களுடன் உரையாடலாம். நிகழ்ச்சி நிரலில் இல்லாத பாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியடையலாம். -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. For more options, visit https://groups.google.com/d/optout.