சுண்டைக்காய் மருத்துவம்!


*சுண்டைக்காய் மருத்துவம்!*

*கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு *
*நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் *
*உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக *
*உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். *
*அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு *
*இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது *
*தவிர்க்கப்படும். *

*சுண்டைக்காயை உலர்த்திப் **பொடியாக்கி,*
*தினம் சிறிதளவை தண்ணீரில் **கரைத்துக் குடித்து*
*வந்தால், ஆசனவாய் **தொற்றும், அதன் விளைவால்*
*உண்டாகிற **அரிப்பும் குணமாகும். வாரத்தில்*
*4 நாட்களுக்கு **சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு*
*இ**ரத்த **சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.*

*சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, *
*சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான *
*சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் *
*சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். *

*வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் *
*சுண்டைக்காய் நல்ல மருந்து. *

*பச்சை **சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் *
*மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் *
*கவனிக்க வேண்டிய சேதி. *

*பக்கவாதம் **பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் *
*மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது *
*பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.*

*எப்படி**ச்** சுத்தப்படுத்துவது?*

*காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப் *
*பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி, *
*சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர் *
*உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு *
*கைகளால் லேசாக அவற்றை அலசினால், *
*விதைகள் அடியில் தங்கும். விதைகளை *
*முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு *
*இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு, *
*சமையலுக்கு உபயோகிக்கலாம்.*

*உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து, *
*கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய *
*வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும் *
*மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது *
*சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை *
*சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு *
*விஷயங்களா என மலைக்க வைக்கிறது, *

** நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச் *
*சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய *
*ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான *
*மருத்துவக் குணங்கள் கொண்ட *
*சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல *
*குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண் *
*ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே *
*சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் *
*உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து *
*விடும். *

*நீரிழிவு, இதய நோய்கள் என *
*எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் *
*பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு *
*ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் *
*ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை *
*எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக *
*நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான *
*தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக் *
*கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா, *
*பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில் *
*உண்டு.*

****இ**ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. *
*இ**ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது **இ**ரத்தக் *
*குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி *
*இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி *
*குணங்கள் கொண்டது. *

*வெள்ளை **இ**ரத்த **அணுக்களை அதிகரித்து அதன் *
*விளைவாக **நோய் எதிர்ப்பு**ச்** சக்தியை அதிகரிக்கக் கூடியது. *

*சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது *
*இ**ரத்த **சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. *

*இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை *
*போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது *
*சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது *
*தெரியாது.*

** சுண்டைக்காயை பச்சையாகவோ, *
*வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும் *
*சாப்பிடலாம். *

*காய்ச்சல் நேரத்தில் **சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் **வெள்ளை
**இ**ரத்த
அணுக்கள் அதிகரிப்பதுடன், **காயங்களும் புண்களும் கூட ஆறும்.*

** தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் *
*போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும் *

*இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்*
*வாய் புண்களையும், சொத்தைப் பல்
உருவாவ**தையும்
தடுக்கக் கூடியது.*

** நரம்பு மண்டலத்துக்கு**ச்** சக்தி **கொடுக்கக்கூடியது *
*சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் *
*நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள *
*நல்ல குணங்கள் உதவக்கூடியவை.*

** நம்மூர் மக்களுக்கு**ச்** சுண்டைக்காய் வற்றலைத் *
*தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது *
*தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம் *
*விதமாக சமைத்து உண்ணலாம். *

*கத்தரிக்காயை **என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, **அத்தனையையும் *
*சுண்டைக்காயிலும் **செய்யலாம். கேரட், *
*பீட்ரூட் மாதிரி பிரமாதமான **சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான் **இருக்கும்.
ஆனால், அதை நாம் சமைக்கிற **முறையின் மூலம் சுவை மிக்கதாக *
*மாற்ற **முடியும்.*

** சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன் *
*பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல *
*மருந்துத் தயாரிப்புகளுக்கு **உபயோகிக்கிறார்கள்.*

** பிரசவமான பெண்களுக்கு பத்திய**ச்** சாப்பாட்டின் *
*ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று *
*கொடுப்பார்கள். அதில் பிரதானமாக**ச்*
*சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். *

*தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான *
*சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை *
*வெளியேற்றும் சக்தி கொண்டது அதில் *
*சேர்க்கப்படுகிற சுண்டைக்காய். *

*“சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய *
*என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது, *
*எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து**ச்*
* சாப்பிடுங்கள்” .*





<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: [?]]   *v **a n a k k a m**  S u b b u*   [image: [?]]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to