---------- Forwarded message ----------
From: p.v. narayanan
Date: 2016-06-27 16:58 GMT+05:30
Subject: Maha Periyava
To:


Thanks to SP Ramanathan :


கலவையில் ஒருநாள் விடியக்காலம் ரெண்டு மணி. பெரியவா எழுந்து அனுஷ்டானங்களை
முடித்துக்கொண்டு, குரு,பரமகுருவின் அதிஷ்டானங்களின் தாழ்வாரத்தில்
உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்துவிட்டார். முடிந்ததும், கூண்டு வண்டியை
பிடித்துக் கொண்டு, ஸ்ரீகண்டன், சுந்தரமூர்த்தி உடன்வர எங்கோ வெளியே
புறப்பட்டார்.> > எங்கே?> > பழைய சிவன் கோவில் பக்கம் போகும் வழியில் ஒரு
நீரோடை வரும். அதைக் கடந்து, சிவன் கோவிலை ஒட்டி, ஓடைக்கரையில் அமர்ந்து
விட்டார்.

> விடியக்காலம் நாலு மணி. ஒரு கார் வரும் சப்தம் கேட்டது.> > எழுத்தாளர்
மணியனும் எம்.ஜி.ஆரும் அதிலிருந்து இறங்கினார்கள் ! > > பெரியவா அமர்ந்த
இடத்தின் முன்னால் தொண்டர் தண்ணீர் தெளித்து சுத்தம் பண்ணி வைத்திருந்தார்.
அந்த இடத்தில் சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரும், மணியனும் நமஸ்காரம் பண்ணினார்கள்.
தனியாக பெரியவாளுடன் பேச வேண்டும் என்ற ஆவலை எம்.ஜி.ஆர் வெளியிட்டார்.
மற்றவர்கள் விலகிப் போனார்கள். சுமார் அரைமணிநேரம் சம்பாஷணை நடந்தது. என்ன
பேசினார்களோ? அவர்களுக்கே வெளிச்சம்.> > பிரசாதம் பெற்றுக் கொள்ளும்போது
"பெரியவா உத்தரவு போடும் கார்யங்களை செய்யறேன்" என்று வணக்கத்துடன் கூறினார்
எம்.ஜி.ஆர்.> > "நீ இப்போ பண்ணிண்டு இருக்கற கார்யமே எனக்கு த்ருப்தியா
இருக்கு..........க்ஷேமமா இரு" ஆசிர்வதித்தார். > > பொழுது விடிந்து விட்டது.
பார்த்தால்.............ஓடைக்கரையில் கூட்டம் அலைமோதியது !

> ஒருவழியாக எம்.ஜி.ஆர் போனதும், சிஷ்யர்களிடம் பெரியவா சொன்னார்....

> "ராமச்சந்திரன், தான் வரப்போறது தெரிஞ்சா, கூட்டம் கூடிடும்.......ங்கறதால
ராத்ரி ரெண்டு மணிக்கெல்லாம் பட்ணத்துலேர்ந்து பொறப்ட்டு வந்தார்......அதான்
கலவை அதிஷ்டானத்ல இல்லாம, ஊருக்கு வெளில தர்சனம் குடுக்கறதுக்காக, ராவோட ராவா
இங்க வந்தேன். பாரேன்! இங்கியே இவ்வளவு கூட்டம்னா.........அதிஷ்டானத்ல? ஊரே
தெரண்டு கூடியிருக்கும்"> > எளிமை எளிமை எளிமை !>
------------------------------------------------------------------------------------------------------>
> இதில் அழகு என்னவென்றால், எம்.ஜி.ஆரை ஊருக்கு வெளியில் சந்திக்கணும்
என்பதால், தன்னுடைய அனுஷ்டானத்தை குறைக்கவோ, மாற்றவோ இல்லை. அதற்கு பதிலாக,
தன் தூக்கத்தை குறைத்துக் கொண்டு விட்டார். கும்பகர்ண பரம்பரையில் வந்த நாம்,
இனியாவது எதற்காகவும் நம் அனுஷ்டானங்களை விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்க
பெரியவாளை பிரார்த்திப்போம். >

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to