<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*59. கூர்ம சம்ஹார மூர்த்தி* *அமுதம் கடைந்த பின் கூர்ம அவதாரத்தால் உலகிற்கு நேர்ந்த துன்பத்தினைப் போக்க, கூர்மத்தின் அகந்தையை அடக்கிய வடிவம் * *கூர்ம சம்ஹாரமூர்த்தி* *ஒரு காலத்தில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் தீராத சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் இருதரப்பிலும் எண்ணற்ற உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இதனால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்ற யோசனையைப் பிரம்மனிடம் கூறினர். பிரம்மன் திருமாலிடம் கூற, அவரது துணையுடன் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். இருதரப்பிற்கும் ஈடு கொடுக்க முடியாமல் மந்தாரமலை ஆடியது. இதனால் திருமால் மலையின் அடியில் சென்று ஆமையாகி மலையைத் தாங்கினார். வாசுகி துயரம் தாங்காமல் நஞ்சைக் கக்க, தேவ அசுரர்களைக் காக்க திருமால் முயல, நஞ்சின் வேகத்தால் அவரது நிறம் கருமை நிறமானது. எம்பெருமான் சுந்தரர் மூலம் ஆலகாலத்தை எடுத்துத் தானே உண்டார். நஞ்சு வரக்காரணம் சிவனை வணங்காதது என்று உணர்ந்தோர் அவரை வணங்கினர். சிவனது ஆசியுடன் அமுதம் கடைய மீண்டும் சென்றனர். * *பாற்கடலைக் கடையப் பாற்கடலிலிருந்து மூதேவி தோன்ற அவளை வருணனுக்கு அளித்தனர். தண்டம் கமலத்துடன் தன்வந்திரி என்ற மருத்துவன் தோன்றினான். பின்னர் அறுபது கோடி மகளிர் தோன்ற அவர்கள் தேவலோகத்திற்கு அணுப்பப்பட்டனர். பின்னர் மது தோன்ற தேவர்கள் பருக அசுரர்கள் அதனைப் புறக்கணித்தனர். பின் தொடர்ந்து வந்த உச்சைச்சிரவம் என்ற குதிரையை இந்திரனுக்கும், கசுத்துவமணியை திருமாலுக்கும், பஞ்சதருக்கள், காமதேனு, ஆகியவை இந்திரனுக்கும், சந்திரன் உலகிற்கு ஒளியூட்ட அவருக்கு சிந்தாமணியையும், திருமகளை திருமாலுக்கும் அளித்தனர். இறுதியில் அமிர்தம் வந்தது. திருமால் மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தம் உண்டனர். இவ்விசயத்தைச் சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் சொன்னார்கள். திருமால் மிக்கக் கோபத்துடன் கையில் இருந்த அகப்பையால் அவர்களை இரு கூறாக்கினார். அவர்கள் அமுதம் உண்ட பலனால் இறக்காமல், சிவபூஜை செய்து ராகு, கேது கிரகங்களாக உருமாறி இன்றளவும் தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரர்களைப் பிடித்து வாட்டுகின்றனர். * *இதனிடையே மந்திரமலையைத் தாங்கியபடி நின்ற (திருமால்) ஆமை ஏழு சாகரங்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் கடல் நீரையும் குடித்துச் சேற்றையும் உண்டது. அகோரப் பசியில் ஆமை அனைத்தையும் உண்டது. இதனால் சந்திர, சூரியர் கடலில் சென்று மறைய, பயந்து ஒளிந்து கொண்டனர், இருளின் பிடியில் உலகம் அமிழ்ந்தது. * *இதனால் உலகமாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர். ஆமையை அழிக்குமாறு கூறினார். உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் அவ்வாமையின் உடலைக்குத்தி அதன் இறைச்சியை வழித்தெடுத்தார். ஆமையின் வலிமை குன்றியது. சிவ பெருமானே ஆமையின் ஓட்டை ஆபரணமாக்க வேண்டுமெனத் தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பப்படி தன் திருமார்பில் இருந்த தலைமாலையின் நடுவே பொருத்தி இணைத்தார். திருமால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். சுய உணர்வு கொண்ட திருமால் சிவனைப் பணிந்து வைகுந்தம் சென்றார். ஆமையைக் கொன்றதால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.* *சென்னையிலுள்ள பாரிமுனைக்கருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் இவரது வரை ஓவியம் காணப்படுகின்றது. அங்கு சிவமூர்த்திகளின் ஓவியம் நிறையக் காணப்படுகின்றது. இவருக்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், திங்களன்று கொடுக்க நீர் கண்டம் மறையும் பயம் விலகும். தம்பதியர் ஒற்றுமை பெருகும்.* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* [image: HydsdYxowlH3beLCo2uh0J46ZGoM4Mhj2QhbtOZZ3oK0CWrk_1emGb0W_LzgrTjz.png] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bqcvm9%3DW8CxoeN3mxV46tZE6Sw11LXp0%3DFgF%2Bcfg6J8Ww%40mail.gmail.com.
