▬▬திருக்குறள்▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

ஓம்

105. நல்குரவு

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

1.  ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்

இன்மையே இன்னா தது. 1041

  ஒருவனுக்கு வறுமையைப்போன்று துன்பம் தருவது யாதென்றால் அந்த வறுமையைப் போல
துன்பம் தருவது அந்த வறுமையே அன்றி, யாதுமில்லை



2. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

இன்மை எனன ஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும். 1042

  வறுமை என்னும் ஒரு பாவி ஒறுவனிடம் வந்துவிட்டால் இம்மையிலுள்ள உலகவின்பமும்,
மறுமையிலுள்ள சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்



3.▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை.1043.

  வறுமை என்னும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன் மேல்
அக்குடும்பத்திற்கு உண்டான பெரும் புகழையும் கெடுத்துவிடும்

4.▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொல்பிறக்கும் சோர்வு தரும். 1044.

   இழிவான சொல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு
என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.

5. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும். 1045

   வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே, உலகத்தாரால் சொல்லப்படும்
பல்வகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.

6. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

நல்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொல்பொருள் சோர்வு படும். 1046

    நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர்
சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வுபட்டுவிடும்.

7. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

அறஞ்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்

பிறன்போல நோக்கப்படும். 1047

    அறத்தோடு பொருந்தாத வறுமையுடையவன். தன் தாயாலும்கூட , ஒரு அயலானைப் போலக்
கருதிப் பார்க்கப்படுவான்.

8. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

 இன்றும் வருவது  கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.1048

  நேற்றுக் கொன்றது போலத் துன்பம் செய்த வறுமையானது இன்றும் என்னிடத்தே
வந்துவிடுமோ? வந்தால், இனி யாது செய்வேனோ?

9. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது. 1049

  (மந்திரமும் மருந்தும் இவற்றின் உதவியினால்) நெருப்பில் கிடந்தும்
உறங்கலாம்.; ஆனால். வறுமை வந்த போது எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.

10. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050

  பொருளில்லாத வறுமையாளர் செய்யக்கூடியது முற்றும் துறத்தலே; அதனைச்
செய்யாதிருப்பது பிறர் வீட்டு உப்பிற்கும் காடிக்கும் தாம் எமனாவதே ஆகும்

▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭



அருஞ்சொற்கள்:

பாவி, ----,இம்மையும் மறுமையும்-- வள்ளுவரின் வாக்கிலே, 1042

தொல்வரவும், தோலும், நசை 1043

இல்பிறந்தார் 1044

நிரப்பினும் , 1048

கண்பாடு1049

துவரத் துறவாமை1050

▬▭▬▭▬▭▬▭▬▭▬▭

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtYmpoR5H-1WTxyBtkm0b0YgtiEBcdGjx1KvXYNrEsCYA%40mail.gmail.com.

Reply via email to