🙏🙏🙏👍

On Sun, 14 Jan 2024 at 23:13, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> *Respected Sir/s,*
>
> SUBJECT:   FATHER…..FATHER
>
> Whatsappil vanthathu manathai thotta varikal.
>
> 💑👪💑👪💑👪💑
>
>
>
> DADS:
>
> 🌺 *TO BE FATHER PERHAPS* may be very easy.
>
> But a FATHER’s ROLE is a TOUGH *one*….
>
> 🌺🚹 FATHER...
>
> It is from the root that a man gets the courage and strength that he later
> owns. *A  father is the role model for a child's behaviour, habits and
> character.*
>
> 🌺🚹Father is God's greatest gift to human life.
>
> A good father is worth a thousand teachers.
>
> *पिता स्वर्गः पिता धर्मः पिता परमकं तपः।*
>
> *पितरि प्रीतिमापन्ने सर्वाः प्रीयन्ति देवताः॥*
>
> *न ह्यतो धर्मचरणं किञ्चिदस्ति महत्तरम्।*
>
> *यथा पितरिशुश्रूषा तस्य वा वचनक्रिया॥*
>
> *Serving one's father or obeying his commands is the highest form of
> upholding dharma.*
>
> The sacrifice of this beacon that is always with us and guides us is
> immense.
>
> 🚹🌺The BURDEN that fathers bear financially to raise and nurture their
> children are heavy. For that the songs they sing are painful.ا
>
> 🌺🚹A good father has the intensity of care and appreciation for his
> children's growth that no other relationship has. Fathers who always
> think about their children's future sacrifice their entire lives for them.
>
> 🌺🚹 Mother means love. But the love of fathers who do not show it is
> very deep. Their affection is also wet.
>
> 🌺🚹Reprimand is necessary for them to lead their children well. That is
> why many fathers keep their motherly love for their children very secret.
>
> 🌺🚹If you get the light rays of the father as sun;
>
> the baby plants will thrive naturally. Every young man has his father as
> the best teacher of all the lessons of life.
>
> 🌺🚹If the society we live in has got a good man; it means that behind
> him was the hard work and sacrifice of a responsible father.
>
> *🌺🚹 **It is true that the strength of an elephant is in its trunk..* It
> is much truer that the strength of a man is in his faith in his
>
> 🚹FATHER:
>
> By the river of that river of faith that runs in every human mind, O
> fathers!
>
> 🌺🚹The first step a child takes with his father's hand is the planting
> of the seed of faith
>
> 🌺🚹The training a child receives from a father is necessary to bear the
> pains and scars of falling and rising.
>
> 🌺🚹Like the sound of chairs cracking, this society cannot get a good man
> without the healthy connection and bond of two relations, mother and father.
>
> 🚺🚺 A mother carries her child tightly on her waist as the height of
> love that she wants to be with  him/her.
>
> 🚹🚹The father carries his child on his shoulders with the urge to rise
> above him.
>
> 🚹How many tragedies have every father gone through for their children,
> which remains unknown to them till the end?
>
> 🚹How many people he the father would have asked for help for the welfare
> of his children?
>
> 🚹 From How many people would have borrowed from?
>
> How much he would have struggled to repay it?
>
> 🚹How many sleepless nights would have had?
>
> 🚹How many burdens did carry in mind?
>
> 🚹On the outside of the hairless skull..
>
> On the cracked feet...
>
> Nervous hands...
>
> With grey moustaches...
>
> The history of fathers' labour is quietly settled.
>
> 🚹 How could they have hidden their pain in front of their children so
> that they would not feel sorry for their suffering?
>
> 🚹How many extra hours do would have sweat for the things children crave?
>
> 🚹How far could the sacrificial creation of a father have grieved himself
> to pull the family cart carrying his wife and children?
>
> 🚹Dads who kiss and wrap their children when they are asleep and leave
> for work, how do they cope when they come home after the children are
> asleep? How many times their hearts do cry silently?
>
> 🚹How they would have faced the miserable life while crossing the ocean
> for more labour? 🚹How cruel would be  the life of father who carries his
> life in constant pain with his wife and children's photo pasted on the head
> of the bed?
>
> FATHERS ARE
>
> ➡Children's carriers
>
> ➡Children's  LEVER
>
> ➡Children's values
>
> Children's suns
>
> ➡Children's compasses
>
> Children's teachers
>
> ➡Children's
>
> Beliefs
>
> 🌺FATHER a representative of:
>
> ·        Pure love
>
> ·        Unadulterated Care
>
> ·        Honest guidance
>
> ·        Reasonable thinking
>
> ·        A lovely treat
>
> ·        unflinching faith
>
> ·        Uninjured word
>
> ·        Sublime advice
>
> ·        No disturbance laughter
>
> ·        Real crying
>
> ·        All of them are happy
>
> ·        Made and brought up.
>
> FRIEND  to a    *FRIEND*
>
> Dad is the one who gave the shoulder to *L.E..A…N*
>
> -------------
>
> *வாட்சப்பில்* *படித்ததில் பிடித்தது*
>
> *அப்பாக்கள்:*
>
> *🌺**ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.*
>
> *ஆனால் *
>
> *ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.*
>
> *🌺🚹**அப்பா...*
>
> *ஒரு மனிதன்**, **பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும்**,
> **திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின்
> நடத்தை**, **பழக்க வழக்கம்**, **பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான
> வழிகாட்டி தந்தையே.*
>
> *🌺🚹**கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல
> தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட
> இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.*
>
> *🚹🌺**தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற
> சிலுவைகள் கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.**ا*
>
> *🌺🚹**ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற
> அக்கறையினதும்**, **அங்கலாய்ப்பினதும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும்
> இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள்
> அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.*
>
> *🌺🚹**அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத
> அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.*
>
> *🌺🚹**தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு
> கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது
> கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே
> வைத்திருக்கிறார்கள்.**ا*
>
> *🌺🚹**தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்*
>
> *பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப்
> பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும்
> அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.*
>
> *🌺🚹**நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான்
> என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும்
> தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.*
>
> *🌺🚹**யானையின் பலம் **தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ**..
> **அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது.* *ஒவ்வொரு
> மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம்
> அவரவர் அப்பாக்களே!*
>
> *🌺🚹**ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல்
> அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.**ر*
>
> *🌺🚹**விழவும்**, **எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு
> நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.*
>
> *🌺🚹**இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின்
> ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற
> முடியாது.*
>
> *🚺🚺**ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின்
> உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.*
>
> *🚹🚹**தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட
> வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.*
>
> *🚹**ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக**, **அவர்களுக்கு கடைசிவரை
> தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்**?*
>
> *🚹**பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு
> நடந்திருப்பார்கள்**?*
>
> *🚹**எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்**?*
>
> *அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்**?*
>
> *🚹**எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்**?*
>
> *🚹**எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்**?*
>
> *🚹**முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்**..*
>
> *வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...*
>
> *நரம்பு தெரியும் கைகளில் ...*
>
> *நரை விழுந்த மீசைகளில் ...*
>
> *அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.*
>
> *🚹**தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று
> அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்**?*
>
> *🚹**ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள்
> கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்**?*
>
> *🚹**மனைவி**, **பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக
> அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்*
> *?*
>
> *🚹**பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல்
> முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர்**,
> **பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக்
> கொள்கிறார்கள்**? **எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்**?*
>
> *🚹**இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும்
> அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது**? **வேலை
> இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின்
> உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது**?*
>
> *🚹**படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின்
> புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை
> சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது**?*
>
> *🚹**வீரம்**, **துணிச்சல்**,*
>
> *விடாமுயற்சி**,*
>
> *நம்பிக்கை**, **உழைப்பு..*
>
> *இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து
> விடுகிற பெரிய வெகுமதிகள்.*
>
> *🌺**ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்**,*
>
> *குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு
> பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள்**, *
> *வழிகாட்டல்கள்**, **அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.*
>
> *“**எதுக்கும் பயப்படாதே**”*
>
> *“**ஒன்றுக்கும் யோசிக்காதே**”*
>
> *“**எல்லாம் வெல்லலாம்**”*
>
> *“**மனசை தளரவிடாதே**”*
>
> *“**நான் இருக்கிறேன்**”*
>
> *இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும்
> திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.*
>
> *🌺**அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த
> வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.*
>
> *🌺**தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம்
> நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும்
> தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.*
>
> *🚹**அப்பாக்கள்:*
>
> *➡**பிள்ளைகளின் சுமைதாங்கிகள்*
>
> *➡**பிள்ளைகளின் நெம்புகோல்கள்*
>
> *➡**பிள்ளைகளின் அச்சாணிகள்*
>
> *➡**பிள்ளைகளின் சூரியன்கள்*
>
> *➡**பிள்ளைகளின் திசைகாட்டிகள்*
>
> *➡**பிள்ளைகளின் ஆசிரியர்கள்*
>
> *➡**பிள்ளைகளின்*
>
> *நம்பிக்கைகள்*
>
> *🌺**அப்பா:*
>
> *தூய்மையான*
>
> *அன்பு**,*
>
> *போலியற்ற*
>
> *அக்கறை**,*
>
> *நேர்மையான வழிகாட்டல்**,*
>
> *நியாயமான*
>
> *சிந்தனை**,*
>
> *நேசிக்கத்தக்க உபசரிப்பு**,*
>
> *மாறுதலில்லா நம்பிக்கை**,*
>
> *காயங்களற்ற*
>
> *வார்த்தை**,*
>
> *கம்பீரமான*
>
> *அறிவுரை**,*
>
> *கலங்கமில்லா*
>
> *சிரிப்பு**,*
>
> *உண்மையான*
>
> *அழுகை**,*
>
> *என அத்தனையும் உளமகிழ்ந்து*
>
> *செய்து வளர்த்தவர்.*
>
> *தோழனுக்கு தோழனாய் *
>
> *தோள் கொடுத்தவர் அப்பா.*
>
> *Regards*
>
> *V.Sridharan*
>
> *Trichy*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1922847647.859149.1705254181631%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1922847647.859149.1705254181631%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooHmy5y2ozC-5mzQLxJRpEC5xk_w6zAcZiK7qTx-ZzRQw%40mail.gmail.com.

Reply via email to