கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்கு விலை சரிந்து வருகிறதே..?
‘‘கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய், 34% உயர்ந்து, 3,884 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 21% உயர்ந்து, 180.3 கோடி ரூபாயாக உள்ளது.எனினும், வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவினங்கள் கழிக்கப்படும்முன் உள்ள வருவாயாகிய எபிட்டா (EBITDA) மார்ஜின் 8.4 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.இந்த நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகள், பங்குச் சந்தைக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால், ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்கு விலை 7 சதவிகிதத்துக்குமேல் இறங்கியது.’’ டாடா மோட்டார்ஸ் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறதே? ‘‘இந்த நிதி நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அதன் பங்கு விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்கீழ் இயங்கிவரும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்களின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், கார்களின் விலையை உயர்த்தவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 2-ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில், சந்தையின் எதிர்பார்ப்பால் பங்கு விலை எகிறி வருகிறது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை யிலான நான்கே நாள்களில் டாடா மோட் டார்ஸ் பங்கு விலை 11% உயர்ந்து, 900 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.’’ மாருதி சுஸூகி பங்கு விலை சூப்பராக உயர்ந்து விட்டதே? ‘‘இந்தியாவின் மிகப் பெரிய கார் நிறுவன மான மாருதி சுஸூகி டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 33.27% உயர்ந்து, 3,130 கோடி ரூபாயாக உள்ளது. இது சந்தையின் எதிர்பார்ப்பைவிட அதிகம். இந்த நிறுவனத்தின் நிதிநிலை சிறப்பாக இருந்ததால், தரகு நிறுவனங் கள் மாருதி சுஸூகி பங்குக்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளன. மாருதி சுஸூகி பங்குகளை வாங்கலாம் என மார்கன் ஸ்டான்லி, ஹெச்.எஸ்.பி.சி போன்ற சர்வதேச தரகு நிறுவனங்கள் பரிந்துரை வழங்கியுள்ளன. இதனால், பிப்ரவரி 1-ம் தேதி வர்த்தகத்தில் மாருதி சுஸூகி பங்கு விலை 5% ஏற்றம் கண்டது.’’ எல் & டி பங்கு விலை இறங்க என்ன காரணம்? ‘‘எல் & டி பங்கு கடந்த சில மாதங்களாக சிறப்பான ஏற்றம் கண்டுவருகிறது. 2023-ம் ஆண்டில் மட்டும் எல் & டி பங்கு 69% வருமானம் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனம் நிறைய ஆர்டர்களைக் கைப்பற்றி வருவதால், இந்தப் பங்குக்கு சந்தை நல்ல விலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில், எல் & டி நிறுவனம் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய், 19% உயர்ந்து, 55,128 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 15% உயர்ந்து, 2,947 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிதிநிலை முடிவு சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத தால், ஜனவரி 31-ம் தேதி எல் & டி பங்கு விலை கிட்டத்தட்ட 7% வரை இறங்கியது. ஆனால், எல் & டி பங்குகளை வாங்கலாம் என ஜெஃப்ரீஸ், மார்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி போன்ற சர்வதேச பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.’’ இந்தியா சிமென்ட்ஸ் பங்கு விலை இறங்க என்ன காரணம்? ‘‘சென்னையில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பிப்ரவரி 1-ம் தேதி இந்தியா சிமென்ட்ஸ் பங்கு விலை 9% இறங்கியது.’’ இப்போது வாங்குவதற்கு ஏதாவது ஸ்மால்கேப் பங்குகளைச் சொல்லுங்களேன்..? ‘‘ஸ்மால்கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில், இந்த இரண்டு ஸ்மால்கேப் பங்குகளையும் பரிந்துரை செய்திருக்கிறது பங்குத் தரகு நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ். தற்போது முதலீடு செய்ய சாடின் கிரெடிட்கேர், இசட் எஃப் ஸ்டீரிங் கியர் இந்தியா ஆகிய இரண்டு ஸ்மால்கேப் பங்குகளை பரிந்துரை செய்து உள்ளது. இந்த இரண்டு பங்குகளையும் நிறுவனத்தின் அடிப்படையைக் கொண்டு தேர்வு செய்துள்ளது. இந்த இரண்டு பங்கு களையும் பங்கு விலை இறங்கும்போதெல்லாம் கூடுதலாக வாங்கிக்கொள்ளலாம். சுமார் 2 அல்லது 3 காலாண்டுகளுக்கு இந்த இரு பங்குகளையும் இதே முறையில் வாங்கலாம் என ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் பரிந்துரைத்துள்ளது.’’ கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பங்கு விலை அதிரடியாக உயர்ந்துள்ளதே..! ‘‘எஃப்.எம்.சி.ஜி துறை நிறுவனமான கோத்ரேஜ் கன்ஸ்யூமர் டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 6.41% உயர்ந்து, 581கோடி ரூபாயாக உள்ளது. காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருந்ததால், பிப்ரவரி 1-ம் தேதி வர்த்தகத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பங்கு விலை 13% வரை உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது’’ என்ற ஷேர்லக், ஏதோ ஒரு வாட்ஸ்அப் தகவல் வரவே அவசரமாகக் கிளம்பினார். [image: ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன்] நிம்மதியான வாழ்க்கைக்கு நிதித் திட்டமிடல்..! நாணயம் விகடன் ‘நிம்மதியான வாழ்க்கைக்கு நிதித் திட்டமிடல்..!’ என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பை நடத்த உள்ளது. கட்டணம் ரூ.300 ஆகும். 2024 பிப்ரவரி 17, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தனிநபர் நிதியியல் நிபுணர் (www.ducatz.in) ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் தனிநபர் நிதி மேலாண்மையில் 15 ஆண்டுகளுக்கு மேல் நிபுணத்துவம் பெற்றவர். தனிநபர் நிதி, நிதித் திட்டமிடல், காப்பீடு, குடும்ப பட்ஜெட், முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். Kalyan Jewellers' share price is falling..? Kalyan Jewelers has announced its December quarter results. The company's revenue rose 34% to Rs 3,884 crore. Net profit rose 21% to Rs 180.3 crore. However, the EBITDA margin declined to 7.1 percent from 8.4 percent. On January 31 and February 1, the share price of Kalyan Jewelers fell by more than 7 percent. Tata Motors stock continues to rise? "The financial institution's share price is rising due to high expectations for its quarterly financial results. In particular, the sales of Jaguar Land Rover under Tata Motors has set a new record. Also, Tata Motors plans to increase the prices of the cars. With the December quarter results of Tata Motors to be released on February 2, the stock price is soaring on market expectations. In the four days from January 29 to February 1, the share price of Tata Motor Darz rose 11% to touch a new high of Rs 900. Is Maruti Suzuki's share price super high? India's largest car company Maruti Suzuki has released its December quarter financial results. The company's net profit rose 33.27% to Rs 3,130 crore. This is more than the market expectations. Brokerages have given good ratings to Maruti Suzuki stock as the company's financials have been strong. International brokerage firms like Morgan Stanley and HSBC have recommended Maruti Suzuki to buy shares. As a result, Maruti Suzuki's share price rose by 5% in February 1st trading. What caused the L&T stock price to fall? “The L&T stock has seen a remarkable rally over the past few months. L&D stock has returned 69% in 2023 alone. As the company is capturing a lot of orders, the market is giving a good price to this stock. Meanwhile, L&T has released its December quarter financial results. The company's revenue rose 19% to Rs 55,128 crore. Net profit rose 15% to Rs 2,947 crore. L&T's share price fell almost 7% on January 31 as the company's financial results did not meet market expectations. However, international stockbroking firms like Jefferies, Morgan Stanley, Goldman Sachs, Citi have suggested buying L&T shares. What caused India Cements share price to fall? "The enforcement department raided the office of India Cements in Chennai. The raid is said to have been conducted on the suspicion that India Cements may have violated provisions of the Foreign Exchange Management Act. Due to this, India Cements share price fell by 9% on February 1. Tell me some smallcap stocks to buy now..? ``Investors showing more interest in smallcap stocks, these two smallcap stocks have been recommended by stockbroker HDFC Securities. Satin Creditcare and ZF Steering Gear India are currently recommending two small cap stocks for investment. These two stocks have been selected on company basis. These two stocks can be bought in addition whenever the stock price falls. HDFC Securities has suggested buying these two stocks in a similar manner for about 2 or 3 quarters.” Godrej Consumer's share price has risen dramatically..! FMCG major Godrej Consumer has released its December quarter financial results. The company's net profit rose by 6.41% to Rs 581 crore. As the quarterly results were in line with market expectations, Godrej Consumer's share price rose as much as 13% to hit a new high in the February 1st trade,'' said Sherlock, hurrying to get some WhatsApp information. Srinivasan Subramanian Financial planning for a peaceful life..! Nanayam Vikadan is going to conduct an online paid class on 'Financial Planning for a Peaceful Life..!' The fee is Rs.300. The program will be held on Saturday, February 17, 2024 from 10.30 am to 12 pm. Personal Finance Expert (www.ducatz.in) Srinivasan Subramanian conducts the program. He has over 15 years of expertise in personal finance management. Specializing in Personal Finance, Financial Planning, Insurance, Family Budgeting, Investment and Wealth Management. KR IRS 1224//2224 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorMBSJw6Hea-adyLDH_1T23n%3DHR61T0SDax0iLo_fcZxQ%40mail.gmail.com.
