மொபைலில் விளம்பரம் பார்த்தால் பணம் கொட்டுமா? My V3 Ads மோசடி வரலாறு..!
வீட்டு உபயோகப் பொருள்களையும் `MyV3Ads’ என்கிற பிராண்டின்கீழ் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி, இந்த நிறுவனத்தின் உறுப்பினர்களிடையே விற்பனை செய்து வருவதன் மூலமும் பெரும் வருமானத்தை ஈட்டி வருகிறது. எப்படி எல்லாம் சைடு வருமானம் சம்பாதிக்கலாம் எனப் பலரும் தேடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், மொபைலில் விளம்பரம் பார்த்தாலே பணம் கொட்டும் எனக் கோவையில் கடை போட்டது `My V3 Ads' என்ற மொபைல் ஆப் நிறுவனம். ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தற்போது My V3 Ads நிறுவனம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காவல்துறையும் இவ்விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. `My V3 Ads’ நிறுவனத்துக்கு ஆதரவாக திடீரென கோவையில் குவிந்த முதலீட்டாளர்கள் - புகாரும் பின்னணியும்! `My V3 Ads’ நிறுவனத்துக்கு ஆதரவாக திடீரென கோவையில் குவிந்த முதலீட்டாளர்கள் - புகாரும் பின்னணியும்! My V3 Ads நிறுவனம் பற்றி பா.ம.க-வை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கு My V3 Ads நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தங்களது பலத்தைக் காட்டும் வகையில், நீலாம்பூர் அருகே புறவழிச் சாலையில் My V3 Ads நிறுவனத்துக்கு ஆதரவாக அதில் முதலீடு செய்த 10,000-க்கும் மேற்பட்டோர் பெரும் கூட்டமாகத் திரண்டனர். எனினும், My V3 Ads குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். My V3 Ads நிறுவனம் ஏற்கெனவே கோவையில் தொடங்கப்பட்டு மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டது. அதன் உண்மைத் தன்மை என்னவென்று நாணயம் விகடன் கண்டறிந்து சொல்ல முடியுமா? என்கிற வேண்டுகோள் வரவே, சில மாதங்களுக்கு முன்பே விசாரிக்க ஆரம்பித்தோம். `My V3 Ads’ நிறுவனத்தின் திட்டம்... `My V3 Ads’ என்கிற நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக புராடக்ட் லாஞ்ச், கிரவ்ன் உறுப்பினர்கள் மீட் எனக் கோவையில் அடிக்கடி கூட்டத்தை நடத்துவது தொடர்கதையாக இருந்தது. ரூ.100 நுழைவுக்கட்டணமாக நிர்ணயித்து, மிகப் பெரிய கொடிசியா வளாகத்தில் நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, `குஜராத்தி சமாஜ்’ மாதிரியான பிரபல ஹாலில் நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி... இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது ---------------------------------------------------------------------------------------------- Does watching ads on mobile cost money? My V3 Ads Fraud History..! The company has also been making huge profits by selling home appliances under the brand name ``MyV3Ads'' from last March, among its members. At a time when many people are looking for ways to earn a side income, a mobile app company called ``My V3 Ads'' has set up shop in Coimbatore to make money by watching ads on mobile. We have already reported about the activities of this company. In this situation, now My V3 Ads company has come to light. The police have also registered a case in this matter. Investors suddenly gathered in Coimbatore in support of ``My V3 Ads'' - complaint and background! Investors suddenly gathered in Coimbatore in support of ``My V3 Ads'' - complaint and background! The Coimbatore Crime Branch has registered a case against the company My V3 Ads based on a complaint filed by Ashok Srinidhi of the BJP. My V3 Ads objected to this. And to show their strength, more than 10,000 people who had invested in My V3 Ads gathered in a huge crowd on the bypass road near Neelampur. However, the police have started an investigation into My V3 Ads. My V3 Ads company is already started in Coimbatore and has collected crores from people. Can the coin find out what its true nature is? When the request came, we started investigating a few months ago. The project of ``My V3 Ads''... For the past few years, the company called ``My V3 Ads'' has been holding frequent meetings in Coimbatore for product launches and Crown members meet. Whether it is held at the huge Kodisia campus with an entry fee of Rs.100, or at a famous hall like the ``Gujarati Samaj'', the show draws crowds. KR IRS 1224//2224 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqLVxGRi10QDzgekAXBPoiqUmPx_M4vQpS26HmYL0Hb3g%40mail.gmail.com.
