ஒரு மாடு மேய்ச்சலுக்காக ஒரு காட்டுக்குள் சென்றது.



மாலை நேரம் நெருங்கியது. ஒரு புலி தன்னை நோக்கி வருவதை மாடு பார்த்தது.



மாடு பயத்தில் ஓட ஆரம்பித்தது . அந்த புலியும் அதன் பின்னால் ஓட ஆரம்பித்தது.
ஓடும் மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டது. பயந்துபோன மாடு குளத்துக்குள்
நுழைந்தது.



புலியும் அதனை பின்தொடர்ந்து குளத்திற்குள் நுழைந்தது. அந்த குளம் மிகவும்
ஆழமாக இல்லை, அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது மற்றும் சேறு நிரம்பியிருந்தது.



அவற்றின் இடையிலான தூரம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது புலி
சேற்றில் சிக்கியதால் எதுவும் செய்ய முடியவில்லை.



மாடு மெதுவாக சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கியது. புலியின் அருகில் மாடு
இருந்தபோதும் புலி அதனை பிடிக்க முடியவில்லை. அவர்கள் மெதுவாக சேற்றுக்குள்
மூழ்க ஆரம்பித்தனர். இருவரும் சேற்றுக்குள் கிட்டத்தட்ட கழுத்து வரை
மூழ்கிவிட்டனர்.



சிறிது நேரம் கழித்து, மாடு புலியைக் கேட்டது,



மாடு: உனக்கு மாஸ்டர் அல்லது உரிமையாளர் இருக்கிறாரா?



புலி: நான் காட்டில் ராஜா. நான் யாருக்கும் சொந்தமில்லை. நானே இந்த காட்டின்
உரிமையாளன்.



மாடு: ராஜாவா இருந்து என்ன பலன்? நீயும் என்னைப் போல மாட்டிக்கிட்டு இருக்க.

புலி: நீயம் தான் என்ன போல சாகப்போற. உங்கிட்ட மாஸ்டர் இருந்தாலும் உன் நிலை
என்னுடையது போலவே தான் இருக்கு.



மாடு: இல்லவே இல்லை. என் எஜமானர் மாலையில் வீட்டிற்கு வந்து என்னை தேடி
பார்ப்பர், அவர் நிச்சயமாக என்னைத் தேடி இங்கு வந்து என்னை இந்த மண்ணிலிருந்து
வெளியே எடுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உங்களை யார் அழைத்துச்
செல்வார்கள்?



சிறிது நேரத்தில், ஒரு மனிதன் அங்கு வந்து மாட்டை சேற்றிலிருந்து வெளியே
எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.



செல்லும்முன், மாடு மற்றும் அதன் உரிமையாளர் இருவரும் நன்றியுடன் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டனர். அவர்கள் விரும்பினாலும் புலியை சேற்றில் இருந்து வெளியே
எடுக்க முடியவில்லை, ஏனெனில் அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம்.



மாடு - அர்ப்பணிப்புள்ள இதயத்தின் சின்னம்.



புலி - இறுமாப்புள்ள மனம்.



உரிமையாளர் - கடவுளின் சின்னம்.



மண் - இதுதான் உலகம்.



யாரையும் நம்பாமல் இருப்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் நான் தான் எல்லாம், எனக்கு
யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும்.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

A cow went into a forest for grazing.



The evening approached. The cow saw a tiger coming towards her.



The cow started running in fear. The tiger also started running behind it.
A running cow saw a pond ahead. The frightened cow entered the pond.



The tiger followed it and entered the pond. The pool was not very deep, had
little water and was full of mud.



The distance between them was very short. But now the tiger was stuck in
the mud and could not do anything.



The cow slowly began to sink into the mud. Even when the cow was near the
tiger, the tiger could not catch it. They slowly began to sink into the
mud. Both were almost up to their necks in mud.



After some time, the cow asked the tiger,



Cow: Do you have a master or an owner?



Tiger: I am the king of the jungle. I don't belong to anyone. I am the
owner of this forest.



Cow: What is the benefit of being a king? You are stuck like me.

Puli: Justice is the way to die. Even with a master like you, your
situation is the same as mine.



Cow: Not at all. My master will come home in the evening and look for me,
he will surely come here looking for me and take me out of this earth and
take me home. Who will take you?



In no time, a man came there and took the cow out of the mud and took it
home.



Before leaving, both the cow and its owner looked at each other gratefully.
They could not pull the tiger out of the mud even if they wanted to, as it
might pose a threat to their lives.



Cow - symbol of devoted heart.



Tiger - A troubled mind.



The owner is a symbol of God.



Soil - this is the world.



Not trusting anyone is a good thing, but the arrogance that I am everything
and I don't need anyone's support will sow the seeds of destruction.    KR
IRS  24//25/2/24

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooONaSZrGOkx7fQwuVfU7h1M7v9QOq9ewAod--VEZDmVQ%40mail.gmail.com.

Reply via email to