இதோ இதுவரை கர்மயோகத்தின் தொகுப்பு...
*குழப்பம்* 😵💫 அர்ஜுனன் மட்டுமல்ல நாமும் தான்...😁.. ஒரு கருத்து உடையும் போது குழப்பம் வருகிறது. அதுவே வளர்ச்சிக்கான முதல்படி. பலர் கர்மா = விதி என்று நினைக்கிறார்கள். அது தவறு. *கர்மாவுக்கு 3 பகுதிகள்:* 1. செயல் (Action) 2. மனதில் இருக்கும் தடம் (Impression) 3. எதிர்காலத்தில் வரும் செயல் (Future action) ஒவ்வொரு விளைவும் ஒரு புதிய காரணமாக மாறுகிறது. *வாழ்க்கை ஒரு வட்டம் (Circle)* உங்கள் மனதில் இருக்கும் பதிவு உங்களுக்கு அதே மாதிரி சூழ்நிலைகளை ஈர்க்கும். அதனால் தான் “இது என் கர்மா” என்று சொல்கிறோம். *செயலில் செயலற்றதை காண்பவன்* *செயலற்றதில் செயலை காண்பவன்* அவனே புத்திசாலி வாழ்க்கையில் செயல் அவசியம்... 1. உடலை பராமரிக்க 2. குடும்பத்தை கவனிக்க 3. சமுதாயத்திற்கு சேவை செய்ய 4. தர்மத்தை காக்க செயல் தேவை. நாம் பெரும்பாலும்: 1. “என்ன கிடைக்கும்?” 2. “மக்கள் என்ன நினைப்பார்கள்?” 3. “நான் தோற்றுவிட்டால்?” என்று கவலைப்படுகிறோம் அதுவே மனஅழுத்தம். *கிருஷ்ணரின் மஹாவாக்கியம்* “உனக்கு செயலில் மட்டுமே உரிமை உண்டு; பலனில் இல்லை.” *கர்மயோகம் என்ன கற்பிக்கிறது?* 👉 வேலை செய்வது மட்டும் அல்ல 👉 வேலைக்குள் யோகத்தை கொண்டு வருவது இதை தியானமும் செயல்பாடும் தரும்.. *ஒரு கர்மயோகி:* ✅ செயலில் திறமையானவர் ✅ உள்ளே அமைதியானவர் ✅ தோல்வியில் உடையாதவர் ✅ வெற்றியில் அகங்காரம் கொள்ளாதவர் “நான் செய்கிறேன்” என்ற அகங்காரம் கரையும் போது… செயல் தியானமாக மாறுகிறது... வாழ்க்கை யோகமாக மாறுகிறது... ☺️🙏 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsPEspeO-xTL-2bFXYLZo7ARSz0k_GoOZzYBtpcFNJj9w%40mail.gmail.com.
