உதகை - நவம்பர் 28. கம்ப்யூட்டர் வோர்ல்டு, உதகை சார்பில் உபுண்டு
இன்டிரிபிட் ஐபக்ஸ் உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள், அரசு
அலுவலர்கள், மாணவர்கள், கணினி விற்பனையாளர்கள், கனேடியர் என பலர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கலந்து கொண்டோருக்கு உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் பொதிகள்
பராமரிப்பு, வைன் பயன்படுத்தி விண்டோஸ் மென்பொருள் நிறுவும் முறை, இணைய
வசதிகள் போன்ற விடயங்கள் செய்முறையாக விளக்கப்பட்டன.

நிகழ்ச்சியினை உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் இராமதாசும்
பத்மநாதனும் நடத்திக் கொடுத்தனர். அனைவருக்கும் உபுண்டு வட்டுக்கள்
வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்த
கம்ப்யூட்டர் வோர்ல்டு டெர்ரன்ஸ் எஸ் இராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த
நன்றிகள்.

காட்சிப்பதிவுகளைக் காண: http://aamachu.livejournal.com/1267.html


-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Reply via email to