உபுண்டு தமிழ் குழுமத்தின் கடந்த வார கூட்டம்
ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருண், அமாசு, சேது மற்றும் பத்து
ஆகியோர் கலந்துகொண்டனர். அருண் ஒவ்வொருவரும்  பயன்யடுத்தும் இயங்குதளம் பற்றி
கேட்டார். எல்லோரும் உபுண்டு 8.10 குனோமை   பயன்யடுத்துவது உறுதிசெய்யப்பட்டது.
பிறகு சேது அவர்கள் சில நாட்களுக்கு முன் திரு. ஆர்னி ஜியோத் ( மொழி சார்பு
பொறுப்பாளர் - உபுண்டு) அவர்களிடம் மொழி அமர்வின் நுணுக்கம் பற்றி
கலந்தாலோசித்ததை கூறினார். தமிழ் எழுத்துறுக்கள் பலவற்றையும், குனோம் மற்றும்
கே.டீ.ஈ. பணி சூழல் இவற்றில் பல நிலைகளில் வடிவமைப்பு பற்றியும்
விவாதிக்கப்பட்டது. தமிழ் மொழியாக்கம் மற்றும் கையேடு தயாரிப்பு பற்றியும்
விவாதிக்கப்பட்டது. இவ்விவாதம் 4 மணிக்கு துவங்கி சுமார் 6 மணிவரை நீடித்தது.
இதனிடையே குமரன் அவர்கள் வீட்டுக்கணினி வேலைசெய்யாததால் கூட்டத்தில்
கலந்துகொள்ளமுடியவில்லை என தெரிவித்தார்.

கூட்டக்கலந்துரையாடல் முழுவதும் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அறியலாம்

http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html

பத்மநாதன்
-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க