On Fri, 2009-03-20 at 20:10 +0800, Elanjelian Venugopal wrote:
> உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில்
> நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில்
> இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில்
> ஐயமில்லை.
> 
> சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இலவசமாக வெளியிட்ட
> எழுத்துருகளைக் கொண்டு எனது பணிமேடையை நான் மாற்றியமைத்துக் கொண்டேன்.
> ஆதலால் உபுண்டுவில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பதற்க்கு அழகாகவும்,
> படிப்பதற்கு சுலபமாகவுமுள்ளது. இவ்வெழுத்துருகள் இலவசமாக
> வெளியிடப்பட்டாலும் அவை கட்டற்ற உரிம அடிப்படையில் வெளியிடப்பட்டனவா எனத்
> தெரியவில்லை.

விசாரித்துப் பார்க்கராம். அவற்றை இறக்குதற்குரிய முகவரி?

> 
> மற்றுமொரு தகவல். இங்கு மலேசியாவிலுள்ள இரண்டு தமிழ்ப்பள்ளிகளில் நான்
> கணினிக்கூடங்களை அமைப்பதுபற்றி ஏற்கனவே இக்குழுமத்தில்
> அறிவித்திருக்கின்றேன். அக்கூடங்களில் ஒரு கூடத்தை ஓரளவிற்கு அமைத்து
> முடித்துவிட்டோம். மொத்தம் 41 கணினிகளில் 21ஐ பொருத்திவிட்டோம். மீதமுள்ள
> 20ஐ இரண்டொரு நாள்களில் பொருத்திவிடுவோம். உபுண்டு 8.10 LTSP மிகச்
> சிறப்பாக சிக்கலின்றி வேலை செய்கின்றது. (இன்னும் இரண்டு வாரங்களில்
> மாணவர்கள் கணினிக்கூடத்தை முழுமையாக பயன்படுத்தும்போது சிக்கல்கள்
> வெளிப்படலாம்.)

மட்டற்ற மகிழ்ச்சி.


>  தமிழைப் பயன்படுத்துவதிலும் இதுவரை எச்சிக்கலையும்
> நாங்கள் எதிர்நோக்கவில்லை. என்ன நிறைய ஆங்கிலச் சொற்கள்
> தமிழ்ச்சொற்களுக்கிடைய உபுண்டுவில் இன்னும் இருப்பது உருத்தலாக
> இருக்கின்றது. இச்சிக்கல்களில் பல விரைவில் வெளியிடப்படவுள்ள ஜோண்டியில்
> தீர்க்கப்பட்டிருக்குமென எதிர்பார்க்கலாமா?
> 

உபுண்டு பல இடங்களிலும் உருவாக்கப்படும் பொதிகளை உள்ளடக்கி வெளியிடப்படுவது
தாங்கள் அறிந்த ஒன்று. அதில்,

குநோம் - திவா & குழு
கேபசூ - நானும் சிலரும்
ஓபன் ஆபிஸ் - முகுந்த்
பயர்பாக்ஸ் - பெலிக்ஸ் 
டெபியன் நிறுவி - திவா

இவற்றில் திவா தமது பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறார். கேபசூவிற்கு
குறைந்த பட்ட தேவையை பூர்த்தி செய்யவாது முயற்சி செய்கிறேன்.
பயர்பாக்ஸிற்கு பெலிக்ஸ் கடந்த முறை மொழிபெயர்ப்பு செய்துவிட்டதாக நினைவு.
ஓபன் ஆபீஸ் நிலவரம் - புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது.

அதைத் தாண்டி பிட்கின் எகிகா(?) நெட்வொர்க் மேனேஜர் போன்ற பயன்பாடுகள் வேறு
இடங்களில் உருவாக்கப்படுகின்றன. அங்கே அவற்றுக்கு மொழிபெயர்ப்பு செய்ய
வேண்டும். அப்படி இல்லையென்றால் அப்பயன்பாடுகளை தேர்வு செய்து லாஞ்சுபேடில்
செய்ய வேண்டும். இதில் உள்ள சிக்கல் தங்களுக்கு புரிந்திருக்கும் என
நினைக்கிறேன்.

மேலும் சொற்கள் பொதுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
மே மாதத்தில் ரெட்ஹாட் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள
முயற்சியான FUEL நிகழ்வொன்றிற்கு சென்னையில் ஏற்பாடு செய்யத் திட்டம்.

https://fedorahosted.org/fuel/

நிறைய பேர் இன்னும் தேவைப்படுகிறார்கள். 

> அடுத்தமுறை நடக்கும் கூட்டத்தில் முடிந்தவரை கலந்துகொள்ள் முயல்கின்றேன்.
> 

வருக!

--

ஆமாச்சு

Attachment: signature.asc
Description: This is a digitally signed message part

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க