ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாராட்டுகள்
குவிந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி தமிழ் திரை இசைக் கலைஞர்கள் சார்பில்
பாராட்டு விழா நடத்தப்பட்டது.
திரைத்துறை சார்பிலும் பாராட்டு விழா நடத்த ரஹ்மானிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 28 ஆம் தேதி ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக
அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றவுடன் அவரைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டார் முதல்வர்.
அப்போது அவர் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று பூரண நலத்துடன் வீடு திரும்பியவர், 28 ஆம் தேதியில் தனது தலைமையில்
ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த விழாவில் அனைத்துத் துறை வல்லுனர்களும் கலந்து கொள்கிறார்கள்.
என்றும் அன்புடன்
'தமிழ்கவி'௧விசதீஷ்
Add more friends to your messenger and enjoy! Go to
http://messenger.yahoo.com/invite/