ஸ்ரீ நீராகத்தான் கோயில் -காஞ்சிபுரம் (திருநீரகம்)
[image: Thiru Neeragathaan Temple- Thiru Neeragam]

*மூலவர் : நீராகத்தான்*

*தாயார் : நிலமங்கைவல்லி*

*கோலம் : நின்ற கோலம்*

*விமானம் : ஜெகதீஸ்வர விமானம்*

*தீர்த்தம் : அக்ரூர தீர்த்தம்*

*மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார்*

*ஊர் : காஞ்சிபுரம்*

*மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு*
*காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் , காஞ்சிபுரத்தில் இந்துக்
கடவுள் திருமாலிற்காக *
*அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுரு
அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாபாடல் பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்ய
தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்ய தேசங்களில் *
*திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு
திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.*

   - *108 திவ்ய தேசங்களில் இத்தலம் 48 ஆவது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு
   திவ்ய தேசமாகும் .*
   - *உலகளந்த பெருமாள் கோவிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய தேசமாகும் .*
   - *கோவிலின்   உள்ளே வலது புறத்தில் தெற்கு நோக்கி அருள் தருகிறார் .*
   - *இக்கோவிலின் வரலாறு சரியாகச் சொல்லப்படவில்லை , பிள்ளைப்பெருமாள்
   ஐயங்கார் **தன் 108 திருப்பதி அந்தாதியில் அக்காலத்தில் அக்ரூர தீர்த்தம்
   இருந்ததாகவும் , மார்கண்டேய முனிவருக்காக பெருமாள் பிரளய வெள்ளத்தில் ஒரு
   பாலகனாக கண்ணன் வளர்ந்த காட்சியைக் காட்டி அருளியது போல் தெரிகிறது.*
   - *காஞ்சியின் மீது பகைவர்கள் படையெடுத்தபோது இக்கோவில்
   அழிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது .அழிவுற்ற கோவிலின் இறைவன்
   திருமேனியை மட்டும் இக்கோவிலில் சன்னதி அமைத்து வழிபட்டு இருக்கலாம் என்று
   கருதப்பெறுகிறது, *


*அந்தணச் சிறுவனாக அவதரித்த திருமால், மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம்
கேட்க, அதற்கு மன்னனும் தர இசைகிறான். நெடிய தோற்றம் கொண்டு விண்ணையும்,
மண்ணையும் இரு அடிகளால் அளந்து விடுகிறார். மூன்றாம் அடி வைக்க இடமில்லாததால்,
அதை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண இயலாமல் மன்னன்
பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்னனின் வேண்டுதலுக்கு இணங்க திருமால் வெவ்வேறு
நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம், காரகம், நீரகம் மற்றும் திருக்கார்வானம் என
வழங்கப்பெறுகிறது. இந்த நான்கு திவ்ய தேசங்களையும் திருமங்கை ஆழ்வார் ஒரே
பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.*


*செல்லும் வழி:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உலகளந்த பெருமாள்
கோவில் அமைந்துள்ளது .*

*“நீரகத்தாய்’ என்று பாடலில் முதல் சொல்லாகவே திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “திருநீரகம்’ முன் காலத்தில் எங்கிருந்தது என
இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவர் மூலவரின் இடத்திலிருந்து
அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம்
செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின்
போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலைக் கண்ணனாக மிதப்பவன். எனவே
பெருமாளை நீரகத்தான் எனத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால்
இந்தத் தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை.
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று
தலங்களும் “திருஊரகத்துடன்’ வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த
திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச் சூழ்நிலையில் இந்த
மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில்
உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது
காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோவிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்
புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.*


*YOUTUBE LINK:*

*https://www.youtube.com/watch?v=xXzu2gfheAo*
<https://www.youtube.com/watch?v=xXzu2gfheAo>

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 *Vanakkam Subbu*

 [image:
wygltUSizKEORrTQqC2Nk0Ug4hf6FDz7Lcu2SYFxlGnPRsLO_T3n36kqlspaL6no.gif]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BpG8pGzc%2BGX%3DLEDhwh4nv4n2teGLzhRuGbWqw5Dnh-5ew%40mail.gmail.com.

Reply via email to