Re: [உபுண்டு பயனர்][MinTamil] Re: உபுண்டு - விண்டோஸ் 7 பிரச்சனை

2011-03-07 Thread கா . சேது | K . Sethu

நண்பர் ஆமாச்சு மற்றும் சென்னையிலுள்ள உபுண்டு பயனர் - உபுண்டு தமிழ் குழும 
உறுப்பினர்களுக்கு,

நண்பர் சே. பார்த்தசாரதியின் வேண்டுகோளை இவ்விழையில் வாசிக்கவும். மின்தமிழ் 
இழை :  https://groups.google.com/forum/?pli=1#!topic/mintamil/or9YdLP_siQ

அவருக்கு முனையம் வழியாக ஆணைகள் உள்ளிட பட்டறிவு இல்லாதலால் தாங்களாவது அல்லது 
சென்னையில் உள்ள வேறு நண்பர் யாரவது அவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு உதவும் 
படி கேட்டுகொள்கிறேன்.

அவரது நண்பர் சுட்டியுள்ள 
http://www.ubuntugeek.com/how-to-restore-grub-boot-loader-after-installing-windows.html//
  
தளத்தில் உள்ளவாறு நிகழ்வட்டு இயக்கத்தில் mount செய்ய  வேண்டிய வகிர்வுகளைக் 
(root வகிர்வு மற்றும் boot தனி வகிர்வானால் அதையும்) கண்டறிந்து mount செய்து 
முதலில் MBR க்கு GRUB-2 ஐ நிறுவி பின் அக் கையேட்டில் குறிப்பிட்டவாறு மேலதிக 
mount களைச் செய்து chroot செய்து update-grub ஆணை கொடுப்பதன் வழியாக grub.cfg 
மேம்படும். (கடைசியாகத்தான் Windows 7 நிறுவி உள்ளதால் இந்த  chroot சூழலில் 
update-grub செய்கை இன்றியமையாதது ). 

ஆமாச்சு, லினக்சுகளில் முனையம் வழியாக ஆணைகள் இட்டு அமைவடிவாக்கங்கள் ஆக்கல், 
திருத்தல் போன்ற பணிகளை புதுப் பயனர்கள் கற்று தன்னம்பிக்கையுடன் செயலாக்க 
கையேடுகள், வழிகாட்டிகள் ஆக்கப்பட வேண்டும். அல்லது இத்தகைய இடர்களுக்கு முகம் 
கொடுப்போருக்கு விண்டோவிலே இலகுவான வரைகலை இடைமுகப்பு வழியாக மாற்றங்கள் 
செய்யக்கூடிய பயன்பாடுகளை உருவாக்க வேண்டும்.

கா. சேது
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கோளங்கரம ்

2009-05-06 Thread கா . சேது | K . Sethu
2009/5/6 sivaji j.g sivaji2...@gmail.com:
 2009/5/5 Sri Ramadoss M ama...@ubuntu.com:
 Quoting கா. சேது | K. Sethu skh...@gmail.com:


 முந்தையதை புதியதிற்கு வழியனுப்புமாறு சிவாஜியிடம் முன்னமே கேட்டுக்
 கொண்டுள்ளேன். விரைவில் செய்து தருவார். சுட்டியமைக்கு நன்றி.

 I think its fine now.


http://ubuntu-tam.org/vaasal/ மற்றும்
http://ubuntu-tam.org/vaasal/planet  தளங்களில்  வலது பக்கம்  பார்க்க
வேண்டியவை என்ற தலைப்புடனான பட்டியலில் முதலாவதாக உள்ள 'கோளரங்கம்' என்ற
தொடுப்பு http://ubuntu-tam.org/vaasal/planet வலைத்தளத்துக்கு என்ற
மாற்றத்தை தாங்கள் செயதுள்ளீர்கள் என ஊகிக்கிறேன்.

ஆனால் பழைய முகவரியான http://www.ubuntu-tam.org/planet/  க்குச்
சென்றால்  இப்போதும் அதே பழைய பக்கத்தைத்தான் காணகிறேன். அது புதிய
http://ubuntu-tam.org/vaasal/planet க்கு வழியனுப்புவதில்லை.

எனவே பழைய முகவரிக்குச் இப்போதும் யாராவது செல்லின் முகவரி மாற்றத்தைப்
பற்றி அறிய வாய்ப்பு இல்லை. http://www.ubuntu-tam.org/planet/  ஐ
http://ubuntu-tam.org/vaasal/planet க்கு redirect  செய்ய
முடியுமான்னால் நன்று.

http://ubuntu-tam.org/vaasal/planet இல் பக்கத்தின் தலைப்பு Planet
அதன் மேலே Home என்பன தமிழாக்கப்படாததற்கு காரணங்கள் ஏதும் உண்டோ?

பழைய தளத்திற்கு செய்தியோடை ஊற்று (
http://www.ubuntu-tam.org/planet/rss20.xml )  இருந்தது போல
புதியதற்கும் அதே அல்லது வேறு ஒன்று ஏற்படுத்தின் வசிதியாக இருக்கும்.  (
முன்னர் பழைய தளத்தில்  பதிவுகள் வருகையில்  செய்தியோடையாக தண்டர்பேர்ட்
அல்லது கூகிள் ரீடர் வழியாகத்தான் வாச்சிப்பது எனது வழக்கம்).

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]ubuntu trincomalee edition (scre enshot)

2009-03-27 Thread கா . சேது | K . Sethu
2009/3/27 M.Mauran | மு.மயூரன் mmau...@gmail.com:
 இவ்வழங்கல் தொடர்பான வலைப்பதிவு:

 http://tamilgnu.blogspot.com/2009/03/trincomalee-gnulinux-live-cd.html

 -மு. மயூரன்

 mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com


நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

தொலை பேசியில் நாம் இன்று கதைத்தவாறு துல்லியம் கூட்டும் autohint
தொடுப்பு மற்றும் sans, serif, mono களின் தமிழ் எழுத்து வடிவங்களுக்கு
முன்னிருப்புகளை மாற்றீடுதல் பற்றிய முறைமைகளைப் பற்றி தாங்கள்
நிகழ்ச்சியின் பின் கொழும்பு வந்த பின் அவதானிக்கலாம்.

மயூரன் மற்றும் எல்லா நண்டபர்களுக்கும்:

முன்னர் தமிழ் இடைமுகப்பில் (அதாவது LANG=ta_IN) பயர்பாக்ஸ்
பயன்படுத்துகையில் லோகித் தமிழ் எழுத்துருவினால் ஏற்படும் நாம் படருதல்
வழு எனக்குறிப்பிட்டு வந்த
(http://ubuntuforums.org/showthread.php?t=889079) வழு, பயர்பாக்சின்
பிற்கால மேம்பாட்டால்  களையப்படுகிறது.

இந்திரிபெட் இறுவட்டை நிகழ்வட்டமர்விற்கு இயக்கினால் அதில்
உள்ளடக்கப்பட்டடுள்ளது Firefox 3.0.3. தமிழ் இடைமுகப்பில், அதன் வழியாக ,
காட்டாக http://www.unicode.org/review/  வலைத்தளத்தைப் பார்ப்பின்
இப்போதும் படருதல் வழு காணலாம்.

ஆனால் தற்போதைய Firefox 3.0.7 க்கு மேம்படுத்தின் அவ்வழு தோன்றுவது இல்லை. :)

முன்னர் வழுவிற்கான காரணி பயர்பாக்ஸ் பயன்படுத்தும் xulrunner-1.9 என்பதை
சோதனைகள் வழியாக அறிந்தேன். Firefox 3.0.3 யை மேம்படுத்தாவிடினும்
முன்னைய xulrunner-1.9 (1.9.0.3+...) யை மட்டும் தற்போதைய xulrunner-1.9
(1.9.0.7+nobinonly-0ubuntu0.8.10.1) க்கு மேம்படுத்தினாலும் வழு
வருவதில்லை என்பது புலனாகியது.

ஹார்டியிலும் மேற்காட்டியவாறே.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 33 , Issue 11

2009-03-25 Thread கா . சேது | K . Sethu
2009/3/24 Ravi rjaga...@gmail.com:
 எனக்கு Original message -ல்
 Today's Topics:

   1. Re: [???_?]? ??? ??? -  (amachu)
   2. Re: [???_?]? ??? ??? -  (amachu)
   3. Re: [???_?]?  (amachu)
   4. Re: [???_?]? ??? ??? -   (??.  | K. Sethu)
 என்று இருப்பவற்றுல் தான் தலைப்புகள் கேள்விக்குறிகளாக உள்ளன.
 ஜெ.இரவிச்சந்திரன்



For the benefit of those who still may be having trouble in reading
Tamil I am replying in English.

Thanks for informing that only in Topics they appear as question marks
for you. What it means is that in your subscription settings for this
mail list for Digest Mode you have chosen MIME option and not Plain
Text and thats the best you could have if you want digest mode.

Is there any reason you prefer Digest Mode over Individual E-mail postings?.

I advise Digest Mode users when replying from a digest posting to do
some editing of the content that comes up on pressing Reply Button:

1. Edit the Subject field to correspond to the individual message you
are replying to.

For example if the message sbject is
[உபுண்டு_தமிழ்]Fonts
or
Re: [உபுண்டு_தமிழ்]Fonts

the  make your subject field to be Re: [உபுண்டு_தமிழ்]Fonts

Avoid having a subject title like Ubuntu-l10n-tam Digest, Vol xx.etc

2. Most importantly do not quote the entire a digest in your reply.
Quote only relevant portions of the message you are responding to by
deleting out the rest (like I have done here). If all digest content
is sent again as part of quoting, especially by many in same day, the
purposes of Digest would get defeated. I will explain this in another
mail especially for the attention of the list owner / moderators.

~Sethu

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 33 , Issue 11

2009-03-23 Thread கா . சேது | K . Sethu
2009/3/24 balaji k s ks_balaj...@yahoo.com

 .மன்னிக்கவும்.
 என்னால் உங்கள் மடலைப் படிக்க முடியவில்லை.
 கேள்விக்குறிகளாகவே  தெரிகின்றன.

 பாலாஜி.

 Sorry,
 I am not able to read your messages (below)
 I see only question marks.
 balaji.


Balaji,

You asked the same question last month.

Looking at the threads in February archive page for this list, at
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-February/thread.html,
 the first thread (subject tile : Fonts) on this started with your
first query,  and it was:
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-February/001715.html.
That had some 11 responses.

Then https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-February/001720.html
was your related post having subject title Ubuntu-l10n-tam Digest,
Vol 32, Issue 5 (so because you had replied to posting of mine from
the digest but not edited the subject title to read as Re: Fonts).
This does not have any responses under same subject heading.

Similarly another - your post
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-February/001726.html
. Under same suject title there were about 8 responses.

So there were some 22 postings of which 3 were yours. Subsequent to
last of those 3, there were responses from others, all in English. May
we know why you had not made any follow up questions then? Any access
problems?

Admitted majority of the responses did not have solution for you but
have you really read through them all?

If you had seen my posting :
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-February/001735.html
you would have learnt that only a partial solution is available which
is to change your settings for the digest from the default Plain Text
Digest to MIME. It is partial because in the Topics section which
comes at the top of any digest, the problem does not get solved.
However  you could atleast read all the postings by members collected
below it. Have you tried it?

To be brief to effect that change:

1. Go to https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam page

2. Go to very bottom of the page and under section Ubuntu-l10n-tam
Subscribers in the bottom cage which has a button titled Unsubscribe
or edit options enter your email id with which you have subscribed to
this list and press that button

3. You are taken to a page with top section titled Ubuntu-l10n-tam
list: member options for user  which identifies your email id after
user. There you enter your password. If you have never set up a
password or forgotten go to the bottom of the page and press Remind
button. You will get a password emailed to you. Copy that from email
and enter in this page and press Login button.

4. Now you will be in the page for configuration changes for your
subscription. Go to the section titled Your Ubuntu-l10n-tam
Subscription Options and for the cage titled Get MIME or Plain Text
Digests? choose MIME instead of Plain text

5. Then press the button titled Submit My Changes that is at the very bottom.

You can then exit and you should be able to read Tamil mail postings
inside the future digest posts (but not Topics list as I mentioned
earlier)

Another alternative is to off the Digest mode (in the cage titled Set
Digest Mode) then you will get  individual emails like most do. Is
there any particular reason you wish to continue with receiving Digest
only?

I would appreciate if you try changing the Digest option to MIME
wait for the next digest to arrive and then give us a feedback and /
or further questions.

~Sethu

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-22 Thread கா . சேது | K . Sethu
 Elanjelian Venugopal:

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இலவசமாக வெளியிட்ட
 எழுத்துருகளைக் கொண்டு எனது பணிமேடையை நான் மாற்றியமைத்துக் கொண்டேன்.
 ஆதலால் உபுண்டுவில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பதற்க்கு அழகாகவும்,
 படிப்பதற்கு சுலபமாகவுமுள்ளது. இவ்வெழுத்துருகள் இலவசமாக
 வெளியிடப்பட்டாலும் அவை கட்டற்ற உரிம அடிப்படையில் வெளியிடப்பட்டனவா எனத்
 தெரியவில்லை.


Amachu:

  விசாரித்துப் பார்க்கராம். அவற்றை இறக்குதற்குரிய முகவரி?


Elanjelian Venugopal:


 http://www.tunerfc.tn.nic.in/MacOSx/Fonts.zip


2006 , செப் - அக் மாதங்களில் tunerfc யாகூ குழும விவாதங்களில் சற்று ஆர்வமாக
கலந்து கொண்ட காலங்களில், TAUN என பெயர் ஆரம்பிக்கும் .ttf கோப்புக்களினாலான
எழுத்துருக்களின் உரிம அடிப்படைகள் என்னவென கண்டறிய காட்கிராப் முகாமைத்துவப்
பணிப்பாளர் (MD) இளங்கோ அவர்களிடம் வினா எழுப்பினேன். ஏனெனில்
அவ்வெழுத்துருக்களில் developed by Cadgraf.. போன்ற தகவல் மட்டுமே
காணக்கூடியதாக இருப்பதினால்.

அவர் எனக்கு அனுப்பிய பதிலில் ( by offlist pvt response) Cadgraf இன்
எழுத்துருக்களை வர்த்தகமற்ற ஏனைய (non-commercial) பயன்பாடுகளுக்கு உரிமம்
அளிக்கப்படுவதாக எழுதியிருந்தார்.

அதாவது அவை கட்டற்ற அல்லது வேறு ஏதாவதொரு திறந்த மென்பொருள் அளிப்புரிமை
ஒன்றுடன் வரவில்லை. தற்காங்களில் மாற்றங்கள் உள்ளனவா என்பதை பற்றி  வசாரிப்பின்
ஆமாச்சு அதைப்பறிய தகவல்களை எழுதுங்கள்.

~சேது


2009/3/21 amachu ama...@ubuntu.com:
 On Sat, 2009-03-21 at 17:33 +0800, Elanjelian Venugopal wrote:

 தற்போது உபுண்டுவில் OOo 2.4.1 தான் இயல்பாக ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த
 வெளியீட்டில் OOo 3.1 ஏற்றப்படும் வாய்ப்பு உள்ளதா?

 பாருங்கள்..

 http://packages.ubuntu.com/jaunty/openoffice.org - 3.0.1

 --

 ஆமாச்சு



 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணைய லாம்

2009-03-22 Thread கா . சேது | K . Sethu
2009/3/21 amachu ama...@ubuntu.com

 On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote
  அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான
  வழி எதுவும் தெளிவாக இல்லை.


 உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம்
 இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312



கெய்ம் (gaim) ஆனது பிட்ஜின் (pidgin) என பெயர் மாறியது 2007 இல்
எனத்தெரிகிறது. 7.10 (கட்சி) முதல் கனோமில் Applications -- Internet --
Pidgin Internet Messenger என்றே இருப்பதால் தங்கள் மேற்குறிப்பிட்ட
கையேட்டிலும் அதற்கேற்பத் திருத்தங்கள் செய்யுங்கள். மேலதிகமாக மிகப் பழைய
வெளியீடுகள் பயன்படுத்துவோர்களுக்காக Pidgin க்குப்பதில் Gaim என இருப்பின்
அதையே சொடுக்கும்படி குறிப்பிடலாம்.

இந் நிரலுக்கான பயனரது விருப்பு அமைப்புக்களை வைத்திருக்கும் அடைவு முன்னர்
gaim க்கு ~/.gaim எனவிருந்தது தற்காலங்களில் pidgin க்கு அது ~/.purple
எனவுள்ளது. (~/.pidgin அல்ல)

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-04 Thread கா. சேது | K. Sethu
முதல் மடலில் நான் சுட்டிக்காட்டிய 4 வது மடல் பற்றி இவ்வாறு
குறிப்பிட்டுருந்தேன்.

//வழு 4 ஆனது TSCu எழுதுருக்களின் ஆதிக்கத்தினால் கூகிள் அஞ்சல் இடைமுகப்பு
மற்றும்  பலகணியில் (task bar) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயல்
நிரல்களைக் காட்டும் கீற்றுகளிலும்,  ஆஸ்கியின் மேல் (128-255) அரங்கில்
உள்ள குறியீடுகள் (- அம்புக்குறிகள், elipses) அவற்றிற்கான குறியேற்ற
இடங்களில் பொருத்தப்பட்ட தஸ்கி எழுத்துருவங்களைக் காண்பித்தல். (இதன்
திரைக்காட்சியை அடுத்த மடலில் இடுவேன்) . எல்லா  TSCu எழுத்துக்களயும்
அகற்றினல் இவ்வழு ஏற்படுவதில்லை.//

அவ்வழு தமிழ் மொழியிடச்சூழலில் பயர்பாக்சில் மட்டும் ஏற்படுகிறது.  மேலும் பல
செயலிகளை இயக்குகையில்  கீழே பலகத்திnf அவற்றின் தத்தல்களிலும் தோன்றுகிறது.

தமிழ் மொழியிடச்சூழலில்  இவ்வழுவைக் காட்டும் ஒரு திரைக்காட்சி :
http://i35.tinypic.com/2jbmm91.jpg . பயார்பாக்சை மட்டும் ஆங்கில
மொழியிடச்சூழலில் இயக்கும் போது தெரிவது :
http://i35.tinypic.com/29kpf21.jpg.  (அதாவது இரண்டுக்கும்
மேசைத்தளத்திற்கு  தமிழ் மொழியிடச்சூழலில் தான். ஆனால்
இரண்டாவதில் பயர்பாக்சை ஆரம்பித்தது LANG=en_US.UTF-8 firefox என முனையத்தில்
கட்டளை கொடுத்து. அதாவது மேசைத்தளம் ta_IN, பயர்பாக்ஸ் மட்டும் en_US
மொழியிடச்சூழல்). ஆதாலால் இரண்டிலும் பலகத்தில்,   தொடர்ச்சி உள்ளது எனபதைக்
காட்டும் Elipses எனப்படும்  மூன்று புள்ளிகளாலான ('...') குறியீடு அதே ஆஸ்கி
குறியேற்றம் உள்ள தஸ்கியின்  'ஸ' வாகத் தோன்றுகின்றது.  அவற்றை சிவப்பு
வட்டங்களிட்டு காட்டியுள்ளேன். அதே போல   ஆங்கில மொழியிடச்சூழலில் (என்னால்
சிவப்பு கீழ்கோடிடிப்பட்ட) இரட்டை மற்றும் ஒற்றை அம்புக்குறிகள் மற்றும் சில
குறியீடுகள் தமிழ் மொழியிடச்சூழலில் அவ் ஆஸ்கி மேலரங்க குறியேற்றங்களைக் கொண்ட
தஸ்கி எழுத்துருவங்ககளாக மாறுகின்றன (என்னால் சிவப்பு வட்டங்களிட்டு
காட்டப்படுபவை). அவ்வாறு தோன்றும் ஒவ்வொரு எழுத்துருவமும் தஸ்கி
தகுதரத்திலிருந்து வருகின்றன வேறு தாம்/தாப் போன்றவைகள் அல்ல என்பதும்
புலனாகியது.   எல்லா TSCu எழுத்துருக்களையும் அகற்றறினால் இவ்வழு தோன்றுவதில்லை
!


//
2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]


 மயூரன்,

 System -- Preferences -- Appearance -- Subpixel Smoothing செய்தால் நிகழ்
 வட்டு மற்றும் நிறுவிய பின்னரும் துல்லியம் கிடைக்கிறதே.

 மேலும் indic-core-fonts நீக்கி விட்டால் சிக்கல் தீர்ந்து விடுகிறது.

 //



ஆமாச்சு முதற்கண் தாங்கள் குறிப்பிடும் அப்பொதியின் சரியான பெயர்
ttf-indic-fonts-core (indic-core-fonts அல்ல) .

எனது முன்னைய இரு மடல்களும் வாசித்தீர்களா? அதில் 3 ஆம் வழுவாக நான்
குறிப்பிடும் படருதல் வழு முன்னர்  ஹார்டியில் ta_IN சூழலில் FF3 இல்
ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் கண்டபின் வழுயறிக்கைத்தளத்தில்
வைக்கப்பட்ட ஒரு தீர்ப்பு அந்த ttf-indic-fonts-core ஐ அகற்றுவது. ஆனால் அது
அறுதித் தேவைக்குக்கு கூடுதலான செயல். ஏனெனில் ttf-indic-fonts-core ஐ
அகற்றாமல் அப்பொதியினால் சேர்க்கப்படுத்தப்படும் lohit_ta.ttf எழுத்துருவை
மட்டும் அகற்றுதல் அவ்வழுவைக் களைகிறது ! தற்போதைய 8.10 இல்  lohit_ta.ttf
இருக்கையில் ta_IN சூழலில் ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் இவ்வழு
காணப்படவில்லை - ஆனால் Google Groups மற்றும் unicode.org  இன் (!!) சில
பக்கங்களிலும் இப்போதும் lohit_ta.ttf  இருக்கையில் வழு உள்ளது.

//இதைத் தவிர வேறு செய்ய வேண்டியிருக்கிறதா? நான் பயன்படுத்தும் கணினியில்
இவையிரண்டையும் செய்தால் சிக்கல் தீர்கிறது. //

அதாவது ttf-indic-fonts-core என்ற பல இந்திய  கட்டற்ற எழுத்துருக்களை கொண்டதும்
அவற்றில் ஒன்றான  எல்லா லினக்ஸ் தளங்களுக்கும் தமிழிற்கு அடிப்படையாகப்
பாவிக்கும் lohit_ta.ttf அகற்றுதலை பராவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம் என
எண்ணுகிறீர்களா?

தற்போதைய 8.10 இல் தமிழிற்கான எல்லா துணை மற்றும் மொழியாக்கப் பொதிகளையும்
சேர்க்காமல் ஆங்கில அல்லது வேற்று மொழிகளில் பயன்படுத்துவோர்கள்
ttf-tamil-fonts பொதியை மட்டும் நிறுவினால் போதும் முதல் வழு தீர்ந்துவிடும்,
TSCu எழுத்துருக்களின் மேலாதிக்கத்தால். (  Anti-alising / Hinting twekaing
களை செய்த பின்). ஆக வழு 2,3 தீர்க்கவே lohit_ta.ttf அகற்றுதல் ஒழு வழி. அதே
வாத அடிப்படையில்  வழு 4 தீர்க்க  எல்லா TSCu ளையும் அகற்றி விடலாமா?
அவற்றிற்கெல்லாம் மாற்றீடு என்ன?

எனவேதான் எவற்றையும் அகற்றா ஒரு முறையை முன் வைக்கவுள்ளேன். உபுண்டு கநோமில்
சோதிக்கும் முறையை இன்று பின் மாலை பதிவேன்.

ஆமாச்சு kde / குபுண்டுவில் சோதிக்க தங்கள் பங்குபற்றல் அவசியாமாகும்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 Thread கா. சேது | K. Sethu
2008/11/3 M.Mauran | மு.மயூரன் [EMAIL PROTECTED]:
 சேது,

 தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன்.
 இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது.


வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus
போன்ற m17n க்கு மாற்று IME க்களை) ஆரம்பித்தலுக்கு (75custom_init-scim
க்கு மாற்றாக) IM-SWITCH கட்டமைப்பு பயன்பாடு பற்றியும் இம்முறை விரைவில்
தமிழ் பயனர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். மேலும் நாம்
விரும்பும் எழுதுருவத்தின் எழுத்துருவங்களைத்தான் முன்னிருப்பு
இயல்பாக்குவதற்கான நான் முன்வைக்கவுள்ள மாற்றத்தை அடுத்த ஒரு சில
நாட்களாவது பல வித திரைகளில் (CRT, small LCD) சோதனைக்குள்ளாக்கப்பட்டு
எச்சூழலிலாவது பிரச்சினைகள் ஏற்படின் அவற்றையும் தீர்க்க இயலுமா
என்பதையும் பார்த்த பின் இறுதி தபுண்டுவிற்கு உள்ளடக்குவது நன்று.

தாங்கள் ஓரிரு வாரங்கள் பின் இறுதியாகினால் இலகுவாகலாம்.  அல்லது தபுண்டு
சோதனை வெளியீடாக முதலில் வெளியிடின் அதற்கு மேம்பாடு திருத்தங்களாக சில
காலம் மாற்றங்களை ஏற்றி  இறுதியாக்கலாம்.


 // ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல்
 இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு
 மாறுகின்றன//

 இதனை நானும் அவதானித்தேன்.

 Hinting=Slight தபுண்டுவால் மாற்றப்பட வேண்டிய நிலை மற்றைய எழுத்துருக்கள்
 காரணமாக ஏற்படுகிறது.

 உண்மையில் நாம் பாவிக்கும் கணித்திரைக்கு ஏற்ப நான்கு விதமான combinations
 இதில் உண்டு.

 இந்த நான்கையும் உடனுக்குடன் சோதித்து எமது கணித்திரைக்கேற்ற hinting ,
 smoothing போன்றவற்றை அமைத்துக்கொள்வதற்கான நிரல் இம்முறை தபுண்டுவில்
 இணைக்கப்படுகிறது.

 (அந்நிரல் துண்டை மட்டும் தனித்தியங்கும்வண்ணம் மாற்றியமைத்து இத்தோடு
 இணைக்கிறேன். )


சோதித்து பார்த்து கருத்தேற்றங்கள் இருப்பின் எழுதுவேன்.

 //லோகித் தமிழ் மற்றும் TSCu எழுத்துருக்களை அகற்றாமல்
 sans/serif/monospace எழுத்துருக்களுக்கு சூரியன்டாட்காமை
 விருப்பத்தேர்வாக்கத் (preferred) தேவையான தொடர்பை (sym link) ஆக்கி
 மேலும் Hinting=Slight என்பதையும் பாவித்து அமைத்தபின்//

 முன்பு இந்த படரல் பிரச்சினைக்கு எளிய தீர்வாக ttf-indic-fonts-core பொதியை
 அகற்றிவிட்டு பயன்படுத்தினேன். ஆனால் குறிப்பாக இந்தப்பிரச்சினை லோகித் தமிழ்
 இனால் தான் ஏற்படுகிறது.


ஆம். ttf-indic-fonts-core பொதி தான் lohit_ta.ttf ஐ
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core அடைவினுள் நிறுவுகிறது.
அவ்வடைவினுள் ஏனைய பல இந்திய மொழிகளுக்கான எழுதுருக்களும் உள்ளன.
lohit_ta.ttf வினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க முழுப்பொதியையும்
அகற்ற வேண்டியதில்லை. ஆனால் அவ் வேற்று மொழிகளில் ஏதாவதிற்கும் இவ்வாறு
பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளனவா அப்படியாயின் அவற்றிற்கு உபுண்டு
மேலிடத்தில் வழுதாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறியின் நாம்
மாற்றுத் தீர்வுகளுடன் வழுத்தாக்கல் செய்கையில்  உசாத்துணையாக மேற்கோள்
காட்ட உதவலாம்.


 மேலே சொன்னபடியான sym link உருவாக்கப்பட்டால் லோகித் தமிழ் இனை அகற்ற
 வேண்டியதில்லையா?


ஆம். வேண்டியதில்லை. அது மட்டுமல்ல நான் எழுதிய 4 வது வழுவை ஏற்படுத்தும்
சகல TSCu எழுத்துருக்களையும் அகற்ற வேண்டியதில்லை. ஏனெனில் நாம் செய்யும்
மாற்றம் ஆனது மிகவும் பொதுவான முன்னிருப்பு எழுத்துருக்களான sans, serif
மற்றும் monospace ஆகியன தமிழிற்கான எழுத்துருவங்களை (glyphs)
சூரியன்டாட்காம் எழுத்துருவிலிருந்து எடுத்துக்கொள்ளும்படியான
கட்டுப்பாடே. மேலும் அம்முறைமை வழி வேறு எந்த ஒருங்குறிக்கான அல்லது
ஒருங்குறி எழுத்துருவங்களை உள்ளடக்கிய எழுத்துருவை முன்னிலைப்படுத்த
பயனரால் இயலும் ஆகும்.  உமரின் கட்டற்ற தென்றல் கூட பொருத்தமானதுதான்.
ஆனால் அதில் சில எழுத்துக்கள் (ஓ மற்றும் ஆங்கில p) திருத்தப்பட
வேண்டியுள்ளதை முன்னர் நான் சுட்டிக்காடியிருந்தேன். எழுத்துரு
ஆக்கத்தில் வல்லுமை உள்ள ஆர்வலர்கள் அதில் ஈடுபட வேண்டும் என்பது என்
வேண்டுகோள்.

உண்மையில்  sans, serif  போலல்லாது monospace க்குத் தேவை Fixed Width
Font. நான் அறிந்ததில் உமரின் TheneeUniTx மட்டுமே தமிழிற்கான அத்தகைய
ஒரே கட்டற்ற மென்பொருள். ஆனால் அதை  monospace க்கு
முன்னிலைப்படுத்திப்பார்க்கையில் கட்டம் கட்டமாகத்தான் தோன்றுகிறது.
சூரியன்டாட்காம் பயன்படுத்துகையில் எனது 19' LCD (திரை நுணுக்கம் :1440 x
900) திரையில் பிரச்சினைகள் இல்லை. ஆனால் CRT மற்றும் குறைந்த திரை
நுணுக்கம்  உள்ள திரைகளில் அகலமாகி பயன்பாட்டுக்குத் தடங்கலாக இருக்குமோ
என்ற சந்தேகம் உள்ளதாலேயே சோதித்து பார்க்க வேண்டுமென்கிறேன்.


 அப்படியானால் தபுண்டுவைக்கொண்டு மேற்கண்ட symlink உருவாக்கத்தினை செய்யலாமா?

ஆம்.  வெவ்வேறு அமைப்புக்களை கொண்ட பல xml வகைத் தரவுக் கோப்புக்களை
/etc/fonts/conf.avail அடைவில் இல் வைத்துவிட்டால் அவற்றில் விருப்பை
நிறைவேற்றும் தொடுப்பை /etc/fonts/conf.d அடைவில்  பயனர் ln  -s கட்டளை
வழி செய்யலாம். அதை விட இலகுவாக்க வேண்டுமாயின் டெபியனின் alternatives
கட்டமைப்பை பாவிப்பின் அதன் update-alternatives கட்டளையைக் கொண்டு
முனையத் திரையில் menu வழியாக  தேர்வு செய்யும்படியாகவும் அமைக்க
முடியும். (im-switch உம்  alternatives அடிப்படையில் ஆக்கப்பட்டதுதான்).
வரைகலை முறைமைகள் அமைப்பது பற்றி நான் கற்றிருக்கவில்லை.

 //
 வலைப்பதிவிற்கு பின்னர் கொணரலாம். நான் செய்யாவிடில் நண்பர்
 மயூரன்அதைச்செய்து உதவி விடுவார் :)//

 அடுத்த வேலை அதுதான் ;-)


அவசரமில்லை ;)

இன்னுமொரு முக்கிய விடயம். சூரியன்டாட்காம் எழுத்துருவை கட்டற்றதாக
ஆக்கும் திட்டம் எந்நிலையில் உள்ளது. கூடிய விரைவில் ஆக்கப்படின்
நன்றாகும்.

 -மு.மயூரன்

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-28 Thread கா. சேது | K. Sethu
2008/10/28 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]:
 கீழ்காணும் முகவரியில் கிடைக்கிறது.

 https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/tam

 இத்துடன் தமிழ் மொழி பயன்பாடு குறித்த சிக்கல்களும் - தீர்வுகளும்
 சேர்க்கப்படலாம். இன்ட்ரிபிட்டில் தமிழ் மொழி வசதி சோதித்திருந்தால்
 அப்பக்கத்தை தொகுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இன்ட்ரெபிடிலும் ஹார்டியிலும் தமிழ் பயன்பாட்டுகளுக்கு எழுத்துருகள்
தொடர்பாக ஒரே விதமாக 4 வகை வழுக்கள். விவரமான அறிக்கை எழுத
ஆரமபித்துள்ளேன். சற்று பொறுக்கவும். தெரிந்த தீர்வுகள் எல்லாம் தற்காலிக
நடவடிக்கைகளே. சரியான தீர்வுகள் நோக்கிச் செல்ல அடுத்த கட்ட
நடுவடிக்கைகளுக்கு நாம் செல்ல வேண்டும். அது வழு அறிக்கைகளை டெபியன் /
உபுண்டு மேம்பாட்டாளர்களிடம் முன்வைத்து  முற்றாக எல்லாவற்றையும்
தீர்ப்பது.

அவர்கள் கேட்டது ஆங்கிலத்தில் இருப்பதற்கு தமிழாக்கம் தானே?. அல்லது
விக்கி என்பதால் நாம் மேலதிக தகவற்களையும் அங்கு சோர்க்கலாம்
என்கிறீர்களா?

~சேது.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-28 Thread கா. சேது | K. Sethu
மேலும், ஒரு அவதானம்

http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 :

 System Requirements

 The minimum memory requirement for Ubuntu 8.04 is 384MB of memory for desktop 
 CDs, and 256MB for other installation methods. (Note that some of your 
 system's memory may be unavailable due to being used for the graphics card.)


https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/ :

 System Requirements

 The minimum memory requirement for Ubuntu 8.10 is 256 MiB of memory. (Note 
 that some of your system's memory may be unavailable due to being used for 
 the graphics card.)

RAM அறுதித்தேவை 384 இலிருந்து 256 க்கு குறைந்துள்ளது உணமைதானா?

மேலும்
MiB = MB ??

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-25 Thread கா. சேது | K. Sethu
2008/10/23 M.Mauran | மு.மயூரன் [EMAIL PROTECTED]:
 ஆமாச்சு இது சரியான வெளியீட்டுக்குறிப்புத்தானா?

 new feature போன்ற விடயங்கள் காணப்படவில்லையே?

உபுண்டு 8.04 க்கான பக்கங்களை ஒப்பிட்டு அவாதனிக்கையில் அதற்கான Release
Notes (http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 )
பக்கத்திலும் new features இருந்திருக்கவில்லை. அப்பக்கத்திலும்
தற்போதைய http://www.ubuntu.com/getubuntu/releasenotes/810  இலும்
மற்றும் அவர்கள் மொழி பெயர்க்கும் படி சுட்டிய
https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes பக்கதிலும் ஒரே விதமாக
உள்ளடக்கப்பட்டுள்ள 4 முதன்மை விடயத்தலைப்புக்கள் : 1) System
Requirements 2) Installation 3)  Upgrading 4) Other known issues
என்பன.

New Features போன்ற தகவற்களைப் பார்க்க இன்று (அல்லது நேற்று ?)
வெளிவந்துள்ள Release Candidate ற்கான அறிமுகப் பக்கத்தில் பாருங்கள் :
http://www.ubuntu.com/testing/810rc அங்கு  New Features since Ubuntu
8.04 பற்றி உள்ளது. இந்த பக்கங்களும் மொழி பெயர்க்கப்படுமா?

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-19 Thread கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]

 இணைய வசதி இருந்தால் தான் மொழிக்குத் தேவையான பொதிகள் நிறுவப்படுகின்றன.
 இது பழைய சேதிதான். :-)

ஆம்.

முன்னைய உபுண்டு 8.04 - பீட்டா இறுவட்டில் scim-tables கான தமிழ்
விசைமாற்றிகள் இருந்தன. ஆனால் உபுண்டு 8.04 இறுதி இறுவட்டில் அதை எடுத்து
விட்டார்கள். உபுண்டு 8.10  பீட்டா இறுவட்டிலும் இல்லை. குபுண்டு
இறுவட்டுகளில் எபபோதும் இல்லை.


 மேலும் காதம்பரி கல்யாணி போன்ற மின்னெழுத்துக்கள் முறையான தமிழ் யுனிகோடு
 மின்னெழுத்துக்கள் அல்ல. இதுதான் பயர்பாக்சில் ஆங்கில எழுத்துக்கள் மீது
 தமிழ் படர காரணமா என்று சோதித்து உறுதி செய்ய வேண்டும்.

தாங்கள் சொல்லும் ஆங்கில எழுத்துக்கள் மீது தமிழ் படரல்  ஆனது
http://ubuntuforums.org/showthread.php?t=889079 வழுவா ?

TAMu ( காதம்பரி, கல்யாணி, மதுரம்) எழுத்துருக்களை அகற்றுவதால் அவ்வழு
தீர்வதில்லை. அதாவது ஒருங்குறி தமிழ் + தாம் தமிழ் கலவையான
அவ்வெழுத்துருக்கள் கட்டகத்தில் நிறுவப்பட்டிருப்பது இவ்வழுவிற்கு ஒரு
காரணி அல்ல.

மாறாக lohit_ta.ttf எழுத்துருவை அகற்றினால் அவ்வழு அகலுகிறது.

எல்லா விதமான லினக்ஸ் இயங்குத்தளங்களிலும்  lohit_ta.ttf  தமிழிற்கு
அடிப்படையாக செயல்படுகையில்  உபுண்டு மற்றும் சில டெபியன் சார்
இயங்குத்தளங்களில் மட்டும் தமிழ் மொழியிடச்சூழலில், பயர்பக்ஸ்  3 வரிசை
உலாவியில்  ஜி-மெயில் உட்பட்ட சில கூகிள் இடைமுகப்புக்கள், அதே போல யாஹூ
சார் இடைமுகப்புக்கள் போன்றவைகளில் மட்டும் இந்த படரல் பிரச்சினை ஏற்பட
காரணம் என்ன எனபதைக் கண்டறிந்து தீர்வுக்கு வருவதே தேவைப்படும் முழுமையான
வழு தீர்வாகும்.

இவ் வழுவைப்பற்றி இன்னொரு மடலில் பின்னர் தொடர்வேன்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-16 Thread கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]

 2008/10/16 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]:
  https://bugs.launchpad.net/bugs/256054
 
  மேலும் 8.04 வெளியீட்டில் தமிழ் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்ததே? அது
 பற்றி?
 

 அப்படியே தான் இருக்கிறது. :-(


 --
 ஆமாச்சு
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


ஆம் - தாங்கள் குபுண்டுவில் தானே சோதித்தீர்கள்?. உபுண்டு கநோம் மற்றும் xfce
களிலும் அவ்வண்ணமே. சயந்தனின் தீர்வான Hinting = Slight பாவிப்பின் சரியாகிறது.
(CRT திரைகளுக்கு Smoothing = Greyscale ; LCD திரைகளுக்கு  Smoothuing =
Subpixel (LCDs) என்ற தேர்வுகளும். நான் தற்போது ஒரு LCD பாவிக்கிறேன்).  xfce
 மங்குதல் சரியாக்கப்படினும் ஏனைய இரண்டிலும் விட தமிழ் எழுத்துக்கள் தெளிவு
குறைவாகத் தெரிவது போல உள்ளது. பின்னர் திரைக்காட்சிகளை இடுவேன்.

தீரக்கப்பட வேண்டிய வழு ஆனது 8.04, 8.10 வெளியீடுகளில் Hinting / Smoothing
களுக்கான முன்னிருப்பு இயல்பு நிலையிலேயே இயக்குகையில் மங்கலாகத் தெரிவது. வழு
தீர்க்கப்படின் தற்போது Hinting = Slight என்ற அமைப்புடன் தெரிவது போலவே
 முன்னிருப்பு இயல்பு நிலையுடனும் தெரியவேண்டும். பழைய கட்சியில் இருந்த
தோற்றத்திற்குச் செல்லக்கூடாது. ஏனெனில் கட்சியில் மங்கலாக தோற்றம்
இல்லாவிடினும்  ஈகார உயிர்மெய்களில் விசிறி பிரிந்து தோன்றும் வழு உள்ளது.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-15 Thread கா. சேது | K. Sethu
ஒரு திருத்தம்.

நான் எழுதியது:


4) தற்போது உபுண்டு 8.10 - பீட்டா (
 http://www.ubuntu.com/testing/intrepid/beta) அல்லது குபுண்டு 8.10 - பீட்டா
 (https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu) பதிவிறிக்கி நிறுவி
 சோதிதித்துப்பார்க்க விரும்பின் முதலில் தங்கள் கணினியில் உள்ள பிணைய
 அமைப்புக்கான இயக்கி (ethernet driver) என்னவென கண்டறியுங்கள்.


அத்துடன் சுபுண்டு 8.10 - பீட்டா
(http://cdimage.ubuntu.com/xubuntu/releases/8.10/beta/)
   http://cdimage.ubuntu.com/xubuntu/releases/8.10/beta/
விற்கும் அவ்வாறே.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]query

2008-08-30 Thread கா. சேது | K. Sethu
After seeing TV's reply -

Karthick,  was your query about  those problem while using in MS Windows 
or in Ubuntu Linux or any other OS. I ask this
because TV's reply appears to be meant for Windows users.

If it is Ubuntu Linux, for starter, please tell about the following:

1. Which version of Ubuntu (or Kubuntu or Xubuntu)?

2. What  Desktop (DTE) you use - GNOME, KDE, xFce..?

3. Do you use with locale environmental variables set to english (such 
as en_US.UTF-8 ) or tamil (such as ta_IN or ta_LK or...) ?
If you are not sure about this just enter the following command 
locale  on a terminal (without the quote symbols of course)
and copy the results and show us.

~Sethu




 Original Message 
Subject: Re: [உபுண்டு_தமிழ்]query
From: Tirumurti Vasudevan [EMAIL PROTECTED]
To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com
Date: Sat Aug 30 2008 19:53:39 GMT+0530 (IST)
 you must have unicode set and enabled.
 and of course you need the unicode tamil fonts.


 On Sat, Aug 30, 2008 at 3:11 PM, Karthick B [EMAIL PROTECTED] wrote:
   
 Hi,
 I have two queries.
 1. I am unable to see the content in the mail comes from this forum.
 everything look like question mark
 

 you must have unicode set and enabled in your browser.
 and of course you need the unicode tamil fonts.

   
 2. How to type in Tamil in documents.
 

 set font to a unicode tamil font.
 use a tamil input keybrd like thamizha, tamil keyboard, kural, azhagi
 take your pick.
 google for details on each

 tv


   



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக் கும் இருக்கா?

2008-08-24 Thread கா. சேது | K. Sethu
 Original Message 
Subject: [உபுண்டு_தமிழ்]இந்தச் சிக்கல் உங்களுக்கும் இருக்கா?
From: ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]
To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com,   தமிழக உபுண்டு பயனர் குழு   
ubunt?=  [EMAIL PROTECTED]
Date: Thu Aug 21 2008 20:10:48 GMT+0530 (IST)
 http://ubuntuforums.org/showthread.php?t=889079

 -- 
 ஆமாச்சு

அங்கு  ilanv அவர்கள் வழு அறிக்கையுடன் இணைத்த திரைக்காட்சி பார்க்க புகுப்பதிகை 
வினவுகிறது ubuntuforums. ஏற்கனவே அதற்கு எனக்கு ஒரு பயனர் கணக்கு 
ஏற்படுத்தியிருந்துள்ளேனோ என்பது நினைவிலில்லை. எனவே இதுவரை அவரது இணைப்பைப் 
பார்கவில்லை. ஆயினும் நான் கண்டறிந்த பின் வருபவனவை அவர் கூறும் வழுவாகத்தான் 
இருக்கும்.

1. உபுண்டு 8.04 அமர்வில் மொழியிடச்சூழல் (locale) தமிழ் ஆக (அதாவது சூழல் வேறி 
LANG=ta_IN ) அமைத்திருக்கையில் பயர்பாக்ஸ்  - 3.0  உலாவியில் ஜி-மெயில் வலைத்தள 
அஞ்சல் இடைமுகப்பில் பல இடங்களில் ஆங்கில எழுத்துக்கள இருக்க வேண்டியவிடங்களில் 
தமிழ் 
எழுத்துக்களாக வாசிக்கவியலத்தவாறு தென்படுகின்றன.

பின்வரும் இரு வலையிடங்களில் காட்டாக இரு திரைக்காட்ச்சிப் பிடிபுக்களைப் 
பார்க்கலாம் . 
(அப்படங்களில் சிவப்பு நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களில் பார்க்கவும்)

http://i36.tinypic.com/260q1pc.jpg
http://i35.tinypic.com/abh26c.jpg

2.  மேற்கூறிய அதே இயங்குத்தள மற்றும் அதே தமிழ் மொழியிடச்சூழல் ஆகியவற்றுடன் அதே 
உலாவியில் ஏனைய google சேவைகளிலும் அவ்வாறான சிக்கல்கள்  தென்படுகின்றன.

3. மேற்கூறிய அதே இயங்குத்தள மற்றும் மொழியிடச்சூழல் ஆகியவற்றுடன் பழைய  
பயர்பாக்ஸ்  - 
2.0 வரிசை  உலாவியில் அச்சிக்கல்கள் எதுவும் இல்லை !

4. அதே உபுண்டு 8.04 இல் மொழியிடச்சூழல் ஆங்கிலமாயின் (LANG=en_US.UTF-8) 
அச்சிக்கல்கள் எதுவும் இல்லை

5. தற்போது சோதனை வெளியீடாக இருக்கும் அடுத்த உபுண்டு இன்ரெபிட்  (Intrepid Ibex)  
அல்ஃபாவில்  தமிழ் மொழியிடச்சூழலில் பயர்பாக்ஸ்  - 3.0 இல் google சேவைகளில் 
மேற்கூறிய 
வழுக்கள் இல்லை. ஆனால் இன்னொரு வழு  உள்ளது. 

அதற்கான திரைக்காட்சிப் பிடிப்புடன் மேலும் சிக்கல் தீர்க்கும் மாற்று வழிகள் 
பற்றி இன்று 
மாலையின் பின் அடுத்த மடலில் தொடர்வேன்

~சேது



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-22 Thread கா. சேது | K. Sethu
2008/5/22 Tirumurti Vasudevan [EMAIL PROTECTED]:
 
  ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது?
 திவா

ஆமாச்சு சொன்னது KAider (கேஎய்டர் ?) . இப்போ அதன் பெயரை Lokalize என
மாற்றியுமுள்ளார்கள்.

பார்க: http://techbase.kde.org/Projects/Summer_of_Code/2007/Projects/KAider

கேடிஈ-4.1 க்குத்தான் வெளியிட்டுள்ளார்கள். இனிமேல்தான்
சோதித்துப்பார்க்க வேண்டும்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]ஐஆர்சி ப யனர் கூட்டம் - 24-05 -2008 மாலை 3.00

2008-05-22 Thread கா. சேது | K. Sethu
2008/5/22 தங்கமணி அருண் [EMAIL PROTECTED]:
 அன்புடையர் வணக்கம்,

 நாளை சனிகிழமை 24-05-2008  மாலை 3.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம்
 நடைப்பெறயிருக்கிறது.

நாளை மறுநாள் ;)

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] xFce தமிழாக்கம் ? [ was: Re: கேபசூ 4.1 வெளி யீட்டுடன் தமிழ ்]

2008-05-13 Thread கா. சேது | K. Sethu
xFce க்கு ஓரளவு i18n தமிழாக்கங்கள் முன்னர் ஆக்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. பார்க்க :
http://i18n.xfce.org/stats/index.php?mode=4lang=trunk/ta

ஆயினும் பொறுப்பேற்றுள்ள நடத்துனர்கள் யாரும் தற்போது இருப்பதாகத்
தெரியவில்லை. பார்க்க : http://i18n.xfce.org/wiki/language_maintainers

உபுண்டு வெளியீடுகள் யாவற்றிற்கும் xFce க்கான தமிழாக்கதிற்கான பொதிகள்
இதுவரை வெளியிடப்படவில்லை.

சுபுண்டுவிற்கு 128 MB RAM போதுமானது சிறப்பு. xFce தமிழாக்கம் தொடர்தலை
முன்னெடுக்கப்படின் தமிழ் பயனர்களுக்கு வசதி கூடலாம்.

யாராவது xFce தமிழாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளனரா?

~சேது.


2008/5/13 ஆமாச்சு [EMAIL PROTECTED]:
 வணக்கம்

  கேபசூ 4.1 வெளியீட்டுடன் கிடைக்கப் பெறும் மொழிகளில் தமிழும் இருக்கும் என்பதை 
 தெரிவித்துக் கொ
  ள்கிறோம்.

  இதற்கு தேவையான அத்தியாவசிய(1) மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுவிட்டன. பணி 
 தொடர்கிறது.

  (1) http://l10n.kde.org/stats/gui/trunk-kde4/essential/

  -- ஆமாச்சு
  --
  Ubuntu-l10n-tam mailing list
  Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]பழைய கணி னிகளில் ஹார்டி

2008-05-13 Thread கா. சேது | K. Sethu
On 5/8/08, senthil raja [EMAIL PROTECTED] wrote:
 Thanks sethu..

 i will try xubuntu..

சுபுண்டுவின் RAM தேவைகள் உபுண்டு மற்றும் குபுண்டு நிறுவல்களை விட
குறைவாயினும் நிறுவும் போதும் நிறுவிய பின்னர் பயன்படுத்தப்படும்
மென்பொருட்களையும் பொருத்து 128 MB க்கு கூடுதலாகவும் தேவைப்படலாம்
எனவும் தெரிகிறது. பார்க்க : http://www.xubuntu.org/get#hardy  -
Minimum System requirements :


 Minimum system requirements

 To run the Desktop CD (LiveCD + Install CD), you need 128 MB RAM to run or 
 192 MB RAM to install. The Alternate Install CD only requires you to have 64 
 MB RAM.

 To install Xubuntu, you need 1.5 GB of free space on your hard disk.

 Once installed, Xubuntu can run with 192 MB RAM, but it is strongly 
 recommended to have at least 256 MB RAM.

சுபுண்டு நிகழ்வட்டுக்கான ISO வின் அளவு 544 MB  மட்டுமே. ஆனால் அது ஓபன்
ஆபிசுக்கான பொதிகள் ஒன்றும் உள்ளடக்கலாமலேயே. எனவே ஒரு கணினியில் ஓபன்
ஆபிஸ் நிறுவி அதற்காக பதிவிறக்கப்பட்ட எல்லா deb பொதிகளையும் இன்னொரு
இறுவட்டில் தாங்கள் எடுத்தச்செல்ல வேண்டியிருக்கும் பழைய கணினிகளில்
நிறுவ.

சுபுண்டு இறுவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள உரைதிருத்தி அபிவேர்ட் ஆகும்.
லினக்ஸ் இயங்குத்தளங்களுக்கான அபிவேர்டில் l10n தமிழாக்கம் வாசிக்கத்
தெளிவாக இருப்பினும், தமிழ் உள்ளிடலுக்கு ஒருங்குறி இரண்டாம் கட்ட
எழுத்துருவாக்கத்துக்கு (level 2-implementation) இதுவரை துணை
கொடுக்கப்படவில்லை. அதனால் கொம்புகள் இடம்மாறி மெய்யின் பின் வருகின்றன.
ஆக சுபுண்டுவில் ஓபன் ஆபிஸ் நிறுவல் தமிழ் பயனர்கட்கு அவசியமாகிறது.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-10 Thread கா. சேது | K. Sethu
ஆமாச்சு, நண்பர்களே

ஆமாச்சுவின் 
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001458.html
,  மே 4 - 4:37 PM மடலுக்குப்பின் மொத்தம் 5 மடல்கள் எங்களிருவரிடையே
சென்ற 4, 5 ஆம் திகதிகளில் பரிமாறப்பட்டுள்ளன. அவற்றில் ஆமாச்சுவின்
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001459.html
 மடல் மட்டும் இம்மடலாற்ற குழுவிற்கு வந்துள்ளது. ஏனைய நான்கும்
குழுமத்துக்கு விட்டுப்போயுள்ளன. அவற்றில் ஆளுக்கு இரு மடல்கள்.
தொடர்ச்சியாக வாசிக்க உதவும் வகையில் இடையில் குழுமத்துக்கு வந்த
(மேற்கூறிய 001459.html) மடலையும் சேர்த்து 5 மடல்களையும் கீழே
இட்டுள்ளேன். இடையில் வந்தது 3 வது.

3-4 நாட்கள் முன் நான் செய்த சோதனைகளில் ஆமாச்சு பரிந்துரைத்த வழி
(https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001456.html)
கடைப்பிடிக்கப்படின் உபுண்டுவின் தற்போதைய நிகழ்வட்டு, முன்னைய
நிகழ்வட்டு, மற்றும் புதிதாக பதிவிறக்கி வன்தட்டில் நிறுவிய சுபுண்டு
ஆகிய அமர்வுகளில் ஆமாச்சு கண்டது போல துல்லியம் எனக்கும் சீராகிறது.

ஆனால் வன்தட்டில் முன்னர் உபுண்டு பீட்டா இறுவட்டு கொண்டு நிறுவி இதுவரை
எல்லா மேம்பாடுகளையும் இற்றுள்ளதில் இந்த மாற்றம் மட்டுமே சேர்ப்பினும்
அவ்வாறு சீராவதில்லை.

இன்னொரு முறையிலும் defoma வின் hints களை புறக்கணித்தில் செய்யும்
மாற்றம் ஒன்றும் செயது பார்த்தேன். விளைவுகள் மேற்கூறிந்து போலவே. (எனது
வன்தட்டு உபுண்டுவில் சீராகமல் ஆனால் ஏனைய 3 அமர்வுகளில் சீராகிறுது).
அம்முறை பற்றி பின்னர் எழுதுகிறேன்.

மேம்படுத்தப்பட்ட உபுண்டு வன்தட்ட அமர்வில் ஏன் வழு குறைக்கும் மாற்றம்
தடைப்படுகிறது எனபதைக் கண்டறிய வேண்டியுமுள்ளது.

துல்லியம்  தவிர அளவு சிறிதாயிருப்பது அவ்வளவு பெரிய பிரச்சினை அல்ல.
ஏனெனில் எழுத்துரு அளவை ஒரு படி கூட்டினாலே போதுமாகிறது (எனக்கத்
தென்படும் விதத்தில்).

ஆயினும் இன்னொரு குறைபாடும் உள்ளது. மேற்கூறிய துல்லியத்தை சீராக்கும்
மாற்றங்களைச் செய்த பின்னும் கநோம் மேசைத்தளத்தில் ta_IN locale (மற்றும்
அது போல கேபசூ வில் தமிழ் மொழி) சூழலில் தோற்றம் (Apperance) அமைக்கும்
சாரளத்தில் எழுத்துருக்களுக்கு விவரங்கள் (Details) என்பதை அமுக்கின்
வரும் Best Shapes, Best Contrast, Sub Pixel Rendering போன்றவற்றில்
எழுத்துக்கள் கட்டம் கட்டமாக மட்டும் தென்படுவது அதுவாகும்.

நான் டெபியன் -  Lenny  பதிவிறக்கி சோதித்த பின் நேரடியாக டெபியனுக்கே
வழு அறிக்கை தாக்கல் செய்யலாம் என நினைத்துள்ளேன்.

விரைவில் தொடர்வேன்.

~சேது



Mail 1 - Amachu to Sethu - May 4 9:53 PM:

romம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]
[EMAIL PROTECTED]
toகா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]
dateSun, May 4, 2008 at 9:53 PM
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailed-bygmail.com



2008/5/4 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]:

 உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
 செய்து பார்த்து சொல்லுங்கள்.


இதனை நிகழ்/ பழகு வட்டிலிருந்தவாறே தட்டெழுதுகிறேன்.  இந்நிலையில் இந்திய
மொழிகளுக்கான மின்னெழுத்துக்களில் லோஹித் வகையறாக்களே கிடைக்கப்
பெறுகிறது.

/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_gu.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_hi.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_pa.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_ta.ttf

ttf-indic-fonts வகையில் அடக்கப்பட்டுள்ள காதம்பரி, கல்யாணி உள்ளிட்ட
தமிழ் மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக நிறுவப் பெறவில்லை.

லோஹித்தில் மலையாளம் இல்லையோ, ttf-indic-fonts வகையிலிருக்கும்
மலையாள மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக  நிறுவப்பட்டுள்ளது. (எண்ட
குருவாயூரப்பா! ;-))

1) மாற்றம் செய்யும் முன்னர் உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி

http://picasaweb.google.co.uk/shriramadhas/HjMXtI/photo#5196556638211439842

2) மாற்றம் (இன்றைய முதல் மடலில் குறிப்பிட்டிருந்த மாற்றம்) செய்த
பின்னர் உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி

http://picasaweb.google.co.uk/shriramadhas/HjMXtI/photo#5196556638211439858

வேறு யாராவது சோதித்தீர்களா?
--
ஆமாச்சு
==

Mail 2 : Sethu to Amachu  - May 4 11:37 PM

கா. சேது | K. Sethu to amachu
show details May 4 (6 days ago)
Reply

fromகா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]
[EMAIL PROTECTED]
dateSun, May 4, 2008 at 11:37 PM
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailed-bygmail.com


2008/5/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]:

 2008/5/4 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]:

  உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
  செய்து பார்த்து சொல்லுங்கள்.
 
 

 இதனை நிகழ்/ பழகு வட்டிலிருந்தவாறே தட்டெழுதுகிறேன்.  இந்நிலையில் இந்திய
 மொழிகளுக்கான மின்னெழுத்துக்களில் லோஹித் வகையறாக்களே கிடைக்கப் பெறுகிறது.

 /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_gu.ttf
  /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_hi.ttf
 /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_pa.ttf

 /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_ta.ttf

 ttf-indic-fonts வகையில் அடக்கப்பட்டுள்ள காதம்பரி, கல்யாணி உள்ளிட்ட தமிழ்
 மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக நிறுவப் பெறவில்லை.

TAMu , TSCu எழுத்துருக்கள் 8 உம் ttf-tamil-fonts பொதியில்தான்
உள்ளடக்கப்பட்டுள்ளவை. (நான் முன்னர் எடுத்துக் கூறியுள்ளேன்)

ttf-indic-fonts என்பது ஒரு Meta package ஆனது. அப்பொதியை நிறுவினால்
ttf-indic-fonts-core, ttf-tamil-fonts மற்றும் எல்லா indic

Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹார்ன் - க ொண்டாட்டம்

2008-05-07 Thread கா. சேது | K. Sethu
அருண்

Heron என்பதை எழுத்துப்பெயர்க்க ஹார்ன்  என்பதற்கு பதில் ஹெரன்
அல்லது அல்லது ஹெரான் அல்லது ஹெரோன் என்பதில் ஒன்று பொருத்தமாக
இருக்கும் எனக் கருதுகிறேன்

~சேது


2008/5/7 ஆமாச்சு [EMAIL PROTECTED]:
 On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote:
   என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே,

  அருண்

  நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம்.

  -- ஆமாச்சு

 --
  Ubuntu-l10n-tam mailing list
  Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹெரான் - க ொண்டாட்டம்

2008-05-07 Thread கா. சேது | K. Sethu
2008/5/7 தங்கமணி அருண் [EMAIL PROTECTED]:
 நீங்கள் சொன்னது மடல் அனுப்பிய பிறகு தான் எனக்கு யோசனைக்கு வந்தது, தவறுதலாக
 வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன் என்று. உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி
 சேது...(:-

மேலும் தாங்கள் உபண்டு என எழுத்துப்பெயர்ப்பு செயவது பற்றி.

உபுண்டு நடத்துனர்கள் கிட்டத்தட்ட ஊபூண்டூ (oo-BOON-too) என்பது
போலத்தான் அதன் பலுக்கல் என்பதை
http://www.ubuntu.com/aboutus/faq?action=showredirect=FAQ தளத்தில்
குறிப்பிடுகின்றனர். ஆனால் வெவ்வேறு மொழிகளிலும் அவ்வாறு உத்தியோகபூர்வ
பலுக்கலுக்கு அமையவே எழுத்துப்பெயர்ப்பு செய்தாகவேண்டும் என கட்டளைகள்
ஒன்றும் இல்லை. மாறாக தம்மொழிக்கு ஏற்றவாறான திரிபுக்கு யாவருக்கும்
இயற்கையான உரிமை உண்டு.

ஆயினும் இம்மடலாற்ற குழுமம் வழியாக தமிழில் உபுண்டு என்றே நாம் யாவரும்
இரு வருடங்களாக குறிப்பிட்டு வருவதால் தாங்கள் உத்தியோகபூர்வ மடல்களில்
உபண்டு என்பதற்குப் பதிலாக உபுண்டு என்றே எழுதினால் நன்று என
நினைக்கிறேன். புது பயனர்களிடம் பரப்புகையில் ஒரே பலுக்கல் மட்டும்
வெளிப்படுத்துவது நல்லதுதானே?

~சேது











 2008/5/7 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]:

  அருண்
 
  Heron என்பதை எழுத்துப்பெயர்க்க ஹார்ன்  என்பதற்கு பதில் ஹெரன்
  அல்லது அல்லது ஹெரான் அல்லது ஹெரோன் என்பதில் ஒன்று பொருத்தமாக
  இருக்கும் எனக் கருதுகிறேன்
 
  ~சேது
 
 
  2008/5/7 ஆமாச்சு [EMAIL PROTECTED]:
 
 
 
   On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote:
 என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே,
  
அருண்
  
நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம்.
  
-- ஆமாச்சு
  
 
 
 
   --
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
  
  
  --
  Ubuntu-l10n-tam mailing list
  Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
 



 --
 அன்புடன்
 அருண்

 நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
 --
  Ubuntu-l10n-tam mailing list
  Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam