Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:

 
 இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக
 அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. 
 

ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில்
மலரும் என எதிர்பார்ப்போம்.

 எனது கருத்தேற்றங்கள் :
 
 i) ubuntu-tam -  தொழில்னுட்ப உரையாடல்கள் மற்றும் பயனர்கள்
 வினா-மறுமொழிகள் ஆகியனவற்றிற்கு
 
 ii) ubuntu-l10n-tam - அதன் தலைப்பில் உள்ளவாறு தமிழாக்கம் தொடர்பான
 உரையாடல்களுக்கு 
 

இவ்வகையிலேயே தற்போதும் அமைந்துள்ளது.  மேலும் நாம் மேற்கொள்ள முனைந்துள்ள
திட்டங்களுக்கு லாஞ்சுபேடில் இருக்கும் திட்டங்களிலேயே மடலாடற் குழுக்களும்
இடம்பெற்றுவிடுகின்றன.


 iii) மேலும் பொதுவான அறிவிப்புகளுக்கு என தனி
 குழுமம் lists.ubuntu.com இல் அமைக்க இயலுமாயின் அறிவுப்புகளுக்கு அது.
 இயலாவிடில் தற்போது போல அறிவிப்புகளை மேல் இரண்டிலும் பதியாலம். 

தற்போதைக்கு மேற்கூறிய இரு மடலாடற் குழுக்களிலும் சேர்த்து பதிந்து
கொள்ளலாம். தொடர்ச்சியாக பொறுப்பாற்றக் கூடியோர் வருகிறபோதும் மடல்கள்
அதிகம் சேரத் தொடங்கும் கால கட்டங்களில் இதைப் பற்றிய முடிவு
மேற்கொள்ளலாம்.

--

ஆமாச்சு


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote:
 அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு.

16 ஜனவரி.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote:
 இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில்
 பிழையிருந்தால் 
 திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான
 முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) 
 மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவியை
 எதிர்பார்க்கின்றேன். 

மோகன்

வாங்க. இப்போ ட்ரையோ ஆயிட்டோம். கொஞ்சம் நாள் முன்னாடி FUEL நிகழ்ச்சி
நடந்தது. அது சமயம் திரட்டப்பட்ட சொல்
பரிந்துரைகள் https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பக்கத்தில்
இருக்கு.

தொடர்ந்து XFCE க்கு பொறுப்பு வகித்து வாருங்கள். வரும் ஆண்டு மூன்று
கட்டற்ற இடைமுகப்புகளுக்கும் நல்ல ஆண்டாக அமையும்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில்
விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை.

இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி)

விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில்
சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை
மாத்திரம் விவாதிப்பது நேரத்தை நல்ல முறையில் பயன்பட உதவும்.

வரும் வாரத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்னதாகவே நினைவு மடல்கள்
அனுப்புகிறேன். இப்பணியை யாரேனும் செய்ய முன்வந்தால் நல்லது. அவ்வார
உரையாடலுக்கான விக்கி பக்கத்தை அமைத்து விட்டு இணைப்பைப் கொடுத்து நினைவு
படுத்த வேண்டும். அவ்வளவு தான்.

நாளைய உரையாடலுக்கான
பக்கம்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_03_01_2009

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 01:54 +0530, Mohan R wrote:
 
 Daemon - நினைவகத்தில் நிலையாக இருக்கும் ஓர் செயலி என்று நினைத்து 
 நிலைநினைவகச்செயலி என்று மொழிபெயர்த்துள்ளேன். 

மறைநிரல்?

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-19 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல்.

விவரங்கள்: 
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 

தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயம் இருந்தால் பொருள் பகுதியில் சேர்த்து
சேர்த்தவர் பகுதியில் நான்கு டில்டே () இடவும். தங்களது ஒப்பம் தானாக
கிடைக்கும்.

நேரம்: மூன்று மணி.

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் க் குழும கலை படைப ்புகள்

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம்

புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த
வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது.

தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500
வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள
மேலணி: 
http://ubuntu-tam.org/irakkam/artwork/cd-dvd-artwork/ubuntu-dvd-artwork-tamil.jpg

விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=கலை_படைப்புகள்

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote:
 ---  நிகழ்ச்சி நிரல்  -
 நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த
 நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் 
 
 தேதி: 12/12/2009  13/12/2009
 
 இடம்:  1) CDAC சென்னை, தரமணி
   2) #fedora-tamil at irc.freenode.net 
 
 நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை
 - 

இன்று தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் IRC மூலம் தாங்களும்
கலந்து கொள்வதற்கான
வழிமுறை: http://ubuntu-tam.org/wiki/index.php?title=Join_FUEL_2009_Dec_12_13

விவரங்கள்: https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil

பரிந்துரைகள் கோரப்படும்
பதங்கள்: http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods

கலந்து கொள்ள நினைவுபடுத்துகிறோம்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 திரி ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
 
 முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு
 மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும்
 உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? 

ஆம்.

--

ஆமாச்சு 
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] புதிய தலைமுறை வார இதழில் உபுண் டு

2009-12-05 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம்

10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில்
உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு
பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது.

இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

அவ்விதழில் வெளியாகியுள்ள உபுண்டு தொடர்பான கட்டுரையை
வாசிக்க: 
http://ubuntu-tam.org/wiki/index.php?title=ஊடகங்களில்/புதிய_தலைமுறை_10_டிசம்பர்_2009

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-04 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote:
 அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி.
 http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009

நாளைய இணையரங்க உரையாடலுக்கான நினைவுணர்த்தும் மடல்..

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] குனு வினக்ஸ் ப ணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரி டும் பதங்களுக்க ு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ் வு

2009-12-04 திரி ஆமாச்ச ு|amachu
நாம் விரும்பிப் பயன்படுத்தும் இயங்கு தளங்களாக கட்டற்ற இயங்கு தளங்கள் திகழத் 
தொடங்கி விட்டன. பெடோரா, டெபியன், ரெட்ஹாட், பாஸ், ஜென்டூ, உபுண்டு என இவை பல 
வடிவங்களில் கிடைத்து நாம் விரும்பியதை தேர்வு செய்து
பயன்படுத்தும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன. இவை என்னுடயை மொழியில் கிடைக்க 
வேண்டும் என்பது தாய்மொழிப்பற்றுடைய எவரும் கொள்ளக் கூடிய விருப்பமாகும். 

இதனையே நோக்கமாகக் கருதி பல்வேறு மொழிப்பெயர்ப்பு குழுக்களும் பணியாற்றி 
வருகின்றன. அவற்றின் மூலம் பங்களிப்போருக்கும் புதிதாய் மொழிப்பெயர்க்க 
வருவோருக்கும் அடிக்கடி எழும் கேள்வி ஒரு சொல்லுக்கு நிகரானத் தமிழ்ச் சொல்
என்ன என்பதே. ஒரே பொருளைக் கொண்ட பலச் சொற்கள் இருக்கலாம் என்ற போதும் அவை ஒரே 
பணிச் சூழலில் வெவ்வேறு பகுதிகளில் பிரதிபலிப்பது இயங்குதளத்தை 
பயன்படுத்துவோருக்கு அனாவசியச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இவற்றை போக்கும் ஒரு முயற்சியாக பெடோரா சமூகம், நாம் குனு லினக்ஸ் பணிச் சூழல்களை 
அன்றாடம் பயன்படுத்துகிற போது அதிகம் காண நேரிடும் சொற்களையும் சொற்றொடர்களையும் 
தொகுத்து அவற்றுக்கு நிகரான பிறமொழிச் சொல்லாக்க
முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை பெடோரா குழுமத்திற்கே அன்றி அனைத்து கட்டற்ற 
மென்பொருள்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் பயனளிக்கக் கூடியவை. இத்திட்டத்தை 
பெடோரா குழுமத்தார் Frequently Used Entries For
Localisation (FUEL)[1] என்று அழைக்கிறார்கள்.

இப்பதங்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் கோரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 
பன்னிரெண்டாம் தேதியும் பதிமூன்றாம் தேதியும் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC 
அலுவல வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில்
நேரடியாக கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை அளிக்க விருப்பமுடையோர் எமது amachu 
at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து 
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  நேரடியாக கலந்து கொள்ள
இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற 
உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் IRC மூலம் கலந்து கொள்ளலாம். 
irc.freenode.net வழங்கியின் #fedora-tamil அரங்கின் மூலம் தங்களது பரிந்துரைகளை 
வழங்கலாம். இந்நிகழச்சியின் ஏற்பாட்டுக்
காரியங்களிலும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் எம்மை தொடர்பு 
கொள்ளவும். இரண்டு நாட்களிலும் அமர்வுகள் காலை பத்து மணிக்குத் தொடங்கி மாலை ஐந்து 
மணி வரை நடைபெறும். பரிந்துரைகள் வேண்டப்படும்
சொற்கள் http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods கோப்பில் 
கிடைக்கப் பெறுகின்றன. 

---  நிகழ்ச்சி நிரல்  -
நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் 
பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் 

தேதி: 12/12/2009  13/12/2009

இடம்:  1) CDAC சென்னை, தரமணி
  2) #fedora-tamil at irc.freenode.net 

நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை
-

[1] - https://fedorahosted.org/fuel/  
https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam