Sir,
One of the best postings I read. Though in Tamil, because of the interest in 
the subject matter I read with little strain. 

There is no category like Srardha brahmins. As I read a learnt Vedic person 
must be a Bhoktha. 
Before decades the sasthrikal himself used to sit as Viswam deva in Central 
Kerala area. The Brahmana samooham members themselves  appeared as Bhokthas. 

Now every where sasthrikal arranges bhokthas. He has a list of persons. Mostly 
poor Brahmins. 
For death related functions the bhokthas are a set of Brahmins, their identity 
is known to sasthrikal only. Whether handicapped, having wounds or any other 
deficiencies, the kartha has to adjust. Not much inquiries or talks. 
Gopalakrishnan

    On Friday, 24 May, 2024 at 12:33:18 pm IST, Rama <kaviran...@gmail.com> 
wrote:  
 
 அது ஒரு அழகிய அக்ரஹாரம். சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். கிழக்கில் 
சிவன் கோவில். மேற்கில் பெருமாள் கோவில். வாய்க்காலில் எப்போதும் ஜலம் ஓடிக் 
கொண்டிருக் கும். வயல், விவசாயம்,தென்னை,மாமரங்கள் என ஊரே குளு குளு என இருக்கும். 
பத்து மைலில் திருநெல்வேலி டவுன். நாள், கிழமை, சுவாமி புறப்பாடு, திருநாள். 
எதற்கும் குறைவில்லை. பிரச்சினை இல்லாதபிராமண சமாஜம். அதோ மேற்கில் ஒருஆத்தில், 
சாஸ்திரிகள் பரபரப்பாக இருக்கிறார். வாருங்கள் என்ன என்று பார்ப்போம். கதை 
அங்குதான் தொடங்குகிறது.
சாஸ்திரிகளே, மணிபத்து ஆகிவிட்டது. ஸ்ரார்த்தத்திற்கு ஒரு பிராமணாள் வந்துட்டார். 
மணி மாமா இன்னும் வல்லியே. கர்த்தா பாலு ஐயர் கவலைப் படுகிறார்‌‌.  அவர் அம்மா 
திடீரென கீழே விழுந்து, ஆஸ்பத்திரியில் இருக்காராம். மன்னிச்சுக்குங்கோ வர தோது 
இல்லை அப்படீன்னு சொல்றார். பத்தரைமணிக்கு எந்த பிராமணாள் கிடைப்பா.. இவ்வளவு 
பெரிய அக்ரஹாரத்தில் ஐந்தாறு பேர் தான் பிராமணார்த்தம் சாப்பிட வரா‌. என்ன 
பண்றதுனு ஒண்ணும் புரியலை. வாத்யார்கைகளைப் பிசைகிறார்‌.
மாமா, ஒரு நிமிஷம் கர்த்தாவின் மனைவி வாத்யாரைக் கூப்பிட,சொல்லுங்கோ மாமி 
என்கிறார் வாத்யார் சீனு. நாலு அகம் தள்ளிபுதுசா ஒரு ஃபேமிலி வந்திருக்கா. அவாத்து 
மாமா டெய்லி இந்த டயத்தில் பஞ்ச கச்சம் கட்டிண்டு காரில் ஏறிஎங்கேயோ போறார். 
அவர்கிட்ட வேணா கேட்டுப் பார்க்கலாம்.
"அவரே ஊருக்கு புதுசு.. அவர்கிட்ட எப்படி..." வாத்யார் இழுக்க, " சும்மா 
கேட்டுத்தான் பாருங்கோ..காசா.. பணமா" மாமி உசுப்பி விட வாத்யார் அரை மனதுடன் 
கிளம்புகிறார். 
" மாமா.. மாமா" என வாத்யார் அந்தப் புதியவர் ஆத்தில் கூப்பிட, உள்ளிருந்துபட்டை 
விபூதி, பஞ்ச கச்சத்துடன் அவர் வெளியே வருகிறார்.வாங்கோ..உள்ளே வாங்கோ என வாத்யாரை 
அழைத்துஉட்காரச் சொல்லி சொல்லுங்கோ மாமா..என்ன விஷயம்" எனக் கேட்க" நான் இந்த 
அக்ரஹார வாத்யார். பக்கத்து ஆத்தில் ஸ்ரார்த்தம். திடீரென ஒரு பிராமணாள் வர 
முடியாத சூழ்நிலை. ஸ்ரார்த்தம் தடை படக்கூடாது. அதான் நீங்க பிராமணாள வர 
முடியுமானு கேட்க வந்தேன். நீங்க அக்ரஹாரத்துக்கு புதுசு. தப்பா இருந்தா 
ஷமிக்கணும்‌."
அவர் சற்று யோசித்து விட்டு சிரித்தவாறே நல்ல வேளை. இன்னிக்கு குருவாரம் கார்த்தால 
விரதம். ஒரு நிமிஷம் என்றவாறு உள்ளே செல்கிறார். சற்று நேரத்தில் வெளியே வந்து ஒரு 
மணிக்கு முடிஞ்சுடுமா எனக் கேட்க, வாத்யார் மகிழ்ச்சியுடன் பன்னண்டரைக்கு நீங்க 
கிளம்பிடலாம்என்கிறார். " சரி கிளம்புங்கோ.. நான்'மடி' கட்டிண்டு வரேன்" 
என்கிறார். வாத்யார் மகிழ்ச்சியுடன் சென்று விபரங்களைக் கூற எல்லோருக்கும் பரம 
சந்தோஷம்‌.
வாத்யார் பரபரவென காரியத்தை ஆரம்பிக்க அந்தப் புதியவர் உள்ளே வரவாங்கோ.. வாங்கோ 
ரொம்ப சந்தோஷம். நல்ல நேரத்தில் உபகாரம் பண்ணினேள். என அவரை உபசாரம் பண்ண, பிறகு 
மளமளவென பிராமணாள் சாப்பிட்டு தக்ஷிணை பெற்று ஸ்ரார்த்தம் முடிவடைந்தது. மீண்டும் 
அவருக்கு நன்றி கூற அவர் சொல்கிறார்.
" பிராமணார்த்தம் சாப்பிடுவது பிராமணனின் கடமை. முடிந்தவரை மாட்டேன் என 
சொல்லக்கூடாது. இது ரொம்ப புண்ணியம். எல்லா பித்ருக்கள் ஆசிகளும் கிடைக்கும். இதை 
மகா பெரியவா பலமுறை சொல்லி இருக்கா..ஆனா ரொம்ப பேர் இதுக்கு வரதில்லை. அது ரொம்ப 
பாவம். உங்கஆத்துக்கு மட்டும் வரணும்னு நினைக்கிறேள். ஆனா நீங்க மட்டும் போக 
மாட்டேன்னு சொன்னா அது நியாயமா?  என்கிறார்.
பிறகு இங்கு பிராமண சமாஜம் இருக்கா எனக் கேட்க வாத்யார் இருக்கே நான்தான் 
செக்ரட்டரி" எனக் கூற, அந்தப் புதியவர் தனக்கு தரப் பட்ட தட்சணையுடன் கூட ஐநூறு 
ரூபாய் கொடுத்து "இதை என்பங்காக வச்சுக்குங்கோ" என்றவாறு " போய்ட்டு வரேன்"  என 
கைகூப்பி விடைபெறுகிறார்.
வாத்யார், " மாமா..ஒரு நிமிஷம்.. நீங்க யாரு..என்ன உத்யோகம் என சொல்லலையே" எனக் 
கேட்க, அவர் சிரித்தவாறே *நான் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்" என்கிறார்.*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to iyer123+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/iyer123/CAKaWjR%3Djz0K5aSY%2B27RaZBfCdneCPk5Ek0n7R8xXUmHcxvdtoQ%40mail.gmail.com.
  

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/656882551.2539229.1716556123858%40mail.yahoo.com.

Reply via email to