-------- Original Message --------
Subject: Re:[உபுண்டு_தமிழ்]அடுத்த உபுண்டுவின் Firefox இல் pango இயல்பிருப்பில்?
From: ஆமாச்சு <[EMAIL PROTECTED]>
To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com
Date: Mon Sep 10 2007 21:22:51 GMT+0530 (IST)
> On Monday 10 Sep 2007 7:38:34 pm M.Mauran | மு.மயூரன் wrote:
>   
>> firefox 3.0 இல்  முற்றுமுழுதாகவே பாங்கோ வினை
>> இயல்பிருப்பாக்கப்போகிறார்கள். இந்தப்பிரச்சினை எல்லாம் firefox 2 இருக்கும்
>> வரைதான்.
>>     
>
> கான்கொயரரின் துள்ளியமும் கவனத்தில் கொள்ளத் தக்கது. 
>
> நிறுவும் போது தமிழை முதன் மொழியாகக் கொண்டு நிறுவினீர்களா?
>
>   

கான்கரருக்கும் ஏனைய  Qt சார் செயலிகளுக்கும் சிக்கல் எழுத்துக்கள் உருவாக்கி 
(renderer) ஆனது Qt ஆகும்.  ஓபன் ஆபிசுக்கு அது libicu.  ஏனைய எல்லா GTK சார்  
செயலிக்களுக்கும் அது பாங்கோ வாகும்.

இதுவரை நான் பார்த்துள்ள பாங்கோ வெளியீடுகள் தமிழ் உருவாக்குவதில்  ஒரு வழு 
நீக்கப்படாமலே வந்துள்ளன. ஜி-எடிட், பயர்யாகஸ் போன்ற  gtk சார் செயலிகளில் ஆய்த 
எழுத்தை 
( ஃ ) தனியாகவோ அல்லது ஒரு சொல்லின்  முதலாகவோ  இடுகையில் ஆய்தத்தின் முன் புள்ளி 
வட்டம் உள்ளதாகக் காண்பிக்கப்படுவதே அவ்வழு.  TSCu-Paranar/Times/Comic  ஆகிய  
எழுத்துருக்கள்  புள்ளி வட்டங்களை எங்கும் காணபிப்பதில்லை. எனவே பாங்கோவின் 
இவ்வழுவைப் 
பார்க்க அவை தவிர்ந்த வேறு எழுத்துரு பாவியுங்கள்.

பைஸ்டியில்  ஓபன் ஆபிசு, கான்கரர்  போன்றவைகளில் ஆய்த எழுத்தை தனியாக இட்டுப் 
பாருங்கள். 
புள்ளி வட்டம் வரா. அதாவது Qt, libicu  உருவாக்கிகள் பயன்படுத்தும் இடங்களில் 
அவ்வழு  
இல்லை. பாங்கோ  பயன்படுத்தும் செயலிகளில் தான் உள்ளது.

ஒருங்குறி கட்டகத்தில் தனியாக உள்ளிடுகையில் புள்ளி வட்டம் காட்ட  வேண்டிய 
எழுத்துக்கள் 
எவையெனில் அவை தம் முன் வந்துள்ள எழுத்துடன் சேர்வது அவசியம் என்பனவைகளாகும். 
தமிழில் 
உயிரொலிகள் (glyphs) அவ்வாறனவை. ( ா, ி, ீ, ெ, ே ை, ......)

ஆய்த எழுத்து உயிரோ மெய்யோ அல்லாத தனி எழுத்து. ஒரு உயிரொலி போல அதை 
நடைமுறைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

விண்டோவில் ஆரம்பத்தில் (win2000, win XP -SP1) வந்த uniscribe களாலும் அவ்வழு 
காணப்பட்டதையும் microsoft க்கு தான் சுட்டிக் காட்டி அதன் பின் வந்த 
மேம்பாடுகளுக்கு 
அவர்கள் அவ் வழுவை அகற்ற உள்ளதாகவும் சின்னத்துரை சிறீவாஸ் ஒரு இடத்தில் 
குறிப்பிட்டிருந்தார் (அவரது www.araichchi.net இனுள்). பின்னர் வந்த XP-SP2, 
Vista 
களில் அவ்வழு இல்லை.

மயூரன் புதிதாகச் சோதிக்கும் உபுண்டுவிலுள்ள பாங்கோவினாலும் இவ் வழு 
காணப்படுகின்றதா?

~சேது
 









-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க