2009/12/30 Yogesh <yogeshg1...@gmail.com>: > [..] > நான் IBUS க்கு புதிது. தமிழில் தட்டச்சு தெரியாது. ஆங்கிலத்தில் மொழிமருவல் > (transliteration ) செய்து தான் தமிழில் கோப்புகளை உருவாக்கி இருக்கிறேன். > ITRANS இல் சில எழுத்துக்கள் வருவதில்லை . ITRANS க்கு கீபோர்ட்டு மேப் உள்ளதா > ? எதை தட்டினால் என்ன எழுத்து வரும் என்று தெரிந்தால் போதும். நான் > சமாளித்துக்கொள்வேன். > -- > நன்றி, > யோகேஷ்.
தாங்கள் முயற்சிக்கும் ta-phonetic மற்றும் ta-itrans எனப் பெயர்கள் காட்டும் விசைமாற்றிகள் இரண்டும் ஏனைய "ta-" தொடங்கும் தமிழ் விசைமாற்றிகள் எல்லாம் m17n எனும் உள்ளிடல் முறைமைப் பொறி (Input Method Engine - IME) இல் உள்ள பல்வேறு மொழிகளுக்கான விசைமாற்றிகளில் உள்ளடங்குபவன்ன. m17n ஐ தற்கால லினக்சு வினியோகங்களில் இயக்குவது ibus, scim மற்றும் uim எனும் 3 உள்ளிடல் முறைமை கட்டமைப்பு (Input Method Frameworks) களில் ஒன்றால் - தாங்கள் பயன்படுத்துவது ibus. (m17n சுயமாக இயங்கக் கூடியது mlterm எனும் முனையத்திலும் e-macs எனும் உரைவடிவ இடைமுகப்பு ( Textual User Interfac - TUI) உடனான உரைதிருத்தி செயலியிலும். அவற்றில் தமிழ் மற்றும் ஏனைய தெற்காசிய சிக்கல் வரியுருக்கள் உருவமாக்கலுக்குத் துணை இல்லாதலால் அவற்றில் தமிழ் உள்ளிட்டும் பயனில்லை என்பது வேறு விடயம்) தங்களைப் போல புதுப் பயனர்களின் தேவைகளுக்கு துணையாக வழிகாட்டும் வகையில் தொடர்பான விசைமாற்றிகளின் தளக்கோள உருவங்களை (Keyboard Layout) யாராவது ஆக்கி வெளியிட வேண்டும் தான். தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய் மற்றும் உயிர் எழுத்துக்கள் என்பனவற்றிற்காக map செய்யப்படும் ஆங்கில விசைகள் அல்லது விசைத்தொடர்களை அறியலாம். பின்வரும் கோப்புக்களைத் திறந்து பார்க்கவும் (உபுண்டுகளில் உள்ளவாறு): /usr/share/m17n/ta-itrans.mim /usr/share/m17n/ta-phonetic.mim கோப்புகளின் பெயர்களில் இருந்து அவை எந்தெந்த விசைமாற்றிகளுக்கானவை என்பதையும் அவதானித்துக் கொள்ளுங்கள். ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam