வழு இருப்பதை உடனடியாக உறுதி செய்தமைக்கு திரு வாசுதேவன் அவர்களுக்கும் அதைக் குறித்து பரந்த அளவில் முழுமையான ஆய்வுகளைச் செய்து அனைவருக்கும் நிலைமையை விளக்கியுள்ள திரு சேது அவர்களுக்கும் மிக்க நன்றி! சிக்கலை சேது அவர்கள் துல்லியமாக வரையறுத்துள்ளார்.
நான் பெரும்பாலும் (by default) Lohit Tamil எழுத்துருவைத்தான் பயன்படுத்துகிறேன். ஆனால், அதன் எழுத்துகள் நேராக உள்ளன. TSCu_Times-இல் எழுத்துகள் சற்றே சாய்வாக இருப்பதால் அவை படிப்போருக்கு எளிதாக இருக்கும் என்று வெளியீட்டக நண்பர்களிடமிருந்து சென்ற ஆண்டு அறிந்தேன். அப்போது ஒரு முறை அந்த எழுத்துருவைப் பயன்படுத்தினேன். அப்போது இச்சிக்கல் நேரவில்லை. அதனால்தான் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் TSCu_Times பக்கம் மீண்டும் திரும்பினேன். இப்போது இந்தச் சிக்கல் உள்ளது. Akshar என்ற எழுத்துருவும் சாய்வெழுத்துகளைக் கொண்டது என்று தேடி அறிந்தேன். ஆனால், அதில் இரண்டு "சிக்கல்கள்" உள்ளன: (அ) எழுத்துகள் அழுத்தமாக உள்ளன (the characters appear darker even in their plain form), (ஆ) வரிக்கு வரி இடைவெளி மிக அதிகமாக உள்ளது. (இதைக் குறைக்க முடியும்; proportional spacing-ஐப் பயன்படுத்தி. ஆனாலும் இந்தத் தீர்வு அவ்வளவு நல்ல தீர்வாக எனக்குத் தெரியவில்லை.) -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam