On Monday 16 January 2012 09:27 PM, Barneedhar wrote:
1. புது உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களுக்கு சில வழிமுறைகளைக் கொண்டு வரவேண்டும். உதாரணத்திற்கு, மொழிப்பெயர்த்தலால், கர்ம புள்ளிகள் 200-யையாவது கொண்டிருக்க வேண்டும், போன்றவை.

களப்பணிகளுக்கு கர்ம புள்ளிகள் சான்றாகா. அவற்றை மட்டும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

2. ஒரு பொது வழிக்காட்டி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நான் தற்பொழுது இந்த பக்கத்தை http://goo.gl/fdanZ தயார் செய்ய முயற்சித்து வருகிறேன்.

https://wiki.ubuntu.com/TamilTeam


3. இணையத்தளத் தொடர் அரட்டை அரங்கத்திலும், உபுண்டு கருத்துக்களத்திலும் யாரவது எப்பொழுதும் இருக்க வேண்டும். புதியவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.

நமக்கு #ubuntu-tam என்ற IRC அரங்கம் உண்டு. நான் பொறுப்பு வகித்த வரையில் வாரந்தோறும் அவ்விடத்தே கூடுதல்களை ஒருங்கிணைத்துண்டு.

4. முக்கியமாக, குழுவின் தலைவர் மிகவும் ஈடுப்பாட்டுடன் இருப்பது முக்கியம் என்று கருதுகிறேன். தற்பொழுது, ஆமாச்சு மிகவும் வேலையாக இருப்பதாக பத்மநாதன் என்னிடம் தெரிவித்தார். அதனால், ஆமாச்சுவிற்கு விருப்பம் இருந்தால், என்னை அடுத்த தலைவராக தேர்வுச் செய்யுமாறு வேண்டுக்கோள் விடுக்கிறேன். அதற்கான விவரங்கள் இங்கே: https://wiki.ubuntu.com/Translations/KnowledgeBase/RoleReassignmentPolicycy


எனக்கடுத்தது தங்கமணி அருண் இருந்தார். தற்போது ஜப்பானில் இருப்பதால் பொறுப்பு நாகராஜிடம் இருக்கிறது.

லாஞ்சுபேட் நிர்வாகப் பொறுப்பு என்னுடையதும் தி. வாசுதேவனுடையதும். ஏனைய திட்டங்கள் சிலவும் இணைந்துள்ளமையால்.

முதன்மைப் பொறுப்பாளர் தமிழகத்தில் இருப்பராக இருத்தல் வேண்டும். வட்டுக்கள் பெறுவது, களத்தில் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள அதுவே நல்லது.

நாகுவிடம் பொறுப்பு மாற்றம் குறித்து பேசுகிறேன். முன்னர் மாததந்தோறும் கூடுதல் நடத்தி வந்தேன். விரைவில் மீண்டும் தொடங்க உத்தேசித்துள்ளேன்.

இலங்கையிலிருந்து முன்னர் ஹலீம் இருந்தார். தாங்கள் சிங்கையிலிருந்து பொறுப்பு வகிக்கலாம். நாம் இணைந்து பணியாற்றலாம்.

--

ஆமாச்சு








--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க