-------- Forwarded Message --------
From: Tirumurti Vasudevan <agnih...@gmail.com>
----
----
Subject: Re: சென்னை - மின் பதிப்பாக்க பணிக் குழு (ஸ்ரீ மோகனரங்கன் நூல்
சேகரம்)
Date: Wed, 4 Mar 2009 12:13:05 +0530

2009/3/4 Subashini Tremmel 
        தேனீயார் மற்றும் சந்திரா அனுப்பிய படங்கள் கிடைத்தன. நிகழ்ச்சி
        பற்றிய உங்கள் எண்ணங்களையும் மின் தமிழில் பகிர்ந்து கொள்ளலாமே!

பயணமும் என் உடலும் ஒத்துக்கொள்வதில்லை போலிருக்கிறது.  இரண்டு நாட்கள்
சுரத்தில் படுத்து எழுந்தேன். அதனால் முன்னமேயே பகிர்ந்துகொள்ள
முடியவில்லை.

நிகழ்ச்சி சரியாக 11 மணிக்கு துவங்கிவிட்டது. வளாகத்தில் இடம் கண்டு
பிடிக்க சிரமப்பட்டு சிலர் தாமதம்.
பச்சையப்பன் கல்லூரி ஆண்டவர் தன் மாணவ மாணவியரை (8 பேர்)அழைத்து வந்து
இருந்தார். பெயர்கள் சந்திராவிடம் உள்ளது என நினைக்கிறேன்.
சந்திரா சரியாக 10 -59 க்கு வந்தார்! ஓகை நடராசன் அவருடன். மேலும் தேனீ,
யுவராஜ் தேவ் வந்தார்கள்.
அமாச்சுவுக்கு திடீர் வேலை வந்துவிட்டதால் பொறுப்பாக முன்னாலேயே போய்
மடிக்கணினி ப்ரொஜெக்டர் எல்லாவற்றையும் அமைத்து தயாராக வைத்துவிட்டு
என்னிடம் தெரிவித்துவிட்டு போய்விட்டார். நிகழ்ச்சியின் பின் பகுதியில்
சேர்ந்து கொண்டார்.

வந்திருந்த மாணவ மாணவியர் தமிழ்தாய் வாத்து பாட நிகழ்ச்சி துவங்கியது.
முதலில் சுய அறிமுகம். பின் சந்திராவின் சிறு தொடக்க உரை.
அடுத்து ஏன் மின்னாக்கம் என்று பேச்சு தொடங்கி செயல் முறையில் முடிந்தது. 
மின்னாக்கத்துக்கு உதவும் பெட்டி (மேஜிக் பாக்ஸ்!) செய்து காட்டப்பட்டது.
அனைவரும் காமிராவை எப்படி கையாளுவது என்று செய்து பார்த்து புரிந்து
கொண்டனர்.
சந்தடி சாக்கில் ஒரு சிறு புத்தகம் 30 பக்கங்கள் மின்னாக்கப்பட்டது. அது
தவிர ஹரி வம்சம் என்ற புத்தகம் பல பக்கங்கள் மின்னாக்கப்பட்டன.
பின்னர் அவற்றை மடிக்கணினிக்கு மாற்றி அந்த படங்கள் ப்ரொஜக்டர் மூலம்
எவ்வளவு தெளிவாக வந்து உள்ளன என்பது காட்டப்பட்டது.

சுமார் 1 மணிக்கு முடிக்க உத்தேசித்து இருந்தது. அதனால் கணினி ப்ராஸஸிங்
மிக விரிவாக காட்டப்படவில்லை. கருப்பு வெள்ளை ஆக்கலாம், படத்தை
நிமிர்த்தலாம் என்பவை மட்டுமே மனதில் பதிய வைக்கப்பட்டது.
சுமார் 1 மணி 30 நிமிடத்துக்கு நிகழ்ச்சி முடிவுற்றது.

வந்தவர்களுக்கு அறிவுப்பசிக்கு உணவு கிடைத்ததே தவிர வயிற்றூக்கு கொடுக்க
சிந்தனையோ, அது வந்த போது வாய்ப்போ இல்லாமல் போயிற்று. குழந்தைகள்
அம்பத்தூர் முகப்பேர் என்று நெடுந்தூரத்தில் இருந்து வந்து இருந்தனர்.

ஆண்டவர் பச்சையப்பன் கல்லூரியில் இருந்த பல   புத்தகங்கள் இட மாற்றம்
செய்கையில் சரியான கருத்தின்றி செய்ததால் அழிந்து போனதாக தெரிவித்தார்.

அடுத்து கல்லூரி கல்லூரியாக இந்த விஷயத்தை கொண்டு போகலாம் போல் இருக்கிறது.
வேறு எங்கும் இட வசதியோ ஆர்வலர்களோ அமைவது கடினம் என்று தோன்றுகிறது.

தேனீ பெட்டி சமாசாரத்தை கவனித்து இன்னும் மேம்படுத்தப் போவதாக சொல்லி
இருக்கிறார்! தேர்தல் வருகிறது. எந்த பெட்டி என்று சொல்லவில்லை! :-)

அன்புடன்
திவா
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to