2009/3/5 இராமதாசன் <ramada...@amachu.net>:
> On வி, 2009-03-05 at 10:04 +0530, Mano wrote:
> ஐயா
>
> நெறையா பேரு போன் செய்து இன்டர்நெட் கணக்ட் ஆகல என்ன செய்யறது, பாட்டுக்
> கேக்க முடியல என்ன செய்யறது? இன்னும் எவ்வளோவோ கேள்வியெல்லாம் கேக்கறாங்க..
> அங்கே எந்த மொழிங்கறது கேக்காமலேயே புரிஞ்சு கொள்ள முடியுது..
>
> அதே தான் இங்கையும்.. சிறப்பான காரணம் எல்லாம் இல்லை. இயல்பு அவ்ளோதான்..
>
> இதுல அப்படி கேக்கணும் - சப்ஜட் இப்படி இருக்கணும் - ஆங்கிலத்தில் சரியா
> வெளிப்படுத்த முடியாம தமிழ்ல கேக்கறவன்கிட்ட மொழிபெயர்க்கலைனா விட்டேனா
> பார், நீ மத்தவன் மனசெல்லாம் புண்படுத்தறனெல்லாம் சவடால் விட்டா அதுதான
> விகாரமா இருக்கு..
>
> மத்தபடி தொடர்ந்து மடல்களை எதிர்பாருங்க.. அது தமிழில் இருக்கலாம் என்பது
> இயல்பான ஒன்று..
>
> ;-)
>

ஐயா இராமதாசன் அவர்களே,

இந்த அஞ்சல் வரிசையில் எல்லோரும் கல்ந்தாலோசித்து முடிவு செய்ததுதான்
சப்ஜெக்டில் 'Tamil' என்று இணைக்க வேண்டும் என்ற வறைமுறை. அந்த வறைமுறை
உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் பெரும்பான்மையின் கருத்துக்கு
மதிப்பளித்து உடன்படுவதுதான் ஜனனாயக முறை.  இந்த சிறிய வறைமுறையை நீங்கள்
கடைபிடிக்க பிடிவாதமாக‌ மறுப்பது 'இயல்பாக' எனக்கு படவில்லை.
விகாரமாகத்தான் தோண்றுகிரது.

உங்கள் கருத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மட்டுமின்றி
மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசினேன். ஆனால்
நீங்களோ, 'எனது கருத்துக்களை அறிய விரும்பும் மற்றவர்கள் வேன்டுமானால்
தமிழ்
கற்றுகொள்ளட்டும்' என்ற நிலைப்பாட்டில் உள்ளீர்கள்!  'எனது கருத்துக்களை
கேட்க யாரேனும் உள்ளார்களா?' என்று ஆவலுடன் எல்லோரும் எதிபார்க்கும்
காலகட்டத்தில் உங்கள் நிலைபாடு விந்தையாக உள்ளது! இதனால் நஷ்டபடுவது
நீங்கள்தான்.

மனோ


Translation:

Mr. Ramdas,

After much discussion in this list it was agreed that the word 'TAMIL'
would be appended in the subject, if the post was in Tamil. Even if
you do not accept that as the right solution, it is expected that you
will follow it. Thats the democratic way! Your stubborn refusal to do
so cannot be construed as 'natural'. To me it only seems
subversive/defiant.

I was trying to convince you that your views should reach as many
people as possible. But you are of the opinion that those who want to
know your views should learn tamil! In a world where everyone is
eagerly looking for people who will give them their attention, your
attitude is strange. The loss is yours.

mano
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to